நம்முடைய எலும்புகளை பலப்படுத்தக் கூடிய  இந்த ஆசனம். இதை செய்யும் போது தவளை போன்ற அமைப்பில் உடல் இருப்பதால்  இதற்கு மண்டூகாசனம் என்ற பெயர் வந்தது.

முதுகு எலும்பை பலப்படுத்த கூடிய மண்டூகாசனம் செய்வது எப்படி?
செய்முறை :

முதலில் தரையில் போர்வையை விரித்து குப்புறபடுத்துக் கொண்டு மூச்சை நன்கு இழுத்து வெளி விட வேண்டும். பின்பு பின்புறமாக இரண்டு கைகளையும் வைத்துக் கொள்ள வேண்டும். 

முட்டை விரும்பிகள் விரும்பி உண்ணும் எக் புர்ஜி செய்வது எப்படி? 

பிறகு இரண்டு கால்களையும் மடக்கி குதிகால்களை தொடைகளுக்கு அருகே கொண்டு செல்லவும்.

பிறகு வலது பாதத்தின் மேற்புறத்தில் வலது உள்ளங்கையையும், இடது பாதத்தின் மேற்புறத்தில் இடது உள்ளங்கையையும், வைக்க வேண்டும். 

முதுகு எலும்பை பலப்படுத்த கூடிய மண்டூகாசனம் செய்வது எப்படி?

இந்நிலையில் மூச்சை வெளிவிட்டபடி மேல் நோக்கி தலையையும், மார்பையும்  உயர்த்தியபடி குதிகால்களைத் தரையை நோக்கி நன்கு அழுத்தவும். 

முடிந்தால் குதிகால்களைத் தரையில் தொடும்படி செய்யவும். முடிந்த அளவுக்கு இரு முழங்கால்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்கவும்.

வெஜ் மசாலா சாண்ட்விச் ரெசிபி செய்வது எப்படி?

அதற்கு பிறகு நன்றாக தலையை உயர்த்தி மேலே பார்க்கவும். இந்நிலையில் சுமார் 20 விநாடிகளுக்கு சாதாரண சுவாசத்தில் இருந்தபடி பிறகு கால்களை மெதுவாக விடுவிக்கவும்.

பயன்கள் :

முதுகு எலும்பை பலப்படுத்த கூடிய மண்டூகாசனம் செய்வது எப்படி?

நன்றாக மார்பு விரிவடைவதால் அதிக மூச்சு காற்று நுரையீரலுக்கு கிடைக்க ஏதுவாகிறது. 

இந்த பயிற்சியை செய்வதால்  ஆஸ்துமா குணமடைய உதவுகிறது மற்றும் கழுத்து எலும்பு தேய்வு குணமடைய பயன்படுகிறது. 

முந்திரி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் !

செரிமான மண்டலத்தை சீர் செய்வதால் எளிதில் உணவு சீரணமாகிறது. மலட்டுத்தன்மை குணமடையவும், சீறுநீரை வெளிப்படுத்தவும், கல்லடைப்பை குணப்படுத்தவும் பயன்படுவதாகும். 

பிறகு முதுகு எலும்பை பலப்படுத்த உதவுகிறது .குதிகால்களை மிருதுவாக்கி காலில் ஏற்படும் வலியை குணமாக்குகிறது.