நமது உடலில் உள்ள கை கால்கள் மற்ற உடல் உறுப்புக்கள் கூட நாம் தூங்கும் நேரத்தில் வேலை செய்வதில்லை, 

உத்திட்ட திரிகோணாசனம் செய்வது எப்படி?
ஆனால் இதயம் அப்படியல்ல, நாம் தூங்கிக் கொண்டிருந்தாலும் அது ஓய்வு எடுப்பதில்லை, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும். 

நம் உடல் முழுக்க இரத்தத்தைச் சீராக அணைத்து இடத்திற்கும் அனுப்புவது போன்ற நம் உயிர் வாழ்வதற்கான முக்கியமான வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. 

நம் இதயத்தைப் பாதுகாப்பது மிக மிக அவசியமானது. இன்றைய எந்திர வாழ்க்கை, தவறான உணவுப் பழக்கம், அதீத மன உளைச்சல் போன்ற விஷயங்களால் நமது இதயம் பாதிப்புக்கு உள்ளாகிறது. 

இதனால் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற இதய சம்பந்தமான பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க யோகா பெரிதும் உதவுகிறது. 

தினமும் யோகா செய்து வந்தால் இதயம் சம்பந்தமான நோய்களிலிருந்து 100 சதவீதம் தப்பித்து விடலாம் என்று சொல்கிறார்கள்.

செய்முறை

உத்திட்ட திரிகோணாசனம்

முதலில் மேட்டிலிருந்து எழுந்து நின்று நேராக நின்று கொள்ள வேண்டும். பின்பு உங்கள் இரண்டு கால்களையும் லேசாக அகற்றிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது உங்களது இடது பாதத்தைச் சற்று வெளியேவும் உங்களது வலது பாதத்தைச் சற்று உள்ளேயும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக உங்களது முகத்தை நேராக வைத்துக் கொள்ள வேண்டும் பின்பு மூச்சை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும்.

உங்களது கைகளை மெதுவாக மேலே தூக்கி இரண்டு பக்கமும் விரித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உங்களது உடலின் மேல்பகுதி டீ போன்ற அமைப்பில் இருக்க வேண்டும்.

அடுத்ததாக மூச்சை வெளியே இழுத்து உங்களது இடது கையை கீழே அதாவது மூட்டு மற்றும் கணுக்கால் கீழே கொண்டு வர வேண்டும். 

இப்பொழுது உங்கள் உடல் பகுதியை முடிந்த வரை வளைத்து உங்களது வலது கையை தலைக்கு மேல் தூக்க வேண்டும். 

உங்களது விரல்நுனி மேற்கூரையை நோக்கி இருக்க வேண்டும். அடுத்து உங்களது உடல் தரைக்கு மேலே நேராக இருக்க வேண்டும். உங்கள் கழுத்து உங்கள் உடலுக்கு நேராக இருக்க வேண்டும். 

அடுத்து உங்களது வலது கையை பார்த்து இரண்டு அல்லது மூன்று முறை மூச்சை நன்றாக இழுத்து விட வேண்டும் அதே போன்று, மற்றொரு பக்கம் செய்ய வேண்டும்.

பலன்கள்

கால்கள், முழங்கால் தசைகள், கணுக்கால் இணைப்பு, இடுப்பு தசைகள், தொடை தசை, தோள், மார்பு மற்றும் முதுகுத்தண்டு பகுதிகள் விரிவடைகிறது. 

கால்கள், முழங்கால்கள், கணுக்கால் எலும்பு இணைப்புகள், அடிவயிற்று தசைகள் மற்றும் பின்பகுதி வலுவடைகிறது.

அடிவயிற்று உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது.