இரவில் அசைவம் சாப்பிடுவது ஆபத்தா?





இரவில் அசைவம் சாப்பிடுவது ஆபத்தா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
காலையில் லேசான இட்லி, இடியாப்பம், தோசை போன்ற உணவுகளை சாப்பிடுவதே பெரும்பாலும் தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. மதிய உணவாக சற்றே அதிக அளவு உணவைச் சாப்பிடுகிறோம். 
இரவில் அசைவம் சாப்பிடுவது ஆபத்தா?
சிலர் அசைவ உணவுகளையும், மீன் உணவுகளையும் சாப்பிடக்கூடும். வேறு சிலரோ, இரவு நேரத்தில் அசைவ உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். 

அசைவ உணவானது பொதுவாக ஜீரணிப்பதற்கு தாமதமாகும். தவிர அதிக அளவு எரியும் சக்தி அசைவ உணவுகளுக்குத் தேவைப்படலாம். 
எனவே பெரும்பாலும், இரவு நேரங்களில் சிக்கன், இறைச்சி, மீன் ஆகியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால் பலராலும் விரும்பி சாப்பிடப் படுகிறது. அதிலும் வெகு நேரமாகி பின்னிரவில் சாப்பிடுபவராக இருப்பின் அசைவ உணவு வேண்டவே வேண்டாம். 

ஆனால் இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும்.

நீங்கள் இரவில் இறைச்சி சாப்பிட்ட பின்பு உங்கள் உடல் உறுப்புகள் படும்பாடு தெரியுமா? உங்களுக்கு...

அது காணொளியாக உங்கள் கண்ணிற்கு தெரிந்தால் அன்று முதல் இரவில் மட்டுமல்ல பகலிலும் இறைச்சி உண்ண மாட்டிர்கள். 

அந்த அளவிற்கு நம் செரிமான மண்டலம் அவஸ்தைபடும்.. இரவில் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளே உட்கொள்ள வேண்டும். 

தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது. 
மேலும் உடல் நலத்துக்கும் தீங்கானது. செரிமானம் ஆகாமல் போகும் பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். 
இரவில் அசைவம் சாப்பிடுவது ஆபத்தா?
ஆஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப் பின் வாழைப் பழங்கள் சாப்பிடலாம். எனினும் பொது வாக இரவு நேரங்களில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை தவிர்ப்பதே சிறந்தது.
காலையில் ஏழையைப் போல் உண்! மதிய வேளையில் அரசனைப் போல் உண்! இரவில் ஓர் பிச்சைக்காரனைப் போல் உண். 

ஆனால் நாம் என்று நாவின் ருசிக்கு இடம் கொடுத்தமோ அன்றே இந்த வாக்கியங்கள் அப்படியே மாறி விட்டன. ருசிக்கு உண்ணாமல் பசிக்கு உண்ணுங்கள் உங்கள் உடல் நலம் மேம்படும்..
Tags: