உங்களது மலம் மிதக்கிறதா? அல்லது நீரில் மூழ்குகிறதா? இது தான் ரகசியம் !

0

மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும் போது அதனை செய்யாமல் அடக்குவது, காலம் தாழ்த்துவதால் குடல் புற்றுநோய், செரிமான மண்டலத்தில் சிறிய மற்றும் பெரிதளவிலான புடைப்புகள் ஏற்படுவது, 

உங்களது மலம் மிதக்கிறதா? அல்லது நீரில் மூழ்குகிறதா? இது தான் ரகசியம் !
மூலநோய், ஆசன வாயிலிருந்து நீர் வெளியேறுதல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். மலம் கழிப்பதை சிறிது நேரம் அடக்கும் போது அந்த உந்துதல் தற்காலிகமாக நீங்கி விடும். 

ஆனால், நீண்ட நேரத்திற்கு மலத்தை அடக்குவது பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் நாம் கழிக்கும் மலம் கழிவறை நீரில் மூழ்காமல் நீரின் மேற் பரப்பிலேயே மிதக்கும். 

அப்படி நடந்தால், அது உங்கள் செரிமான அமைப்பில் ஏதேனும் பிரச்னை இருப்பதைக் குறிப்பதாகும் என்ற அறிவியல் உண்மை சமீபத்தில் கண்டறியப் பட்டுள்ளது.

சிகரெட் புகையை விட ஆபத்தானது ஊதுவர்த்தி புகை !

உங்களது கழிவு மிதக்கிறதா அல்லது கழிவறை நீரில் மூழ்குகிறதா?

எப்போதாவது கழிவு மிதப்பதற்கு, அதிலிருக்கும் கொழுப்பு அளவுகள் காரணம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது. 

ஆனால் 1970களின் முற்பகுதியில் மின்னசோட்டா பல்கலைக் கழகத்தில் இரண்டு இரைப்பைக் குடலியல் நிபுணர்கள் அதிக நேரம் செலவிட்டு, தொடர்ச்சியான சோதனைகள் மூலம் இதைக் கண்டறிய முடிவு செய்தனர்.

இந்தச் சோதனைகளில் 39 தன்னார்வலர்களின் மலத்தை மற்றும் நிபுணர்களின் சொந்தக் கழிவுகளில் சிலவற்றையும் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்திய பிறகு, அவர்கள் சொன்ன பதில், அது கொழுப்பு அல்ல, வாயு என்பது தான்.

இன்னும் துல்லியமாகச் சொன்னால், மலத்தில் காணப்படும் வாயுவின் அளவுகளைப் பொறுத்து, கழிவு மேற்பரப்பில் மிதக்கும் அல்லது சில நேரங்களில் மூழ்கவும் கூடும். 

உங்களது மலம் மிதக்கிறதா? அல்லது நீரில் மூழ்குகிறதா? இது தான் ரகசியம் !

மிதக்கும் கழிவுகளில் உள்ள வாயுவை வெளியேற்றினால், அவை மூழ்கி விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வித்தியாசத்திற்கான காரணம், அதிகப் படியான மீத்தேன் உற்பத்தி தான் என்று அவர்கள் முடிவு செய்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அதிகப் படியான வாய்வு.

ஹோட்டல்களில் நடக்கும் தவறான செயல்.. எச்சரிக்கை !

நீர், பாக்டீரியா, நைட்ரஜன் பொருட்கள், கார்போ ஹைட்ரேட், செரிக்கப்படாத தாவரப் பொருட்கள் மற்றும் கொழுப்புகள் அடங்கிய சுமார் ஆறு டன் மலத்தை  நம் வாழ்நாளில் உற்பத்தி செய்கிறோம். 

இந்தக் கலவை நீண்ட நேரம் நம் உடலில் தங்கினால், உள்ளுக்குள் நொதித்தல் நிகழ்கிறது. இது வாயுவை மட்டும் ஏற்படுத்தாமல், வளர்சிதை மாற்ற ரசாயனங்களையும் உருவாக்குகிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)