ராஜஸ்தானில் மாமியாருடன் சேர்ந்து வாழ மருமகன் முடிவெடுத்ததால் குடும்பமே பேரதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

மாமியாரிடம் மயங்கிய மருமகன்... சேர்ந்து வாழ முடிவெடுத்ததால் அதிர்ச்சி !
ராஜஸ்தானின் சிரோகி மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

இவரது மூத்த மகளான கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார், இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

நாராயணன் ஜோகி அடிக்கடி மாமனார் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார், வழக்கம்போல் டிசம்பர் 30ம் தேதி மனைவி பிள்ளைகளுடன் மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார்.

அன்றைய தினம், புத்தாண்டு கொண்டாடலாம் எனக்கூறி மாமனாருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார் நாராயணன்.

சுடச்சுட மட்டன் கறி பரிமாறப்பட்டு, இருவரும் சேர்ந்து ஒன்றாக மது குடித்துள்ளனர், இதனால் ஏற்பட்ட போதையில் ரமேஷ் அயர்ந்து தூங்கியுள்ளார்.

மறுநாள் காலை விடிந்ததும் பேரதிர்ச்சி காத்திருந்தது, அதாவது மாமியாருடன் ஓட்டம் பிடித்துள்ளார் மருமகன். 

அப்போது தான் இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது, இதனையடுத்து போலிசில் புகார் அளித்துள்ளனர்.

பேராசை பெரு நஷ்டம்... சரியாக பொருந்தும்.... பைஜூஸ் நிறுவனம்?

தான் பெற்ற பிள்ளைகளில் ஒருவரை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார் நாராயணன், இதனை தொடர்ந்து போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி யுள்ளனர்.