கர்ப்பிணிப் பெண்களே வைட்டமின்-டி சத்துக்கள் நிறைந்த மீன் சாப்பிடுங்கள் !

0

கர்ப்பிணிப் பெண்கள் மீன் வகை உணவுகளைச் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களே வைட்டமின்-டி சத்துக்கள் நிறைந்த மீன் சாப்பிடுங்கள் !
இங்கிலாந்து நாட்டின் மெட்ரோபாலி ட்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு மையமும் இணைந்து, கர்ப்பிணிப் பெண்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டன. 

இதற்காக 11 ஆயிரத்து 875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 

இதன் முடிவில் கர்ப்ப காலத்தில் மீன் வகை உணவுகளை அதிகம் சாப்பிட்டால், பிறக்கும் குழந்தைகள் அதிக மூளை வளர்ச்சியுடனும், 

மூளை சம்பந்தமான நோய்கள் தாக்காமலும் இருக்கும் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு அதிசயம் திருக்குர்ஆன் !

இந்த ஆய்வானது கர்ப்பிணிகளிடமும், அவர்களுக்கு குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து நடத்தப் பட்டது. 

அதில், கர்பகாலத்தின் போது அதிக மீன் உணவுகளைச் சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகள் அதிக புத்திக் கூர்மையுடனும் 

அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுத்தும் தகவல் தொடர்பும் மிகச்சிறப்பாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இதற்கு முக்கிய காரணம், குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குக் காரணமான ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட் மீன்களில் அதிகமாக இருப் பதுதான். 

கர்ப்பிணிப் பெண்களின் 32 வார கர்ப்ப காலத்தில் 340 கிராமிற்கு குறைவாக மீன் உட்கொண்ட கர்ப்பிணிக் குழந்தைகளின் புத்திக்கூர்மை சற்று குறைவாகவே இருந்தது. 

அதே நேரம் குழந்தைகளின் உடம்பில் ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட் அளவுக்கு அதிகமாக இருந்தால் குழந்தைகளின் புத்திக் கூர்மை மழுங்கவும் வாய்ப்புள்ளது. 

ஹீரோ டெர்மா பிக்மென்டோஸம் & புற ஊதாக் கதிர்களால் வரும் தோல் நோய் காலையில் வெளிப்படும் சூரிய வெளிச்சத்தினால் நமக்கு கால்சியம், ‘வைட்டமின்-டி’ போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன. 

உங்கள் மேக்கப்பை கச்சிதமாக்க ஒரு செல்லோடேப் போதும் !

அதே சமயம், சூரிய ஒளியின் மிகையான வெப்பத்தால், பல்வேறு நோய்களும் தோன்றுகின்றன. அப்படி ஏற்படும் நோய்களில் ஒன்று தான் ஹீரோடெர்மா பிக்மென் டோஸம்.

இந்த நோயினால் பாதிக்கப் பட்டவர்களின் உடல் அமைப்பு சாதாரண மனிதர்களின் உடல் அமைப்பு போல் அல்லாமல் வேறுபட்டு இருக்கும். 

இது ஒரு அபூர்வ நோய். உடைகளால் மூடப்படாத இடங்களில் தான் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முதலில் படிப்படியாக தோலின் நிறம் மாறும். 

பின்னர் முகம் மற்றும் தோலின் கை கால்களில் அருவருக்கத் தக்க வகையில், திட்டுத் திட்டாக கரும்புள்ளிகள் தோன்றும். 

அதைத் தொடர்ந்து கொப்புளங்கள் ஏற்படும். இவை கடுமையான வலியை ஏற்படுத்தும். சில நாட்களில் அவை மறைந்து, தோல் நலிவடைந்து விடும். 

அப்போது, அந்தப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடையும். இந்த நிலையில் சூரிய ஒளிபட நேர்ந்தால், பாதிப்புகள் அதிகமாக இருக்கும். 

கர்ப்பிணிப் பெண்களே வைட்டமின்-டி சத்துக்கள் நிறைந்த மீன் சாப்பிடுங்கள் !

இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பகல் நேரத்தில் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண்களில் கூச்சம் எடுக்கும். இவர்களுக்கு சூரிய ஒளி தாக்கத்தினால் கருவிழிப் படலத்தில் அழற்சியும் ஏற்படலாம்.

இந்த ஹீரோ டெர்மா பிக்மென்டோஸம் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களது தோலை சூரிய ஒளிபடாத வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

மத்தவங்க முன்னாடி சும்மா கெத்தா இருக்கணுமா? படிங்க !

மேலும், இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வர வேண்டும். 

தோலில் புடைப்பு மற்றும் பாதிப்பு உள்ளவர்களுக்கு சூரிய ஒளியில் இருந்து வெளியேறும் புறஊதாக் கதிர்களால் தோல் புற்றுநோய் கூட ஏற்படலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings