மூட்டுவலி என்பது மூட்டுக்களில் வீக்கம் ஏற்படுத லாகும். இவ்வலி, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும். ஆரம்பத்தில், உடலின் சிறிய மூட்டுக்களில் மாத்திரம் 
மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !
(அதாவது விரல் மூட்டுகள்) தொடங்கி, பின்னர் மற்ற மூட்டுக்களும் (கை மணிகட்டு, கால் முட்டி, விரல் இணைப்புகள் இந்நோயால் பாதிக்கப் படுகிறது.

காரணங்கள்

ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் வருவதற்கான குறிப்பான காரணம் இல்லை. இது மரபு, சுற்றுச்சூழல் மற்றும் ஹார்மோன் போன்ற காரணிகளின் கூட்டுச் செயலினால் நோய் தடுப்பாற்றலில் மாற்றம் ஏற்படுகிறது. 

அதாவது, நமது உடலில் உள்ள நோய்தடுப்பு மண்டலமானது தமது உடலில் உள்ள செல்களை தன்னுடையவைகள் என்று இனங்காணும் தன்மையினை இழக்கிறது. 

இதன் விளைவாக, தன் சொந்த செல்களையே அழிக்கின்றன. இவ்வாறு, மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டு பின்னர் மெதுவாக மூட்டுக்களை அழித்து, உருமாற்றத் தினை ஏற்படுத்துகிறது.
மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !
மரபுக் காரணிகள் நோயின் பாதிப்புத் தன்மையினை அதிகரிக்கிறது. ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் கும்பங்களில் வழி வழியாக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. 

சுற்றுச்சூழல் காரணிகள் நோய் பாதிப்பு ஏற்பட சாத்தியமுள்ள நபர்களில் இந்நோய் தொடங்குவதை அதிகரிக்கிறது. 
ஹார்மோன் காரணிகள் நோய் பெருகுவதை அதிகரிக் கிறது அல்லது குறைக்கிறது. இந்நோய், பெண்களில் மாதவிடாய் நிற்பதற்கு முந்தின காலங்களில் அதிகளவு ஏற்படுகிறது.

இடர் காரணிகள்

வயது - இந்நோய் எந்த வயதிலும் ஏற்படக்கூடிய நிலையில் இருந்தாலும், 20-40 வயதுகளில் அதிகளவில் ஏற்படுகிறது. 

பாலினம் - பெண்கள், மாதவிடாய் நிற்பதற்கு முந்தின காலங்களில் இந்நோயின் பாதிப்பானது ஆண்களை விட பெண்களில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. கையாளும் முறை

கையாள்வதின் நோக்கம்
மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !
மூட்டு வீக்கம் மற்றும் வலியினை குறைப்பது. நோய் பெருக்கத்தை தாமதிப்பது. 

மூட்டுக்களின் இயக்கத்தை குறைத்து பாதுகாப்பது மற்றும் மூட்டுகளில் ஏற்படும் உரு மாற்றத்தினை தடுத்துக் காப்பது.
இவைகளை சரீர மற்றும் மருத்துவ ரீதியான நோய் சிகிச்சை முறையினை இணைத்து கையாள்வதின் மூலமும், தேவைப் பட்டால் அறுவை சிகிச்சை யினை மேற்கொண்டும் அடையலாம்.

உடல் ரீதியான சிகிச்சை முறை
மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !
ஓய்வு எடுப்பதின் மூலம் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் தசைபிடிப்பு போன்ற வற்றை குறைக்கலாம். மூட்டுகளில் தேவையற்ற அசைவு களை குறைத்து ஓய்வு தருவதன் மூலம் வலியை குறைக்கலாம். 

ஊன்று கோல்கள், நடைபயிற்சி உபகரணங்கள் போன்ற வைகளை பயன்படுத்தி நோயுற்ற மூட்டு களைத் தாங்க வேண்டும்.

வலி மற்றும் வீக்கம் மேலும் அதிகரிக்காமல் காக்க, உடற்பயிற்சி செய்வது பயனளிக்கக் கூடிய முக்கிய பகுதி ஆகும். இம்முறை யினை மருத்து வருடைய ஆலோசனை யின் படி செய்ய வேண்டும். 
பாதிக்கப்பட்ட கால் மூட்டுகளில் ஏற்படக் கூடிய அழுத்தத்தினை குறைக்க, உடல் எடையை சரியாய் பேணிக் காப்பது அவசியம்.