தெற்காசிய நாடொன்றின் விநோத பழக்கம்.. மகள்களை திருமணம் செய்வது !

1

மனித இனத்தை பொறுத்த வரையில் திருமணம் என்பது வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அடிப்படையாக கொண்டிருந்தாலும், தந்தை மகள், சகோதர, சகோதரிகள் இடையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பெரும்பாலும் இல்லை.

தெற்காசிய நாடொன்றின் விநோத பழக்கம்.. மகள்களை திருமணம் செய்வது !
ஒரே ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்யும் பட்சத்தில், ஆரோக்கியமற்ற குழந்தைகள் பிறக்கும் என்ற அறிவியல் பூர்வமான உண்மை ஒரு பக்கம். 

அதே சமயம் பாலுணர்வு ஈர்ப்புகளை கடந்து பாசத்திலும், நேசத்திலும் கட்டமைக்கப்பட்ட உறவுகளுக்கு இடையே திருமணம் செய்யக்கூடாது என்ற பாரம்பரிய கட்டுப்பாடு உலகெங்கிலும் காணப்படுகிறது.

விசித்திரமாக சகோதர, சகோதரிகள் இடையேயும், தந்தை மற்றும் மகள் இடையேயும் திருமண பந்தம் ஏற்படுகின்ற நிகழ்வுகள் ஆங்காங்கே எப்போதாவது நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 

குத்தாட்டம் போட்டபடி மேடைக்கு வந்த கல்யாண பெண் - ஷாக்கான மாப்பிள்ளை !

அதிலும் ஒரு பெண்ணின் மரபு வழி தந்தை வேறொருவர் என்றால், அந்த வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் சில தந்தையர்களிடம் இருக்கிறது. 

மேலும், உறவினர்களிடையே திருமணம் செய்தால் ஆரோக்கியமற்ற குழந்தைகள் பிறக்கும் என்ற அறிவியல் ஒருபக்கம் இருந்தாலும், உறவுகளுக்கு இடையே திருமணம் செய்யக்கூடாது என்று பரவலாக காணப்படுகிறது.

வங்கதேசத்திலும் இப்படி ஒரு வினோத பழக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பழங்குடியினம் இருக்கிறது. 

ஆனால், இந்த நாட்டில் மட்டும் மகள், தந்தையிடையே திருமணம் செய்யப்படுகிறது. வங்கதேசத்தில் உள்ள மண்டி இன பழங்குடி மக்கள் இந்த விசித்திரமான பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். 

இவர்கள், மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகள் ஆகியவற்றை பொறுத்தவரை பிற மக்களிடமிருந்து தனித்துவமாக தான் இருக்கின்றனர்.

இந்த இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை இழந்து கைம்பெண்ணாக மாறினால், அந்த இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரை மறுமணம் செய்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

தெற்காசிய நாடொன்றின் விநோத பழக்கம்.. மகள்களை திருமணம் செய்வது !

அப்போது, அந்த பெண்ணுக்கு மகள் இருந்தால் அந்த குழந்தையை அவர்கள் மகளாக கருதுவதில்லை. மாறாக, அந்த பெண் பருவம் எய்தியதும் அவரையும் சேர்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். 

இதற்கு சம்மதித்தால் மட்டுமே பெண் குழந்தையுடன் கூடிய கைம்பெண்களை ஆண்கள் திருமணம் செய்வார்கள்.

நாக்கு வறண்டு போனால் செய்ய வேண்டிய எளிய வைத்தியம் !

அதாவது, பெண் குழந்தைக்கும் சேர்த்து வாழ்க்கை உத்தரவாதத்தை ஆண்கள் கொடுப்பதால் இந்த திருமணங்களை மண்டி பழங்குடியினர் ஏற்றுக் கொள்கின்றனர்.

தற்போது, இந்த இனத்தைச் சேர்ந்த ஓரோலா என்ற பெண்ணின் திருமணம் நடைபெற்றது. இவரின் தந்தை இறந்த பிறகு, தாயை திருமணம் செய்த நபர் இந்த பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. ENNA PAZHAKKAM DA ITHU... KANRAAVI
    MUTTAA PAYALUGA

    ReplyDelete
Post a Comment