கழுத்தில் கருநாக பாம்புடன் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் !

0

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கருநாகப் பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார்.

கழுத்தில் கருநாக பாம்புடன் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் !
இந்தியாவில் உள்ள சாதுக்களும் சன்னியாசிகளும் ஆண்டுதோறும் தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும் 

தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்த விரத நாட்களின் போது சன்னியாசிகள் ஏதேனும் ஒரு இடத்தில் தங்கி விரதத்தை கடைப்பிடிப்பார்கள். 

அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இந்த விரதத்தை மேற்கொண்டார்.

அவர் உத்தரப் பிரதேச மாநிலம் நைமிசாரண்யம் என்ற இயற்கை சூழல் மிகுந்த இடத்தில் தங்கியிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார். 

சுவைமிக்க மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி ?

அப்போது வடமாநிலங்களில் சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும் சாலையோரம் தங்கியிருக்கும் பாம்பாடிகள் பிடித்த பாம்பை மாலையாக அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஜீயர் சுவாமிகளுக்கு கொடிய விஷமுள்ள கருநாக பாம்பை அணிவித்து மரியாதை செய்தனர். 

இதை ஏற்ற மணவாள முனிகளும் அந்த பாம்பாடிகளுக்கு அருளாசி வழங்கினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

குழந்தைகளுக்கு பிடித்த ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

அதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். கோயில்களில் ஆகம விதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. 

கழுத்தில் கருநாக பாம்புடன் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் !

கோயில் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜீயர் தெரிவித்திருந்தார்.

அது போல் கடந்த 2018ஆம் ஆண்டு வைரமுத்துவை கண்டித்து நடந்த கூட்டத்தில் பேசிய ஜீயர், ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும். 

ஜீரண சக்திக்கு வெற்றிலை சாதம் செய்வது எப்படி?

சாமியார்களால் என்ன செய்துவிட முடியும் என நினைப்பவர்களுக்கு எதற்கும் தாங்கள் துணிந்தவர்கள் என்பதை காட்டுவோம். 

கல் எறியவும் சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும். ஆனால் அதை செய்ய மாட்டோம் என்றார். இவரது இந்த சோடா பாட்டில் பேச்சு பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)