துபாயில் பணிபுரியும் நபர் வேறொரு நிறுவனத்தில் பணிபுரியலாமா? சட்டம் சொல்வது என்ன?

0

துபாயில் பணிபுரிந்து வரும் ஒரு நபர் வருடாந்திர விடுப்பில் இருக்கும் போது துபாயை சேர்ந்த மற்றொரு நிறுவனத்தின் ஒரு ப்ராஜெக்டில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், 

துபாயில் பணிபுரியும் நபர் வேறொரு நிறுவனத்தில் பணிபுரியலாமா? சட்டம் சொல்வது என்ன?
அந்த பணியை செய்வது சட்டபூர்வமானதா? இல்லை அது சட்டத்திற்கு புறம்பானதா? இவ்வாறு ஒரு நபர் தன்னுடைய வருமானத்தை பெருக்கிக் கொள்வதற்காக 

பகுதி நேர வேலையை பார்த்து வருமானத்தை அதிகரித்துக் கொள்ள விரும்பினால் ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டம் மற்றும் 

எந்த உணவை ஃபிரிட்ஜில் வைக்கலாம்?

அதனுடைய நிர்வாக விதிமுறைகள் எவற்றை யெல்லாம் அனுமதிக்கும் எவற்றை யெல்லாம் அனுமதிக்காது என்பதை பற்றி புரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். 

புதிய அமீரகத் தொழிலாளர் சட்டம் 2021 ஃபெடரல் ஆணை சட்டம் என் 33 படி ஒரு நபர் தன்னுடைய வருடாந்திர விடுப்பின் போது 

வேறு நிறுவனத்தில் வேலை செய்வதை வெளிப்படையாக தடை செய்யவில்லை. 

அதாவது அந்த நபர் தன்னுடைய பிறந்த விரிப்பின் போது வேறொரு முதலாளிக்கு அல்லது நிறுவனத்திற்கு வேலை செய்ய முடிந்தால் 

அத்தகைய செயலை தடை செய்வது குறித்த எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்று துபாயை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனமான ஏடிஜி லீகல் இன் அசோசியேட் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தடை என்பது அந்த முதலாளிக்கும் அந்த தொழிலாளிக்கும் இடையிலான வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை பொறுத்தது. 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரு நபருக்கு வேலை வழங்கக்கூடிய இரண்டாவது நிறுவனமானது 

புற்றுநோயை தவிர்க்க சாப்பிட கூடாத உணவுகள் !

புதிய தொழிலாளர் சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் சட்டையின் 29 இன் படி வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வதிவிடச் சட்டத்தின் கீழ் 

பணி அனுமதி அளவுகோல்களின் விதிகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

வருடாந்திர விடுப்பின் போது பகுதிநேர வேலை செய்ய விரும்பினால் என்ன நடக்கும்? வழக்கறிஞர் ஒருவரின் கூற்றுப்படி, 

இந்த வேலை முறையாக செய்யப்படும் வரை, மற்றொரு முதலாளியிடம் அல்லது நிறுவனத்திடம் வேலை செய்வது சட்டப்பூர்வமானதாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின் கீழ், ஊழியர்கள் தனது முழுநேர வேலை செய்யும் நிறுவனத்துடன் கூடுதலாக இப்போது பகுதி நேரமாகவோ 

அல்லது தற்காலிக அடிப்படையிலோ வேலை செய்யலாம். இருப்பினும், அதற்கு தற்காலிக பணி அனுமதி (work permit) தேவையாகும். இது இரண்டாவது முதலாளி அல்லது நிறுவனத்தால் பெறப்பட வேண்டும். 

அத்தகைய பணி அனுமதியைப் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று தற்போதைய முதலாளியிடமிருந்து அல்லது நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது (NOC) ஆகும். 

தேனில் ஊற வைத்த பூண்டின் நன்மைகள் !

எனவே, இது தொடர்புடைய விதிமுறைகளில், ஒரு ஊழியர் தற்போதைய நிறுவனத்திடம் இருந்து NOC வைத்திருக்கும் வரை, மற்றொரு நிறுவனத்தில் வேலை செய்வது சட்டப்பூர்வமானது என்று கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக வேலை செய்ததற்கான அபராதம்பகுதிநேர வேலை செய்வதற்கு உண்டான சட்ட செயல்முறையைப் பின்பற்றத் தவறினால், 

துபாயில் பணிபுரியும் நபர் வேறொரு நிறுவனத்தில் பணிபுரியலாமா? சட்டம் சொல்வது என்ன?

ஒரு தொழிலாளியை சட்டவிரோதமாக பணியமர்த்தியதாகக் கண்டறியப்பட்ட தொழிலாளிக்கும் முதலாளிக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சரியான பணி அனுமதி இல்லாமல் பணிபுரிவதற்கான அபராதம் 50,000 திர்ஹம் முதல் 200,000 திர்ஹம் வரை இருக்கும் என்றும், 

மணிக்கட்டு இப்படி இருந்தால் உடனே டாக்டர பாருங்க !

இது தொழிலாளி மற்றும் இரண்டாவதாக பணிபுரிய அனுமதித்த முதலாளி ஆகிய இருவருக்கும் பொருந்தும். 

மேலும், சட்டத்தை மீறுவது, முன்னறிவிப்பின்றி தொழிலாளரை பணிநீக்கம் செய்வதற்கான உரிமையை முதன்மை முதலாளிக்கு வழங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings