கழுத்து வலி நீங்க உதவும் சில யோகாசனங்கள்... செய்து பாருங்கள் !

0

பலருக்கும் அடிக்கடி மிகவும் சாதாரணமாகவே கழுத்து வலி ஏற்படுகிறது. தொடர் அழுத்தம், சிறு காயங்கள் காரணமாக அடிக்கடி கழுத்து வலி வருகிறது. 

கழுத்து வலி நீங்க உதவும் சில யோகாசனங்கள்... செய்து பாருங்கள் !
கை, கால் வலிகளை போல் கழுத்து வலி, கழுத்து பிடிப்பு பிரச்சனைகளும் பொதுவான பிரச்சனைகளாக மாறி வருகின்றன. 

இதற்கு முக்கிய காரணம் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்வது, நாள் முழுவதும் நாற்காலி முன்பு அமர்ந்திருப்பது, 

வீட்டில் இருந்து வேலை செய்யும் போது சரியான பொஷிசனில் அமராமல் இருப்பது போன்ற காரணங்களால், கழுத்தை நேராக வைக்காமல் நம்மை அறியாமலேயே குறுக்கி வைக்கிறோம். 

இதனால், தசைகள் இறுகி கழுத்தில் பிடிப்பு அல்லது வலியை ஏற்படுத்துகின்றன. 

நமது தலை நேராக இருக்கும் போது 4 கிலோ எடை உள்ள எலும்புகளை நமது கழுத்து பகுதி தாங்கி கொள்ளும். 

இதுவே 15 டிகிரியில் கழுத்து குனியும் போது 12 கிலோ எடை, 30 டிகிரியில் 17 கிலோ, 45 டிகிரியில் 20 கிலோ எடையை கழுத்து சுமக்கிறது. 

கழுத்து வலி நீங்க உதவும் சில யோகா

கழுத்தின் வேறுபட்ட நிலைகள் தசை நார்களையும், எலும்புகளையும் பாதிக்கிறது.

கழுத்து வலியை போக்க உதவும் சில சிறப்பான யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த யோகாசனங்களைப் பார்த்து அவற்றை செய்து கழுத்து வலியில் இருந்து நிவாரணம் பெறுங்கள்.

1 . பாலாசனம் (குழந்தை போஸ்)

2 . நடராஜ ஆசனம் (சாய்ந்து முறுக்கும் போஸ்)

3 . மர்ஜார்யாசனம் (பூனை போஸ்)

4 . விபரீதகரணி ஆசனம் (கால்களை மேலே வைக்கும் போஸ்)

5 . உத்திட்டதிரிகோணாசனம் (நீட்டப்பட்ட முக்கோண போஸ்)

6 . சவாசனம் (பிண போஸ்)

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)