எலும்பு வலுவிழப்பு நோய் பரிசோதனை என்ன?





எலும்பு வலுவிழப்பு நோய் பரிசோதனை என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
ஐம்பது வயதைக் கடந்து விட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டு வலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி நிற்கும்.
எலும்பு வலுவிழப்பு நோய் பரிசோதனை என்ன?
இப்போது புதிதாக ஆஸ்டியோ போரோசிஸ் (Osteoporosis) என்று ஆங்கில மருத்துவர் களால் அழைக்கப் படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாக மாதவிலக்கு நின்ற பெண் களுக்கு, இந்த நோய் அதிகப் பாதிப்பைத் தருகிறது.

உடலுழைப்பு குறைந்து போனது, உடற் பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவு முறையைப் பின் பற்றுவது 

போன்ற பல காரணங்களால், இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்து வருகிறது.
என்னென்ன பரிசோதனைகள்?
  
1. எலும்பு எக்ஸ்-ரே
எலும்பு வலுவிழப்பு நோய் பரிசோதனை என்ன?
முன்பெல்லாம் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து, இந்த நோய் இருப்பதைக் கணிப்பது தான் வழக்கத்தில் இருந்தது.

பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலு விழந்தால் தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும்.

ஆனால் அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு விடும் என்பதால் 

இந்தப் பரிசோ தனையைக் கொண்டு நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது.

எனவே, இப்போது இந்தப் பரிசோத னையைப் பல மருத்துவர்கள் முதல் நிலைப் பரிசோதனை யாக வைத்துக் கொள்வ தில்லை.
2 . டெக்சா ஸ்கேன்
எலும்பு வலுவிழப்பு நோய் பரிசோதனை என்ன?
எலும்பு வலுவிழப்பு நோயைத் துல்லிய மாகக் கண்டறிய டெக்சா ஸ்கேன் (Dua# X-ray absorptiometry Scan - Dexa Scan) எனும் பரிசோதனை இப்போது வந்துள்ளது. 

இது எக்ஸ்-ரே பரிசோதனையை விடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடை வெளியில் 

மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும்.

இது எலும்பின் அடர்த்தியை அதாவது திண்ம அளவை - (Bone Minera# Density BMD) அளக்கும் பரிசோதனை.

இதுவும் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகளு க்குள் எக்ஸ்ரே கதிர்களைச் செலுத்தி எடுக்கப்படும் பரிசோதனை தான். 

ஆனால், இதன் கதிர்வீச்சு அளவு மிகவும் குறைவு என்பதால், இதை அடிக்கடி எடுத்தாலும் பக்க விளைவு ஏற்படுவதில்லை. 
10 நிமிடங்களில் முடிவு தெரிந்து விடும். வலி எதுவு மில்லாமல் இருப்பது, இதன் கூடுதல் பலன்.

எலும்பு முறிவு ஏற்படு வதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவை இது சொல்லி விடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல் கிறார்கள்.

இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால், அது இயல்பு அளவு.
எலும்பு வலுவிழப்பு நோய் பரிசோதனை என்ன?
பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 2 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப் பட்டதாக இருந்தால், அது எலும்புத் திண்மக் குறைவு நோயை (Osteopenia) குறிக்கும்.

மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால், அது எலும்பு வலுவிழப்பு நோயை (Osteoporosis) குறிக்கும்.

இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப் புள்ளதா என்பதையும் அனுமானித்து விடலாம். 

எலும்பின் திண்ம அளவைத் தெரிந்து கொண்டு, சிகிச்சையை மேற் கொள்கிறவர் களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 
ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால், அனை வராலும் இந்தப் பரிசோத னையைச் செய்து கொள்ள முடியாது.

ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் - டி அளவுகளைத் தெரிந்து கொண்டும், இந்த நோயை ஓரளவுக்கு அனுமானி க்கலாம்.

டெக்சா ஸ்கேனை எத்தனை முறை செய்ய வேண்டும்?

50 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 5 ஆண்டு களுக்கு ஒருமுறை இதைச் செய்து கொள்ள வேண்டும்.

எலும்புத் திண்மக் குறைவு நோயுள்ள வர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டும்.

எலும்பு வலு விழப்பு நோய்க்குச் சிகிச்சை பெற்றுவ ருபவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் எலும்பு எப்படி இருக்கிறது?
எலும்பு வலுவிழப்பு நோய் பரிசோதனை என்ன?
உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர்

என்ற அளவிலும் எலும்பு வலுவிழப்பு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். 

எனவே, இந்த நோயை ஆரம்பத் திலேயே கண்டறி வதற்காகச் சர்வதேச ஆஸ்டியோ போரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது.

அதற்கு எலும்பு வலுவிழப்பு நோய் வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிட அனுமானச் சோதனை’ (One minute osteoporosis risk test) என்று பெயர்.
கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள்:
எலும்பு வலுவிழப்பு நோய் பரிசோதனை என்ன?
உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாகத் தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடி பட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டி ருக்கிறதா?

லேசாகத் தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடி பட்டதும், உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிரு க்கிறதா?

உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்று விட்டதா?

உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்து விட்டதா?

அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா?

அதிகமாகப் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதா?

மிகைத் தைராய்டு பிரச்சினை உள்ளதா?

ருமட்டாய்டு எலும்பு மூட்டு வலி உள்ளதா?
ஸ்டீராய்டு மாத்திரைகள், வலிப்பு மாத்திரைகள், கர்ப்பத் தடை மாத்திரை களை நீண்ட காலம் பயன் படுத்துகிறீர் களா?

இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்வி களுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால்

உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்து வரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
Tags: