ராஜஸ்தானில் நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மசாஜ் செய்வதாக கூறி நெதர்லாந்த் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் !
நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது ஜெய்ப்பூரில் உள்ள காதிபுராவில் மசாஜ் சேவை செய்யும் ஒரு நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

அந்த நபர், அப்பெண்ணுக்கு மசாஜ் செய்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இது குறித்து சிந்தி முகாம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் 4 மணி நேரத்தில் சந்தேக நபரை கைது செய்தனர். 

ஆட்டோவில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு !

குற்றம் சாட்டப்பட்டவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் கேரளாகவுக்கு தப்பி சென்ற போது போலீசாரிடம் சிக்கினார். அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.