பூனைகள் பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்ய உண்மைகள் !





பூனைகள் பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்ய உண்மைகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

நாய்களுக்கு அடுத்த படியாக அதிகளவில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுவை பூனைகள். நாய்களுக்கு அடுத்த படியாக பூனைகள் அதிகம் காணப்படுகின்றன. 

பூனைகள் பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்ய உண்மைகள் !
சில மர்மமான ஆளுமைகள் மற்றும் நல்ல அழகான தோற்றம் பூனைகளை செல்ல பிராணிகள் பட்டியலில் வைத்து உள்ளது. பூனைகளை ஒரு சிலரே ஆசையாக வீட்டில் வாளர்ப்பார்கள். 

பலர் அவற்றின் சில குணநலன்களை காரணம் காட்டி வளர்ப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

குறிப்பாக பூனைகளை விரும்பாதோர் அல்லது வளர்க்க விரும்பாதோர், பூனைகள் கணக்கிடக் கூடியவை மற்றும் மிகவும் சுயநலம் கொண்டவை என்று பல காரணங்களை கூறுவார்கள். 

ஆனால் எகிப்திய கலாச்சாரத்தில் பூனைகள் நன்கு மதிக்கப் படுகின்றன. பூனைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்படாத பல சுவாரஸ்ய மற்றும் வேடிக்கையான உண்மைகள் உள்ளன.

இண்டக்சன் ஸ்டவ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?

பூனை பிரசவித்த போது உணவுக்காக குட்டிகளை தனித்து விட முடியாமலும், இழந்த சக்திக்கான புரோட்டீன்களை ஈடு செய்யவும் நலிந்த குட்டியை சாப்பிட்டு விடும். 

பூனை மட்டுமல்ல. பாம்பும் அவ்வாறே. அந்த நேரம் தன்னை தின்ன வரும் தாய் பாம்பை முதலில் வேகமாக சீறி எந்த பாம்புக்குட்டி எதிர்த்து தாக்குகின்றதோ அது தப்பிக்கும். 

பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும். பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன. 

அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது. பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கம் கொண்டவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.

பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக் கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாது. பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கபடும். 

பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.

பூனைகள் பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்ய உண்மைகள் !

விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட குரங்குகள் மற்றும் நாய்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் ஒரு பூனை கூட விண்வெளிக்கு செல்லும் அளவிற்கு தைரியமாக இருந்தது உங்களுக்குத் தெரியுமா..? 

1963-ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி ஆஸ்ட்ரோகேட் என்றும் அழைக்கப்படும் ஃபெலிசெட் தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மற்றும் ஒரே பூனை.

பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளது. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று. 

தோல் அழற்சி மற்றும் அறிகுறிகளும் காரணங்களும்? #Eczema

பூனைகள் ஒரு தூங்குமூஞ்சி. அவற்றின் வாழ்நாளில் 70 சதவீதம் தூக்கத்தில் தான் செலவிடுகின்றன. நாம் எவ்வளவு இனிப்பு கொடுத்தாலும், பூனைகளினால் அதன் சுவையை அறிய முடியாது. 

அதனால் எப்போதும் பூனைகள் ஷுகர் ஃபிரீ தான். நல்ல தண்ணீர் பிரச்சனை பூனைகளுக்கு இல்லவே இல்லை. ஏனெனில் கடல் நீரில் உள்ள உப்பை சுத்தகரிக்கும் தன்மை, பூனைகளின் சிறுநீரகங்களுக்கு உண்டு. 

உணவு விஷயத்தில் பூனைகள் ஒரு சந்தேகப் பிராணி. அவை ஒன்றுக்கு இரண்டு முறை சாப்பிட்டு சோதனை செய்த பின்னரே, முழுமையாக உணவை உண்ணத் துவங்கும்.

பூனைகள் பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்ய உண்மைகள் !

எகிப்தியர்கள் தான் முதலில் பூனையை வளர்த்தவர்கள் என்று கருதப்பட்டது. ஆனால் 2004 இல், பிரெஞ்சு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சைப்ரஸில் 9,500 ஆண்டுகள் பழமையான பூனை கல்லறையைக் கண்டுபிடித்தனர். 

இதன் மூலம் பூனை மிகவும் பழமையான செல்ல பிராணி என்பது தெரிய வருகிறது. உலகின் பணக்கார பூனைக்கு சுமார் 7 மில்லியன் பவுண்டுகள் சொத்து இருந்தது. 

சுகாதாரமான நல்ல இறைச்சி வாங்குவது எப்படி ?

கின்னஸ் உலக சாதனையின் படி அந்த கோடீஸ்வர பூனையின் பெயர் பிளாக்கி. இதன் உரிமையாளர் இறப்பதற்கு முன் இந்த பூனையின் பெயரில் சொத்துக்களை எழுதி வைத்ததால் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்தது. 

ஸ்டப்ஸ் என்று அழைக்கப்பட்ட ஆரஞ்சு கலர் டேபி பூனை, அலாஸ்காவில் உள்ள டால்கீட்னா என்ற சிறிய நகரத்தின் மேயராக 20 ஆண்டுகள் இருந்தது. 

உள்ளூர் மக்களாலும் சுற்றுலாப் பயணிகளாலும் அதிகம் விரும்பப் பட்டதால் அந்த பூனை போட்டியின்றி பல தேர்தல்களை சந்தித்தது. 

பூனைகள் பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்ய உண்மைகள் !

மேயர் பூனை அல்லவா.! அதனால் அது சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டிருக்க வில்லை. ஒரு வீட்டுப் பூனை மணிக்கு 30 மைல் வேகத்தில் ஓடக்கூடியது மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உசைன் போல்ட்டை கூட வெல்லும் தன்மை கொண்டது.

பல்வேறு சத்துக்களை கொண்ட காளான் !
இதுவரை வாழ்ந்ததிலேயே மிக அதிக வயது வாழந்த பூனையின் பெயர் க்ரீம் பஃப் (Creme Puff). இது 38 ஆண்டுகள் மற்றும் 3 நாட்கள் வாழ்ந்தது. ஆகஸ்ட் 3, 1967 இல் பிறந்த இந்த பூனை ஆகஸ்ட் 6 வரை உயிர் வாழ்ந்தது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)