உங்களுக்கு வந்திருப்பது மாரடைப்பா அல்லது பயமா? வித்தியாசம் என்ன?

0

பீதி தாக்குதலால் ஏற்படக் கூடிய நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பும் திடீரென ஒருவரை தாக்கக் கூடியவை. இவை இரண்டின் அறிகுறிகளும் கூட ஒரேப்போன்று தான் இருக்கும்.

உங்களுக்கு வந்திருப்பது மாரடைப்பா அல்லது பயமா? வித்தியாசம் என்ன?
மாரடைப்பு என்பது உயிரையே பறிக்கக்கூடிய நோயாகும். இது ஒருவரை எப்போதும் தாக்கும் என உறுதியாக கூற முடியாது. அதே சமயத்தில் சிலருக்கு பயத்தால் நெஞ்சு வலி உண்டாகும். 

இதனை பீதி தாக்குதல் (பேனிக் அட்டாக்) என அழைக்கிறார்கள். பீதி தாக்குதலுக்கும் மாரடைப்பிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அது என்னவென்று இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் பச்சை குத்துவது சரியா?

பீதி தாக்குதலா அல்லது மாரடைப்பா? பீதி தாக்குதலால் ஏற்படக் கூடிய நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பும் திடீரென ஒருவரை தாக்கக் கூடியவை. இவை இரண்டின் அறிகுறிகளும் கூட ஒரேப்போன்று தான் இருக்கும். 

இதனால் பலருக்கும் நமக்கு வந்திருப்பது பீதி தாக்குதலா அல்லது மாரடைப்பா என குழப்பம் உண்டாகும். 

இரண்டிற்குமே உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம் என்றாலும், இது குறித்து தெளிவாக தெரிந்து கொண்டால் உங்களுக்கு பல வகையிலும் உதவியாக இருக்கும்.

அது மட்டுமின்றி, உங்களுக்கு வந்திருப்பது மாரடைப்பு என்றால், உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் 

அதே சமயம்  உங்களுக்கு வந்திருப்பது பீதி தாகுதல் தான் என்றாலும் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஆகையால் இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இந்த கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டிற்கும் உள்ள பொதுவான அறிகுறிகள் : 

பீதி தாக்குதலாக இருந்தாலும் சரி, மாரடைப்பாக இருந்தாலும் நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், வியர்வை, பய உணர்வு போன்றவை இவை இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகளாகும்.

இரண்டிற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் : 

இரண்டிற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்ன வென்றால், பீதி தாக்குதல் எந்த சமயத்திலும் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். 

நீங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கும் போதோ பீதி தாக்குதல் உண்டாகி உங்களை விழிபடைய வைக்கும்.

(getCard) #type=(post) #title=(You might Like)

அதே சமயத்தில், மாரடைப்பு என்பது நீங்கள் ஏதாவது உடல் உழைப்பு செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வரக்கூடும். மாரடைப்பு ஏற்படும் போது உங்கள் மார்பில் மட்டும் வலி உண்டவதில்லை. 

பலருக்கும் அவர்களது கை, கழுத்து, தாடைப் பகுதிகள் வரை வலி ஏற்படும். பீதி தாக்குதலின் போது, வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். ஆனால், மாரடைப்பின் போது வலி குறையாது.

மருத்துவ சிகிச்சையை நாடுதல் : உங்களுக்கு வந்திருபது பீதி தாக்குதலா அல்லது மாரடைப்பா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை என்றால், 

உடனடியாக மருத்துவமணை சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். ஒருபோதும் அறிகுறிகளை கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள்.

பீதி தாக்குதலை எப்படி கையாள்வது? உங்களுக்கு பீதி தாக்குதல் ஏற்பட்டால் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதோடு உங்கள் மன அழுத்தத்தை போக்க கூடிய சிந்தனைகளில் கவனம் செலுத்துங்கள். 

நீங்கள் சிறந்ததாக இருக்கக் கூடிய அல்லது உங்களுக்கு பிடித்த மூன்று விஷயங்களை எழுதி, அதில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். எதிர் மறையான சிந்தனைகளுக்கு கவனம் கொடுப்பதற்கு பதிலாக நேர்மறையான விஷயங்களை பற்றி சிந்தியுங்கள்.

மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? 

ஒரு வேளை உங்களுக்கு வந்திருப்பது மாரடைப்பு என்றால், உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமணை செல்லுங்கள். ஆம்புலன்ஸ் அல்லது எமர்ஜென்சி மருத்துவ உதவி கிடைக்கும் வரை ஆஸ்ப்ரின் மாத்திரையை வாயில் போட்டு மெல்லுங்கள். 

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் குறைக்க ! 

இந்த மாத்திரையை சாப்பிடுவதால் ரத்தம் உறைவது தடுக்கப்படும். மேலும் மாரடைப்பின் போது இதயம் பாதிக்கப் படுவதை இது குறைக்கிறது. 

உங்களுக்கு ஒவ்வாமை இருந்தாலோ அல்லது மருத்துவர் சாப்பிடக் கூடாது என்று கூறியிருந்தாலோ ஆஸ்ப்ரின் மாத்திரையை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings