நாம் உயிர் வாழ்வதற்கும் தொழிற்படுவதற்கும் எமக்கு சக்தி தேவை. இச்சக்தி பிரதானமாக நாம் சாப்பிடும் மாப்பொருள் சமிபாடு அடைந்து உருவாகும் குளுக்கோஸில் இருந்து பெறப்படுகின்றது.  
நீரிழிவு என்றால் என்ன? நீரிழிவின் வகைகள் யாவை?
இந்த குளுக்கோஸ் எமது இரத்தத்தில் ஒரு சீரான மட்டத்தில் பேணப்படும். 

குளுக்கோஸை எமது உயிர்க்கலங்கள் பயன்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் போது இரத்தத்தில் குளுக்கோஸின் மட்டம் சாதாரண அளவை விட அதிகரிக்கும்.

இந்நிலைமை நீரிழிவு என்று அழைக்கப் படுகின்றது. கலங்களினால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த இன்சுலின் (Insulin) எனும் ஓமோன் உதவி செய்கின்றது.

இன்சுலின் என்றால் என்ன?

இது ஒருவகை ஓமோன். இது எமது உடலில் உள்ள சதையீ என்னும் சுரப்பியால் சுரக்கப்படுகின்ற சுரப்பு. 

இச்சுரப்பானது எமது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடற் கலங்கள் பயன்படுத்த உதவி செய்கின்றது.

நீரிழிவின் வகைகள்:

1.இன்சுலினில் தங்கியுள்ள நீரிழிவு (insulin dependent diabetes mellitus)

2.இன்சுலினில் தங்கியிராத நீரிழிவு (Non-insulin dependent diabetes mellitus)

3.கர்ப்ப காலங்களில் ஏற்படும் நீரிழிவு (Gestational diabetes mellitus)

இன்சுலினில் தங்கியுள்ள நீரிழிவு (insulin dependent diabetes mellitus)

இது வகை 1 எனவும் அழைக்கப்படும். சதையீயில் உள்ள இன்சுலின் சுரக்கும் கலங்கள் முற்றாகத் தொழிற்படாமல் அல்லது குறிப்பிடத்தக்க அளவு அழிக்கப் படுவதினால் உருவாகும். 
நீரிழிவு என்றால் என்ன? நீரிழிவின் வகைகள் யாவை?
அனேகமாக சிறுவயதில் தோன்றும். இவர்கள் உயிர் வாழ்வதற்கு வாழ்க்கைக் காலம் முழுவதும் இன்சுலினை ஏற்றுதல் வேண்டும். 

இன்சுலின் தங்கியுள்ள நீரிழிவு உடையவர் களுக்கு சிபார்சு செய்யப்பட்ட குருதி குளுக்கோஸின் அளவு.

சாப்பிடுவதற்கு  முன்பு:

90-120 மில்லி கிராமம்/லீட்டர்

சாப்பிட்ட 2 மணித்தியால ங்களின் பின்பு:

35-160 மில்லி கிராம் / லீட்டர்.

இன்சுலினில் தங்கியிராத நீரிழிவு (Non-insulin dependent diabetes mellitus)

இது வகை 2 எனவும் அழைக்கப்படும்.

இது அதிகமாக வயது வந்தவர்களில் ஏற்படும் நீரிழிவாகும். பொருவாக 35 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏற்படலாம்.

இது இன்சுலின் செயல்படும் தன்மை, இன்சுலின் சுரக்கும் தன்மை ஆகியவற்றின் குறைபாடு காரணமாக ஏற்படுகின்றது. பொதுவாக இவர்களுக்கு இன்சுலின் வழங்க வேண்டியிருக்காது.

இது பின்வருவோரில் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.

அனேகமாக உடற்பருமன் கூடியவர்கள்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உடையவர்கள்.

உடற்பயிற்சி குறைவாக அல்லது வேலை குறைவாக செய்பவர்கள்.

மனவழுத்தம் உடையோர்.
கர்ப்ப காலத்தில் நீரிழிவிற் குள்ளானோர் / நிறை கூடிய (4kg) பிள்ளைகளை பெற்ற தாய்மார் / சிசு இறந்து பிறந்த தாய்மார். 

குடும்ப உறவினர்களில் நீரிழிவு நோய் உடையோர். குருதி அழுத்தம் அதிகம் உடையவர்கள். குருதியில் கொலஸ்ரோல் அதிகம் உடையவர்கள். 

மேற்குறிப்பிட் டோரும் 35 வயதிற்கு மேற்பட்ட எல்லோரும் குருதியின் குளுக்கோஸ் அளவை பரிசோதனை செய்து பார்த்தல் சிறந்தது.

இன்சுலின் தங்கியிராத நீரிழிவு உடையவர் களுக்கு சிபார்சு செய்யப்பட்ட குளுக்கோஸின் அளவு.

சாப்பிடுவதற்கு முன்பு:

90-110 மில்லிகிராம் / லீற்றர்.

சாப்பிட்ட 2 மணித்தியாலங்களின் பின்பு:

120-135 மில்லிகிராம் / லீற்றர்.

3.கர்ப்ப காலங்களில் ஏற்படும் நீரிழிவு (Gestational diabetes mellitus)
நீரிழிவு என்றால் என்ன? நீரிழிவின் வகைகள் யாவை?
இது கர்ப்ப காலங்களில் ஏற்படுவதாகும். இப் பெண்களினது வாழ்க்கையின் பிற்பகுதியில் இன்சுலினில் தங்கியிராத நீரிழிவு (வகை 2) வர வாய்ப்புக்கள் அதிகம். 

எனவே இவர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எதிர் காலத்தில் நீரிழிவு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

1.உடல் பருமன் அதிகரிப்பதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். (உடல் நிறையை வயது, உயரத்திற்கேற்ப பேண வேண்டும்).

2.ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

3.ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

4.இரத்தக் குளுக்கோஸ் பரிசோதனை வருடம் ஒரு தடைவை செய்து பார்க்க வேண்டும்.

நீரிழிவு என்றால் என்ன? 

நீரிழிவு நோயின் அறிகுறிகள் !

நீரழிவு நோயினால் ஏற்படும் சிக்கல்கள் (Complications) !