இந்தியாவில் எங்கெல்லாம் இழு-தள்ளு (Push-Pull) ரயில் ஓடுகிறது?

0

இந்தியாவில் Push-pull தொழில்நுட்பத்தில் மும்பையிலிருந்து புதுதில்லி வரை இரயில் இயக்கப்படுகிறது.  

இந்தியாவில் எங்கெல்லாம் இழு-தள்ளு (Push-Pull) ரயில் ஓடுகிறது?
இந்த இரயிலின் சிறப்பம்சமாக இரயிலின் இரு எல்லைகளிலும் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 

அதன்படி ஒரு புறத்திலிருந்து என்ஜின் இழுக்க மறு புறத்திலுள்ள என்ஜின் உந்தித் தள்ளும். இதனால் இரயிலின் வேகம் கணிசமாக உயரும்.

இரவில் அசைவம் சாப்பிடுவது ஆபத்தா? 

மேலும் தற்போதுள்ள இரயில்களில் என்ஜின்களை முன்பின்னாக அவ்வப்போது மாற்றுவது போல் இதில் மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்படாது. இதனால் இதற்கான நேரம் மிச்சமாகும்.

மத்திய ரயில்வேயின் டெல்லி — மும்பை இடையே இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில் ஒன்றில் தான் இந்த அம்சம் முதன் முதலாக கொண்டு வரப்பட்டது. 

இது மத்திய அரசின் ராப்தார் திட்டப்படி கொண்டு வரப்பட்டது. இவ்வாறு இரயிலின் இருபுறமும் என்ஜின்கள் அமைக்கப்படுவதால் இரயிலின் வேகம் கணிசமாக அதிகரிக்க முடியும். 

எங்கள் வாழ்க்கையே சிவப்பு சொல்கிறார் பாலியல் தொழிலாளி !

மேலும் இரயிலை விரைவாக நிறுத்துதல், விரைவாக அதிக வேகத்தில் செலுத்துதல் போன்றவை இதனால் சாத்தியப்படும்.

இந்த வகை இரயில்கள்,

    மும்பை - டெல்லி

    ஹௌரா — டெல்லி

    மும்பை — புனே

ஆகிய இடங்களில் தற்போது இயக்கப்படுகின்றன. விரைவில் இதன் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

ரயில்வே வளர்ச்சி

* ஆற்காடு வேலை முடிந்ததும் அடுத்த இரண்டு வருடங்களில் குடியாத்தம் வரை ரயில் லைன் நீட்டப்பட்டது.

இந்தியாவில் எங்கெல்லாம் இழு-தள்ளு (Push-Pull) ரயில் ஓடுகிறது?
* இங்கிருந்து 178 கிமீ தூரமுள்ள சேலம் வரை லைன் அமைத்தவர்கள் பிறகு கேரளாவிலுள்ள பேபூர் வரை நீட்டினர்.

உத்திட்ட திரிகோணாசனம் செய்வது எப்படி?

* அப்போது கிரேட் சௌத் இந்தியன் ரயில்வே மற்றும் கர்நாடிக் ரயில்வே என இரண்டு கம்பெனிகள் தென்னக ரயில்வே பணிகளில் கோலோச்சி வந்தன. 

இவை 1874ல் ஒன்று சேர்ந்து தென் இந்திய ரயில்வே என பெயர் மாற்றம் அடைந்தன.

* இந்த ரயில்வேதான் 1878ல் மெட்ராஸ் டூ தூத்துக்குடிக்கு தஞ்சாவூர், மதுரை வழியாக மீட்டர் கேஜ் பாதை அமைத்தது. பிறகு, இந்த ரயில்வேயை 1891ல் அரசே வாங்கியது.

* 1928ம் ஆண்டு தாம்பரத்துடன் துறைமுகத்தை இணைக்கும் இரண்டு மீட்டர் கேஜ் பாதைகளின் கட்டுமானம் தொடங்கியது.

அமிலப் பின்னோட்ட நோய் எப்படி ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?

* 1930களின் ஆரம்பத்தில் இதனை மின்சார ரயில் பாதையாக மாற்ற முடிவெடுத்து, எழும்பூரிலிருந்து பீச் வரை 

ஒரு புதிய பாதை அமைக்கப் பட்டதுடன் எழும்பூர் - தாம்பரம் பாதைகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன.

இந்தியாவில் எங்கெல்லாம் இழு-தள்ளு (Push-Pull) ரயில் ஓடுகிறது?
* 1944ல் எல்லா ரயில்வே நிறுவனங்களையும் அரசு கையகப்படுத்தியது.

* சுதந்திரத்திற்குப் பிறகு 1951ம் வருடம் மெட்ராஸ், தென்னக மராத்தா, தென் இந்தியா, மைசூர் மாநில ரயில்வே என

பிரிந்திருந்த ரயில்வே நிர்வாகம் ஒன்றிணைக்கபட்டு தென்னக ரயில்வே என உருவாக்கப்பட்டது.  

* பிறகு, இவை நிர்வாகக் காரணங்களுக்காக தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே என பிரிக்கப்பட்டன. 

சீனித் துளசி என்றால் என்ன? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புத் துளசி எனப்படும் சீனித் துளசி ! 

இன்று தென்னக ரயில்வே தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி முழுவதும் கொண்ட பகுதிகளையும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவி லுள்ள சிறு பகுதிகளுடனும் இயங்கி வருகிறது.

* மொத்த ரூட்களின் தூரம்  5080 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)