கலாச்சார வழியில் பெண்கள் !

ஆண் பெண் என்ற இரு பாலரும் இயற்கையாகவே ஒருவருக் கொருவர் வேறுபட்டவர்களே. உருவம், சிந்தனை, கலாச்சாரம் என இருவருக்கும் வெவ்வேறு வடிவமும் அதற்கான பங்கும் வரையறுக்கப் பட்டுள்ளது.
கலாச்சார வழியில் பெண்கள் !
ஆண்கள் பலசாலிகள், குடும்பத் தலைவர்கள், தூரநோக்கு சிந்தனை கொண்டு முடிவெடுப் பவர்கள் என்றும் பெண்கள் கலாச்சாரத்தின் சின்னம், 

எளிதில் உணர்சி வசப்படக் கூடியவர்கள், தற்போதைய சூழலுக்கான முடிவை எடுப்பவர்கள் என்ற கூற்று உண்டு.

இப்படித் தான் இயங்க வேண்டும் என வரையறுக்கப்பட்ட சமூக அமைப்பு முறையாக இயங்க ஆண் பெண் இருவரின் பங்கும் மிக முக்கியமான தாகும். 
ஆனால் சமூக அமைப்பு என்பது அந்தந்த காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தோதுவாக இருக்கவே உருவாக்கப் பட்டது. மனிதனின் இயக்கத்தை எளிமைப் படுத்தவே இந்த அமைப்பு.

ஆனால் கால மாற்றத்திற்கேற்ப இந்த சமூக அமைப்பானது மாற வேண்டும் என்பது தான் நியதி.

மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கையின் முடிவான தேடலை நோக்கி பயணிப்பதே தனி மனிதனின் வாழ்க்கை பயணமாக இருக்க வேண்டும். 
சமூகம் இந்த பயணத்தை எளிமைப் படுத்தும் வகையில் அமைப்பை மாற்றிக் கொள்ள சில தளர்வுகளை செய்ய வேண்டும்.

உலகத்தில் பல இடங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சில சமூகத் தினர் இன்னமும் சில கலாச்சாரங்களை பின்பற்றி வருகின்றனர். இந்த கலாச்சாரங்கள் பெரும்பாலும் பெண்களிடமே திணிக்கப் பட்டுள்ளது. 

அவ்வகையில் இந்த கலாச்சாரத்தில் தன் உடலையும் உருவத்தையும் மாற்றிக் கொண்ட பெண்கள் எப்படி காட்சியளிக் கிறார்கள் தெரியுமா?

நீண்ட கழுத்து பெண்கள்

தாய்லாந்தில் உள்ள காயன் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு சிறு வயது முதலே அவர்களின் கழுதத்தில் அடுக்கடுக்காக தங்க வளையங்களை மாட்டி விடப்படுகின்றன.
கலாச்சார வழியில் பெண்கள் !
இந்த வளையங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கப் படுகின்றது. நீண்ட கழுத்துடைய இந்தப் பெண்கள் தங்களின் கால் கட்டை விரல்களைக் கூட குனிந்து காண முடியாது. 

மேலும் இந்த வளையங்கள் அகற்றப் பட்டால் அவர்களின் கழுத்து சுயமாக நிற்க முடியாமல் உடைந்து விடும். 

ஆனால் மிக நீண்ட கழுத்து உடைய பெண்களே அழகானவர்கள் என்ற நம்பிக்கை இந்த மக்களிடையே உண்டு.

அக்குள் பகுதியில் உள்ள முடியை நீக்க எளிய வீட்டுப் பொருட்கள் !  

மூக்கில் தக்கை அணிந் துள்ள பெண்கள்

நம் பாட்டி மூக்கின் இரு பக்கமும் துளையிட்டு மூக்குத்தி அணிந்தி ருப்பதைப் பார்த்திருப்போம். 

ஆனால் இந்தியாவில் இருக்கும் 'அப்பதாணி' என்ர சமூகத்தின் பெண்கள் தங்களின் மூக்கின் இரு பக்கமும் துளையிட்டு தக்கைகளை அணிந்துக் கொள்கின்றனர். 

இது கரும்பால் செய்யபட்டது. பக்கதில் அல்லது வெளியில் இருக்கும் ஆண்களை தங்கள் அழகால் ஈர்க்கக் கூடாது என்பதற்காக இந்த அணி கலனை காலம் முழுவதும் அணிந்துள்ளனர். 

மேலும் நெற்றி தொடங்கி மூக்கின் நுனி வரை நீண்ட ஒரு கோடால் பச்சை குத்திக் கொள்கின்றனர்.
அகன்ற உதடுகள் கொண்ட பெண்கள்

எத்தி யோப்பியா நாட்டில் உள்ள் 'மர்சி' என்ற சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களின் உதடுகளின் சிறு துளையிட்டு அதின் வட்டவடிவ தட்டை வைத்துக் கொள்கின்றனர். 

மூன்று வாரத்திற்கு ஒரு முறை இந்தத் தட்டின் அளவும் அதிகரிக்கின்றது. கிட்டதட்ட இந்த தட்டின் ஆகக்கடைசி சுற்றளவு 15 - 25 செ. மீ வரை இருக்கின்றது. 

தற்பொழுது 6,000 பேர் கொண்ட இந்த சமூகத்தில் இருக்கும் இந்த வழக்கமானது 1000 வருடம் பழமையானது. 

இவர்களின் உதடு எவ்வளவு பெரியதாக உள்ளதோ அவ்வளவு அழகான வர்கள் என்று இந்த சமூகத் தினர்கள் கருதுகின்றனர்.

சிறிய பாதம் கொண்ட பெண்கள்
பத்தாம் நூற்றாண்டில் சீனாவில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு 5 வயது இருக்கும் போதே கால்களின் பாதங்களை துணியால் சுற்றி சிறிய பாதங்களாக உருவாக்கிக் கொள்வர். 

சிறிய பாதங்களைக் கொண்ட பெண்கள் தான் மிக அழகியப் பெண்களாக வர்ணிக்கப் பட்டனர். 

தங்களின் கால்களின் எலும்புகளை அடித்து, மூலிகைகள் கொண்ட நீரில் நனைத்து தாமரை காலணிகள் என்று சொல்லப்படும் சிறிய காலணிகளில் தங்களின் பாதங்களைப் புகுத்திக் கொள்வர்.
கலாச்சார வழியில் பெண்கள் !
இது மிகவும் வலியைக் கொடுக்கும் ஒரு நடைமுறை. நாளடைவில் கால் விரல்கள் அனைத்தும் படங்கி அடிபாதத்தில் ஒட்டிக் கொள்கின்றது. 

இந்த நடை முறையை சீனா 103 ஆண்டுகளுக்கு முன்னமே முற்றிலும் தடை செய்திருந்தாலும். 

இந்த தாமரை காலணிகளை வாங்கும் வாடிக்கை யாளர்கள் கடந்த 6 வருடமாகத் தான் இல்லை என்கின்றனர் தாமரை காலணி தயாரிப் பாளர்கள்.
இந்த செடிகளை எப்போதும் தொட்டு விடாதீர்கள் - மரணம் கூட நேரலாம் !
தலை முடியை V வடிவில் சரித்துக் கொள்ளும் பெண்கள்

பிரேசில் நாட்டில் இருக்கும் கயாப்போ இனப்பெண்கள் தங்களின் தலையில் நடுவே இருக்கும் முடியை சரித்துக் கொண்டு உடல் முழுவதும் வண்ன நிறங்களில் வடிவங்களை வரைந்துக் கொள்கின்றனர். 

பிரேசிலில் இருகும் அமசோன் காடுகளில் வடிக்கும் இவர்களின் தற்போதைய மக்கள் தொகை 7,096 மட்டுமே.
உலகம் முழுவதிலும் இருக்கும் பெண்கள் தங்களின் கலாச்சரத்தின் தொன்மையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் 
பங்கை வகிப்பதால் கலாச்சாரம் மற்ரும் பண்பாட்டின் கோரிக்கைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றனர். 

இந்த மாற்றம் என்பது அவர்களின் உடலுக்கு மட்டுமே. உள்ளம் என்றுமே உறுதியாக இருப்பதால் தான் தன்னிலை மாறாது இருக்கின்றனர்.
Tags: