கீரிப் பிள்ளைகள் எவ்வாறு பாம்பின் விஷத்திலிருந்து தப்பிக்கின்றன?

0

இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிரினத்துக்கும் ஏதாவது ஒரு விதத்தில் எதிரியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பல ஏற்பாடுகளை இறைவன் படைத்துள்ளான். 

கீரிப் பிள்ளைகள் எவ்வாறு பாம்பின் விஷத்திலிருந்து தப்பிக்கின்றன?

ஒன்றின் பாதுகாப்பு அரணை மற்றது (இறைவனின் ஏற்பாட்டின் படி) மிகைத்து விடும் போது அதற்கு முடிவு ஏற்பட்டு விடுகின்றது. 

முதலில் கீரியின் பலம், சண்டையிடும் திறன், எதிர் கொள்ளும் விதம் மற்றும் வெற்றி சூத்திரம் போன்றவைகளை பார்ப்போம்.

உடல் மெலிந்தவர்களுக்கு.... எளிய வைத்திய முறைகள் !

இறுதியாக, கீரி எவ்வாறு பாம்பின் விஷத்திலிருந்து தப்பிக்கின்றன என்பதை பார்ப்போம்.

கீரியின் சண்டையிடும் திறன் மற்றும் வெற்றி சூத்திரம் :

கீரிப் பிள்ளைகள் எவ்வாறு பாம்பின் விஷத்திலிருந்து தப்பிக்கின்றன?

கீரிகள் பாம்புகளை விட வேகமாக இயங்குகிறது. கீரிகள் பாம்புகளை விட உடல் ரீதியாக வலிமையானவை.

அவற்றின் கூர்மையான பற்கள் மற்றும் வலுவான தாடைகள் ஒரு நாகப்பாம்பின் தலையை நசுக்கலாம் அல்லது அதன் முதுகெலும்புகளை நொறுக்கலாம்.

பாம்பு கீரி சண்டையிடும் போது நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் கீரி எப்போதும் பாம்பின் கழுத்ததை தான் பிடிக்க முற்படும்.

ஏனென்றால், அது நாகத்தின் கழுத்தில் ஒரு பிடியைப் பெறும் போது, பாம்பு உதவியற்றது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.

அதே சமயம், கீரி பாம்பின் வால் பகுதியை கடிக்க முயன்றால், பாம்பு கீரியை கடித்து அதைக் கொல்லக் கூடும் (கொல்ல முடியாது) கடித்து சேதப்படுத்த முடியும்.

பாம்பினை சீண்டி, சீண்டி அதனை களைப்படைய வைக்கிறது கீரி. பாம்பு கீரியை தீண்ட முற்படும் போது கீரி வேகமாக செயல்படுகிறது. 

இதனால் எளிதாக தப்பிக்கிறது பாம்பின் கடிலிருந்து.. கீரியின் வேகத்துக்கு பாம்பினால் ஈடுகொடுக்க முடியாமல் குழம்பி திணறுகிறது. 

மூளையில் ரத்தக்கசிவு காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

அந்த வேளையில் கீரி மின்னல் வேகத்தில் பாம்பின் தலையை தனது கூரான பற்களால் கடித்து குதறுகிறது. பாம்பு செயலற்று இறக்கிறது.

நாகத்தின் நரம்பு மண்டலத்தின் முக்கிய தமனிகள் அதன் கழுத்தில் அமைந்துள்ளன.

கீரி அதன் கூர்மையான பற்களைப் பயன்படுத்தி பாம்பின் தமனிகளை வெட்டி இதனால் பக்கவாதம் ஏற்பட்டு பாம்பு இறக்கிறது.

பாம்பு நச்சுத்தன்மை :

கீரிப் பிள்ளைகள் எவ்வாறு பாம்பின் விஷத்திலிருந்து தப்பிக்கின்றன?

நாகப்பாம்புகளின் விஷ நச்சுத்தன்மை நியூரோடாக்சின் (Neurotoxin). நியூரோடாக்சின்கள் என்பது நரம்பு மண்டலத்திற்கு விஷமான ரசாயன பொருட்கள்.

நியூரான்களுக்கு இடையில் அனுப்பப்படும் வேதியியல் சமிக்ஞைகளை (நரம்பியக் கடத்திகள்) சீர்குலைப்பதன் மூலம் நியூரோடாக்சின்கள் செயல்படுகின்றன.

அதாவது, விஷம் நேரிடையாக நரம்பு மண்டலத்தை தாக்க கூடியது. நியூரோடாக்சின்கள் தசை முடக்குதலை ஏற்படுத்துகின்றன, இது சுவாசக் கஷ்டம் மற்றும் மரணத்திற்கும் காரணமாக இருக்கலாம்.

பாம்பு விஷத்தில் பொதுவாகக் காணப்படும் செயலில் உள்ள மூலப்பொருள், ஆல்பா - நியூரோடாக்சின் (alpha-neurotoxin) தசை செல்களின் மேற்பரப்பில் உள்ள 

ருசியான கோக்கோ ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

அசிடைல்கொலின் ஏற்பி மூலக்கூறுகளுடன் (acetylcholine receptor) தன்னை இணைப்பதன் மூலம் செயல்படுகிறது.

இந்த ஏற்பிகள் நரம்புகளிலிருந்து செய்திகளைப் பெற வடிவமைக்கப் பட்டுள்ளன, அவை தசைகள் சுருங்க அல்லது ஓய்வெடுக்கச் சொல்கின்றன.

ஆனால், ஆல்பா - நியூரோடாக்சின் செய்திகளைத் தடுக்கிறது, செயலிழந்து இறுதியில் பக்கவாதத்தை ஏற்படுத்தி பாதிக்கப் பட்டவரைக் கொல்கிறது.

பாம்பு கடித்த சில நிமிடங்களில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் :

உணர்வின்மை

நினைவாற்றல் இழப்பு

பார்வை மங்குதல்

தலைவலி

வாந்தி உணர்வு

மயக்கம்

சரியான முதலுதவி சிகிச்சை எடுக்காவிட்டால் இறுதியாக, கடிபட்டவர் மயங்கி சுயநினைவை இழந்து பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

கீரியின் விசேஷ விஷ முறிவு :

கீரிப் பிள்ளைகள் எவ்வாறு பாம்பின் விஷத்திலிருந்து தப்பிக்கின்றன?

கீரிக்கு இயற்கையாகவே உடலில் சிறப்பு அசிடைல்கொலின் ஏற்பிகளைக் (acetylcholine receptor) கொண்டுள்ளது.

அசிடைல்கொலின் ஏற்பி என்பது மூளைக்கும் தசைகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய இணைப்பாகும்.

ஒரு நாகப்பாம்பின் நியூரோடாக்சின் எதிராக அசிடைல்கொலின் ஏற்பி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது கீரி.

ஒரு நாகப்பாம்பு அல்லது வேரேனும் நியூரோடாக்ஸின் நஞ்சு கொண்ட ஜந்துக்கள் கடித்தால் கூட அதன் சிறப்பு அசிடைல்கொலின் ஏற்பிகள் விஷம் நரம்புகள் மற்றும் தசைகளுடன் இணைவதிலிருந்து தடுக்கின்றன.

கீரியின் அசிடைல்கொலின் ஏற்பிகள் பாம்பு விஷத்திற்கு எதிர்ப்பு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.

சுவையான பச்சைப் பயறு சான்ட்விச் செய்வது எப்படி?

பாம்பின் விஷத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத விலங்குகளுக்கு சாதாரணமாக நஞ்சு செயல்படுவது போல கீரியிடம் பாம்பின் நஞ்சு செயல்படாமல் தோல்வியடைகிறது.

எனவே, பாம்பின் முக்கிய ஆயுதமான அதன் விஷம் ஒரு கீரிக்கு எதிராக கிட்டத்தட்ட பயனற்றது. ஒரு கிராம் நல்ல பாம்புடைய விஷம் 50-க்கும் மேற்பட்ட மனிதர்களை கொல்ல போதுமானதாகும். 

ஒரு முறை இவை கொட்டுவதனால் பிரயோகம் செய்யப்படும் விஷம் (ஏழு டன் எடைக் கொண்ட ) மிகப்பெரிய யானையையே சில மணித்துளிகளில் மரணிக்க செய்ய போதுமானதாகும். 

கீரிப் பிள்ளைகள் எவ்வாறு பாம்பின் விஷத்திலிருந்து தப்பிக்கின்றன?

மற்றுமொரு அம்சம் முட்டையிலிருந்து வெளிவந்த சிறிய பாம்புடைய விஷம் வீரியம் மிக்கப் பெரிய பாம்பின் விஷத்தை போன்றே எந்த விதத்திலும் குறையாத வீரியம் மிக்கதாகும். 

இதிலிருந்து முட்டையிலிருந்து வெளிவந்த குட்டிப் பாம்பு கூட மரணத்தை விளைவிக்கும் ஆற்றலுடன் தான் பிறக்கின்றது. 

இந்த அம்சம் கூட எல்லா உயிரினங்களிலும் வித்தியசமான விதிவிலக்கான அம்சமாகத் திகழ்கின்றது.

சுவையான க்ரீமி பாஸ்தா செய்வது எப்படி?

நல்லப் பாம்புடைய வீரியம் மிக்க விஷத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய இந்த அம்சம் தான் மற்றவற்றிலிருந்து கீரிப்பிள்ளை வேறுபட்டு விளங்க காரணமாக அமைந்து விடுகிறது.

கீரி நாகத்தின் தாக்குதலை வெற்றிகரமாக ஏமாற்றி அதை எளிதாகக் கொன்று விடுகிறது. 

  • மற்றுமொரு அதிசய செய்தி ஆப்பிரிக்காவில் வசிக்கும் கருப்பு கழுத்துடைய (black necked cobra) நல்ல பாம்பு தன் எதிரியின் கண்களை நோக்கி விஷத்தை 2.5 மீட்டர் தொலைவு வரை பீய்ச்சி அடிக்கின்றது. 

  • இதனால் எதிரியின் கண்களில் தற்காலிகக் குருடும் கடுமையான வலியையும் ஏற்படுத்தி தப்பி விடுகின்றது. இவ்வாறு விஷத்தை துப்பாக்கியின் அமைப்பில் பீய்ச்சி அடிக்கும் 

பொதுவாக கீரிப்பிள்ளையும் நல்லப் பாம்பும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கெண்டால் நீ உன் வழியில் செல் நான் என் வழியில் செல்லுகின்றேன்.

நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்ற ரீதியிலே ஒன்றை ஒன்று தவிர்த்துக் கொண்டு செல்கின்றன. 

சில சந்தர்ப்பங்களில் எதிரிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையில் மோதும் நிலை வந்து விட்டாலோ அந்த போட்டியின் முடிவு, இறந்த பாம்பை கீரிப்பிள்ளை தின்னுவதாகத் தான் முடிவடையும்.

மலேசியாவின் இரப்பர் தோட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி இங்கு குறிப்பிடத்தக்கது. இரப்பர் தோட்டத்தில் வேலைச் செய்யக் கூடிய சிறுவன் ஒரு குரங்கின் குட்டியை அடித்துக் கொன்று விடுகின்றான். 

அச்சமயம் அந்த சிறுவன் அணிந்திருந்தது மஞ்சல் நிற சட்டையாகும். இதன் பின் விளைவாக நடந்த நிகழ்ச்சி, இறந்த குட்டியின் தாய்க் குரங்கு சத்தம் போட்டு கத்தியவுடன் நாலாப் புறங்களிலிருந்தும் 

கீரிப் பிள்ளைகள் எவ்வாறு பாம்பின் விஷத்திலிருந்து தப்பிக்கின்றன?

நிறையக் குரங்குகள் அந்த இடத்தை முற்றுகையிட்டு மற்ற நிறங்களில் ஆடை அணிந்தவர்களை விட்டு விட்டு குறிப்பாக மஞ்சல் சட்டைப் போட்டவர்களை மாத்திரமே கடிக்க ஆரம்பித்தன. 

இதிலிருந்து ஆபத்தை விளக்கி செய்தியைப் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் மஞ்சல் நிற சட்டைகாரன் தான் நம் எதிரி என்பனப் போன்றத் தகவல்களை 

அரேபியன் ரெசிபி மொறுமொறுப்பான குனாஃபா செய்வது எப்படி?

துல்லியமாக தெரிவிக்கக் கூடிய இது போன்ற சம்பவங்கள் இத்தகைய விலங்கினங்களின் சமூக ஒற்றுமையுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளாகும். 

இந்த நிகழ்ச்சி விலங்குகள் ஒன்றுடன் ஒன்று செய்திகளை தங்களுக்குள் பறிமாறிக் கொள்வது நிரூபனம் ஆகியிருக்கின்றது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)