எலும்பு வலுவிழப்பு நோய் என்றால் என்ன?

0

ஐம்பது வயதைக் கடந்து விட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டு வலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி நிற்கும்.
எலும்பு வலுவிழப்பு நோய் என்றால் என்ன?
இப்போது புதிதாக ஆஸ்டியோ போரோசிஸ் (Osteoporosis) என்று ஆங்கில மருத்துவர் களால் அழைக்கப் படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.
அதிலும் குறிப்பாக மாதவிலக்கு நின்ற பெண் களுக்கு, இந்த நோய் அதிகப் பாதிப்பைத் தருகிறது.

உடலுழைப்பு குறைந்து போனது, உடற் பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவு முறையைப் பின் பற்றுவது 

போன்ற பல காரணங்களால், இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்து வருகிறது.

எலும்பு வலுவிழப்பு நோய் என்றால் என்ன?
எலும்பு வலுவிழப்பு நோய் என்றால் என்ன?
நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள் தான் உடல் உறுப்பு களையும் தாங்கிப் பிடிக்கின்றன. 

நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங் களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன.
மைக்ரோவேவில் எந்த மாதிரியான பாத்திரம் பயன்படுத்தலாம்?
இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடை வெளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. 

எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப் பட்டு, புதிய செல்கள் உற்பத்தி யாகின்றன.

இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக, இது மெதுவாக நிகழும்.

பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும்.

அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’.

ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது, அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். 

இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும்.

நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. 
இதைத் தான் எலும்பு வலுவிழப்பு நோய் என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.

காரணங்கள்
எலும்பு வலுவிழப்பு நோய் என்றால் என்ன?
எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம்.
வெப்பம் உண்டாக்கும் கருவி !
முதுமையில் ஆண், பெண் இரு பாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது.

பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்து விடுவதால், 

இவர்களுக்கு எலும்பு பலவீனம் அடைந்து எலும்பு வலுவிழப்பு நோய் வந்து விடுகிறது.

அடுத்துப் புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலவற்றால் இந்த நோய் வருகிறது.

பரம்பரை ரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவ ளியாகவும் அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். 

வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவை சிகிச்சை போன்ற வற்றின் காரணமாகத் தேவையான ஊட்ட ச்சத்துள்ள 
உணவை நெடுங்காலம் சாப்பிடாத வர்களுக்குக் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும்.

இந்த இரண்டு ஊட்டச் சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. 

எனவே, இந்தச் சத்துகள் குறையும் போது இவர்களுக்குக் காலப் போக்கில் எலும்பு வலுவிழப்பு நோய் வருவதுண்டு.

இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து

பல வருடங் களுக்கு எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. 

ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் பலவீனமாக இருக்கும் என்பதால்,

இவர்களு க்கு முதுமையில் எலும்பு வலுவிழப்பு நோய் விரைவில் வந்து விடும். 
அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன் களின் அதீதச் செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவ துண்டு.

என்னென்ன தொல்லைகள்?
பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக் குள்ளேயே மறைந் திருந்து,

இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும் போது தான், இந்த நோயின் விளை வாகவே எலும்பு முறிவு ஏற்பட் டுள்ளது என்று தெரியவரும்.

கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவது தான் இந்த நோயின் தனித் தன்மை. 

இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில் தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings