இஸ்லாத்தின் பார்வையில் பச்சை குத்துவது சரியா?

0

சில பெண்கள் தன் அழகை மெருகூட்டுவதற்காக தன் உடம்பின் சில பாகங்களில் உருவங்களையோ அல்லது தமக்கு விருப்பத்துக் குரியவர்களின் பெயர்களையோ 

இஸ்லாத்தின் பார்வையில் பச்சை குத்துவது சரியா?
( அவளின் நேசத்திற்குரிய நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற இவ்வாறான பிரபல்யமானவர்களின் பெயர்களை ) பொறித்து பச்சை குத்துகின்றனர். 

இவ்வலங்காரம் இஸ்லாமிய வரையறைக்கு அப்பாற்பட்டதாகும். ஏனென்றால் மார்க்கத்திலே ஓரு உறுப்பை நோவினை செய்வதென்பது தடுக்கப்பட்ட ஓரு செயலாகும். 

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் ! 

அது ஓரு வணக்க வழிபாட்டிற்காக இருந்தாலும் சரியே இதனை புஹாரியில் பதிவாகியுள்ள அபூ தர்தாரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சம்பவம் தெளிவு படுத்துகின்றது. 

அதாவது அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரின் ஆத்மாவிற்குரிய மற்றும் அவரைச் சூழவுள்ளவைகளுக்குரிய உரிமைகளையும் பேணாது இறைவனை நெருங்குவதற்காக இரவு முழுதாக வணக்கத்தில் ஈடுபட்டார். 

அச்சமயம் அவருடன் இருந்த மற்றொரு ஸஹாபியான சல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். 

உன் இரட்சகனான அல்லாஹ்வுக்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளன, இன்னும் உன் குடும்பத்தினருக்கும் உன்னிடம் சில உரிமைகள் உள்ளன. 

எனவே, ஒவ்வொரு உரிமைகளையும் அதன் உரியவர்களுக்கு வழங்கி விடுவீர்களாக எனக் கூறினார். 

அப்போது இது நபியவர்களிடத்தில் எத்தி வைக்கப்பட்ட போது நபியவர்கள் சல்மான் உண்மை கூறி விட்டார் என பதிலளித்தார்கள். 

இன்னும் இச்செயலில் ஈடுபடும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தும் உள்ளார்கள். 

இதனை புகாரிக் கிரந்தத்தில் பதிவாகியுள்ள கீழ்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது. அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். 

தன் தலைமுடியுடன் ஒட்டு முடியை சேர்க்குமாறு வேண்டும் பெண்னையும், இன்னும் தன் உடலில் பச்சை குத்துவதன் மூலம் அடையாளமிட வேண்டும் என்கின்ற பெண்களையும் நபியவர்கள் சபித்துள்ளார்கள். 

இன்னும் மார்க்க அறிஞர்கள் சிலர் இது பற்றி கூறுகையில் பச்சை குத்தப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அவ்விடம் அசுத்தமாக ஆகி விடுகின்றது. 

மூட்டு வலி, முழங்கால் வலி நீங்க மருத்துவம் !

ஆகையால் பச்சை குத்தியவர் அவ்விடத்திலிருந்து எந்தவொரு பாதிப்பையோ அல்லது அவ்வுறுப்பின் பிரயோசனத்தை இழந்து விடுவாரோ 

என ஐயப்படாத பட்சத்தில் பச்சை குத்தப்பட்ட இடத்தை காயப்படுத்தியேனும் அழிப்பது அவர் மீது கடமையாகும். 

அவ்வாறு அவர் பயப்படுவாரானால் அதைக் காயப்படுத்தாமல் விட்டு விட்டு அவர் பாவத்தில் விழுந்ததற்காக (தௌபா ) பாவ மன்னிப்புக் கேட்டு மீளுதல் வேண்டும். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings