பேராசை பெரு நஷ்டம்... சரியாக பொருந்தும்.... பைஜூஸ் நிறுவனம்?

0

பைஜூஸ் நிறுவனம் ஒரு தட்டு சோறையும் ஒரே வாயில் ஒரே தடவை மென்று முழுங்க ஆசைப்பட்டு மாட்டிக் கொண்ட பேராசை நிறுவனம்.

பேராசை பெரு நஷ்டம்... சரியாக பொருந்தும்.... பைஜூஸ் நிறுவனம்?

நமது நாட்டில் மாணவர்களுக்கு மார்க் தான் முக்கியம். 90 மார்க் தான் வாங்கினாயா ? போதாது. ஐஐடி, நீட், மெடிகல் சீட் கிடைக்காது. 

99 பெர்சன்ட் அல்லது பெர்சன்டைல் வேணும். டியூசனில் சேர். இன்னும் நன்றாக படி. இது பெற்றோர்களின் கவலை.

இதை தொடர்ந்து பணம் பண்ண, ஏராளமான கோச்சிங் கிளாஸஸ்கள் முளைத்தன. நீ எங்க கோச்சிங் கிளாஸில் சேர், 1லட்சம் கட்டு, நாங்களே லேப்டாப், டேப்லட், கொடுப்போம். 

அப்பளம் விற்ற சிறுவனுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அனுமதி !

கியாரண்டி உனக்கு மெடிகல், ஐஐடி சீட் என ஏமாற்றி வசூல் செய்கின்றன. பெற்றோர்களுக்கு ஆசை, வேறு வழியின்றி கட்டுகிறார்கள்.

கொரானா கோவிட் பள்ளிகளை 2020,21 ல் மூடினது. இந்த டியூசன் முறைகள் ஆன்லைன்  கை கொடுத்தது. 

எக்கச்சக்கமான ஆன்லைன் பிசினஸ். சீட்டுக் கம்பனிகள், மாதிரி பல ஆரம்பித்தன. ஏற்கனவே இருந்த கம்பனிகள் பிசினஸை விரிவாக்கின. 

மற்ற கோச்சிங் சென்டர்களை போட்டியாளர்களை பல மடங்கு விலை கொடுத்து வாங்கின. கோச்சிங் ஆசிரியர்களை லட்சக்கணக்கில் நியமனம் செய்தனர். 

கோவிட் காலங்கள் முடிந்தன. இவர்களெல்லாம் டுபாக்கூர் என்று மாணவர்களும், பெற்றோர்களும் புரிய ஆரம்பித்தனர். பலர் மோசடி என்று கன்சூமர் கோர்ட்டுகளுக்கு சென்றனர். 

ஸ்கூல்கள் திறந்து நிலைமை சீரான பிறகு பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார்கள். பைஜூஸ் இவர்களில் முக்கியமாக அகலக்கால் வைத்து மாட்டிக் கொண்டவர். 

பேராசை பெரு நஷ்டம், சரியாகவே பொருந்தும்.

பைசூ ரவீந்திரன் (வயது 41), பெற்றோர் ஆசிரியர்கள், மலையாளம் ஸ்கூல் மீடியத்தில் படித்து, அரசு கண்ணனூர் எஞ்சினியரிங் காலேஜில் BTech. படித்தவர். 

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன?

சில வருடம், கப்பலில் எஞ்சினியராக வேலை பார்த்தார். 2003ல் ஐஐஎம் IIM CAT பரிட்சை எழுதி 100% வாங்கினார். அடுத்த வருடம் மறுபடியும் பரிட்சை எழுதி பார்த்தார். 

அந்த தடவையும் 100%!. 2007ல் டியூசன் சென்டர் ஆரம்பித்தார். மாணவர்கள் இவரது திறமையை மெச்சி குவிந்தனர். 

நல்ல வருமானம். வேலையை விட்டு ஐஐடி, ஐஐஎம், மேனஜ்மென்ட் காலேஜ் நுழைவு தேர்வுக்கு டியூசன் சென்டர் ஆரம்பித்தார்.

பேராசை பெரு நஷ்டம்... சரியாக பொருந்தும்.... பைஜூஸ் நிறுவனம்?

2011ல் பைசூ ரவீந்திரன் இந்திய மாணவர்களுக்கு படிப்பு என்பதை விளையாட்டு மாதிரி, விரும்புகிற மாதிரி சொல்லிக் கொடுத்து லேப்டாப், 

டேப்லட், மொபைல் மூலமாக மாணவர்களை மார்க்குகளை முக்கிய குறியாக வைத்து ஊக்குவித்து தொடங்கிய ஆன்லைன் கோச்சிங். 

மற்றும் ஆசிரியர்கள் உங்கள் வீட்டுக்கு அவ்வப்போது வந்து சொல்லிக் கொடுப்பார்கள் என்று கம்பனி ஆரம்பித்தார். 

எலுமிச்சை கலந்த தண்ணீர் அருந்துவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் !

ஆஹா மிகப்பிரமாதம் என்று ஃபேஸ்புக் ஓனர்கள் மார்க், சான் மற்றும் முதலீட்டாளர்கள் டைகர் குளோபல், ஜெனரல் அட்லாண்டிக் பணத்தை அள்ளி கொடுத்தார்கள். 

$1 பில்லியன் (8000 கோடி ரூபாய்) வரை கிடைத்தது. ஷாருக்கானை வைத்து எல்லா டிவிகளிலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை 20 செகண்ட் விளம்பரம். 

உங்க பிள்ளைகளை பைஜூஸ் டியூசனில் சேருங்கள் 100க்கு100 வாங்குவார்கள். படிப்பதை மிக விளையாட்டாக விரும்புவார்கள. Fun loving education. ஷாருக்கானும் மகன், மகளும் எத்தனை மார்க் வாங்கினார்கள் ?

ரூ.8000 கோடி கையில் சுலபமாக வந்தது. கோவிட் காலங்கள் ஒத்துழைத்தது. மிகப்பெரிய அளவில் ஆசிரியர்கள், பிசினஸ் எக்சிகூடிவ்களை நியமித்தார். 

வீடு வீடாக சென்று மாணவர்களை பெற்றோர்களை மூளைச்சலவை செய்தனர். இந்த பாடப்பயிற்சிகளில் சேருவதற்கு குறைந்த பட்சம் 40,000ரூ யிலிருந்து ரூ.2 லட்சம் என்று வசூல் பண்ண ஆரம்பித்தனர்.

பைஜூஸ் சொல்கிறார்,  எங்களிடம் பெற்றோர்களின் வருமானத்துக்கு தக்கவாறு பேக்கேஜ்கள் இருக்கின்றன. ரூ.30000 லிருந்து ரூ.2 லட்சம் வரை . கூத்து ! கடையில் துணிகள் வாங்குகிற மாதிரி !!

சேல்ஸ் மேனேஜர்கள், தொடர்பு ஊழியர்கள் என்று இந்தியா முழுவதிலும் லட்சக் கணக்கில் நியமித்து வியாபாரத்தை பெருக்கினர். 

லேப்டாப், டேப்லட் என்று வியாபாரங்கள், மாணவர்கள் கட்டாயம் எங்களிடம் தான் வாங்கணும் என்கிற கட்டாயம்.

பேராசை பெரு நஷ்டம்... சரியாக பொருந்தும்.... பைஜூஸ் நிறுவனம்?

கோவிட் காலங்களில் பெற்றோர்கள் பணம் கட்டிய பிறகு, ஒன்றும் அவ்வளவு பிரமாதம் இல்லை. 

இவ்வளவு பணம் அதிகம். இஷ்டமில்லை பணம் திரும்ப கொடு என்று கேட்க ஆரம்பித்தனர். பலர் கோர்ட்டுகளில் கேஸ் போட்டு மிரட்டி வாங்கினர்.

பைஜூஸ் ரேட்டிங் மார்க்கே பெயில். ஏமாற்று பேர்வழி. பணத்துக்காக படிப்பை வியாபாரம் செய்கிறார் என பெற்றோர்களும், மாணவர்களும் புரிந்து கொண்டனர். 

கடுகில்லாமல் சாம்பார் சுவை பெறாது... கடுகு வகைகள் எத்தனை?

பரவியது உண்மைத் தன்மை. மாணவர்களே தங்களுக்குள் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்தனர். வியாபாரம் படுத்தது.

இருந்தாலும் பைஜூஸ், வியாபாரத்தை பெருக்க ஆசிரியர்களுக்கு (ஊழியர்) டார்கட் கொடுத்து ஒவ்வொருவரும் இவ்வளவு பிசினஸ் மாதா மாதம் கொடுக்க வேண்டும். 

ஆன்லைன் கிளாஸ்கள் அதிகப்படியான மணி நேரங்கள் எடுக்கணும் என அழுத்தம் கொடுத்தார். பலரை வேலையிலிருந்து தூக்கினார். பலர் விலகினர்.

இதற்கு இடையில் பல கம்பனிகள் முளைத்தன. போட்டிகள் ஆரம்பித்தன. போட்டியைத் தாங்க முடியவில்லை. 

அதிக ஆசை, கையாலாகதவனின் மோசமான பிசினஸ் மாடல், போட்டியாளரை விலை கொடுத்து வாங்கி மூடுவது. 

ஆகாஷ் என்ற கோச்சிங் கம்பனியை பல மடங்கு ரூ.2000 கோடி விலை கொடுத்து வாங்கினார்.

இவர் எதிர் பார்த்தார், இன்னும் முதலீட்டாளர்கள் அள்ளி, அள்ளி பணம் டாலர்களில் கொடுப்பார்கள் என்று. அவனுக யாரு, கில்லாடிகள், கையை விரித்து விட்டார்கள். 

மிகப்பெரிய நஷ்டம். ரூ. 4000 கோடி வரை. இதை வெளியே சொல்வதற்கே 18 மாதங்கள் ஆகின. ஆடிட்டர்களை வைத்து எவ்வளவு கோல்மால் செய்தாலும் முடியவில்லை. நஷ்டத்தை வெளியிட்டார். 

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. மிகப் பெரிய உலகதர பைனான்ஸ் மேனேஜரை நியமிக்க போகிறேன் என பீலா விடுகிறார். 

மாணவர்களுக்கு கல்வி தருகிறாரா அல்லது லாப நஷ்ட வியாபாரம் செய்கிறாரா ?

மனிதர்களை காப்பாற்றும் பன்றிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள் !

சீனாவில் இந்த மாதிரி ஆன்லைன் கோச்சிங்களை அரசு கட்டுப் படுத்துகிறது. அரசே உதவி செய்கிறது. ஆனால் லாப நஷ்டம் பார்க்கவோ பிசினஸாக நடத்துவதற்கு அனுமதிப்பதில்லை.

நம்ம நாட்டில் வியாபார மோசடிகள் இப்படித் தான் பல நடந்து கொண்டே இருக்கின்றன. ஒருவர் 2 பெட்டிகடைகளை வைத்து சில்லறை வியாபாரம் நடத்துவார். 

பேராசை பெரு நஷ்டம்... சரியாக பொருந்தும்.... பைஜூஸ் நிறுவனம்?

ஒரு ஆடிட்டர், மதிப்பீட்டாளர் Valuation லஞ்சம் கொடுத்து, என்னுடைய வியாபார மதிப்பு ரூ.10 கோடி என்று மதீப்பீடு செய்து 

லஞ்சம் கொடுத்து ஆவணங்கள் தயாரித்து, பேங்கில் ரூ.5 கோடி கடன் இங்கும் லஞ்சம் வாங்குவார். 

இப்போது இவரை கோடீஸ்வரர் என்று பத்திரிக்கைகள் புகழும். இதுவும் பெய்டு நியூஸ். லஞ்சம் கொடுத்து விளம்பரம் செய்வான். 

தேங்காயில் பூ விழுந்தால் சாப்பிடலாமா?

ஓரிரண்டு வருடங்கள் காலம் தள்ளுவான். வண்டவாளம் தண்டவாளம் ஏறும். பணத்தை யெல்லாம் பினாமி பெயர்களுக்கு, மாற்றி விடுவான். 

திவாலா என்று அறிவித்து கையை தூக்கி விட்டு ஓடி விடுவான். இந்த நாடகங்கள் விஜய்மல்யா, நிரவ் மோடியிலிருந்து பலர் ஆடும் மோசடிக் கூத்துகள். இன்னும் தொடரும்..... BBC

இண்டர்வெல் டிரெயினிங்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)