கடையநல்லூர் மாணவி சாதனை... 8 வினாடிகளில் 118 தனிமங்களின் பெயர்கள் !

0

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பள்ளி மாணவி புதிய கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டார். நாம் அனைவரும் பள்ளி மாணவர்களாக இருந்த போது வேதியல் பாடத்தில் பீரியாடிக் டேபிள் எனப்படும் தனிம அட்டவணையை படித்திருப்போம். 

கடையநல்லூர் மாணவி கின்னஸ் சாதனை... 8 வினாடிகளில் 118 தனிமங்களின் பெயர்கள் !
அதை மனப்பாடம் செய்யப்படாத பாடுபட்டிருப்போம். தனிம அட்டவணையில் 10 பெயர்களை மனப்பாடம் செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடும்.

ஆனால் நவீன தனிம அட்டவணையில் இருக்கும் 118 திரவங்களின் பெயர்களை மிக குறைவான வினாடிக்குள் சொல்லி கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சி செய்து வரும் மாணவி தான்.. கடையநல்லூரைச் சேர்ந்த சப்ரீன்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மசூதி தைக்கா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி சப்ரீன். சப்ரீன் தனது பதினோராம் வகுப்பில் இருந்து இதனை பயிற்சி செய்து வருகின்றார்.

(getCard) #type=(post) #title=(You might Like)

சப்ரீன் தந்தை டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.17.46 வினாடியில் 118 தனிம அட்டவணையில் இருக்கும் திரவங்களின் பெயர்களை சொல்லி இதுவரை உலக சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் சப்ரீன் விடாமுயற்சியாக இதனை இரண்டு மாத முயற்சி செய்து முதலில் 13 வினாடிகளாகவும், 

பின்னர் படிப்படியாக குறைந்து 8.17 வினாடிகளில் 118 தனிம வரிசைகளின் பெயர்களையும் சொல்லி கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்து வருகிறார்.

மேலும் 12ம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் இந்த கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற வேண்டும் என சப்ரீனுக்கு அவரது ஆசிரியர்களும் தீவிர பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings