ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மூட்டு நோய்க்கு வழிவகுக்கும்... எச்சரிக்கை !

0

இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை சப்தமில்லாமல் ஆட்டிப் படைக்கும் நோய். முன்பெல்லாம் மூட்டு நோய் வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. 

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மூட்டு நோய்க்கு வழிவகுக்கும்... எச்சரிக்கை !
ஆனால் வளர்ந்து வரும் நவீன உலகில் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை காரணமாக இளைஞர்களிடமும் மூட்டு நோய் பிரச்சனை காணப்படுகிறது.

இது ஒரு பொதுவான நோயாக இருந்தாலும், மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், இதன் அறிகுறிகளை அலட்சியம் செய்வதால் பின்நாளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !

மூட்டுநோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டு தோறும் அக்டோபர் 12 (இன்று) உலக மூட்டு நோய் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

மூட்டு நோய்களின் வகைகள் :

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மூட்டு நோய்க்கு வழிவகுக்கும்... எச்சரிக்கை !

100 க்கும் மேற்பட்ட மூட்டுநோய் வகைகள் உள்ளன. முதுமை மூட்டழற்சி என்பது வயது ஆக ஆக குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாவது ஆகும்.

ருமட்டாய்டு மூட்டுநோய், இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. 

நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களே மூட்டுப் பகுதியைத் தாக்கி வீக்கம், வலி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

குழந்தைகளை உண்ணும் துரித உணவிலிருந்து காப்பாற்றுங்கள் !

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் :

இது நோய்க் கிருமிகள் மற்றும் மூப்பு, மூட்டு இணைப்புகளில் அடிபடுவதால் ஏற்படுகிறது. 

ருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் :

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உடலுக்கு எதிராகவே இயங்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது. 

செப்டிக் ஆர்த்ரைட்டிஸ் :

மூட்டு இணைப்புகளை நோய்க் கிருமிகள் தாக்கும் போது ஏற்படுகிறது. 

கௌட்டி ஆர்த்ரைட்டிஸ் :

இது யூரிக் அமிலத்தின் படிமங்கள் மூட்டு இணைப்புகளில் படிவதால் ஏற்படுகிறது. 

மன அழுத்தம் எவ்வகையான மூட்டு நோயையும் அதிகப் படுத்துவதோடு, இதுவே நோய் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணமாகவும் அமைவதாக ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

நோய்க்கான காரணம், சிகிச்சை:

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மூட்டு நோய்க்கு வழிவகுக்கும்... எச்சரிக்கை !
மூட்டுநோய் பிரச்னை உடலில் காயம், நோயெதிர்ப்பு மண்டலத்தின் முறையற்ற செயல்பாடு, பரம்பரை நோயாக இருப்பது, அறுவை சிகிச்சை காரணமாகவும் வரலாம்.

மூட்டுநோயின் முக்கிய அறிகுறிகள் மூட்டுகள், உடலில் வலி, வீக்கம், விறைப்பு, கை மற்றும் கால்களை அசைப்பதில் அசௌகரியம், காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும். 

மூட்டு நோயின் வகைகளைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.

கிட்னி கல் என்றால் என்ன? உருவாக காரணம் என்ன?

மூட்டு நோய் வராமல் தடுப்பது எப்படி?

சீரான உணவு முறை, ஆரோக்கியமான உணவு உட்கொள்வது மிகவும் முக்கியம். காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை உணவு பழக்கத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். 

இது தவிர தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளலாம். அதிகாலையில் 20 - 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது மூட்டு நோயிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளும் வழிகளாகும். 

ஆரோக்கியமான உணவு 

ஒருவருக்கு மூட்டு வலி வருவதில் அவருடைய உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், சர்க்கரை, உப்பு, கரையக் கூடிய கொழுப்புகள் ஆகியவை சரியான விகிதத்தில் அடங்கிய ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும். 

வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) சரியான அளவில் நம் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

சமைக்காத பச்சைக் காய்கறிகள்/பழங்கள்/இயற்கை உணவுகள் இந்த நோய்க்கு அருமருந்தாக விளங்குகிறது. கிழங்கு வகைகள் தவிர்த்தல் வேண்டும்.

யோகாசனங்கள்

ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மூட்டு நோய்க்கு வழிவகுக்கும்... எச்சரிக்கை !

யோகாசனங்கள் செய்பவரின் மூட்டு இணைப்புகள் அசாதாரணமான சூழ்நிலைகளிலும் இயல்பாகச் செயல்படுவதால் மூட்டு தசைகள் விறைப்படைவது குறைகிறது. 

உடலில் யூரிக் அமிலத்தின் அளவை யோகப் பயிற்சிகள் ஒழுங்கு படுத்துகின்றன. யோகப் பயிற்சிகள் மூலம் உடற்பருமன் அடைவதைத் தடுக்க முடியும். 

நீரிழிவு என்றால் என்ன? நீரிழிவின் வகைகள் யாவை?

யோகா மூலம் கிடைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இந்த எதிர்ப்புச்சக்தி மூட்டு வலியிலிருந்து மட்டுமல்லாமல் மற்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !