சுறுசுறுப்பாக இருக்க நடராஜ ஆசனம் செய்யுங்கள் !





சுறுசுறுப்பாக இருக்க நடராஜ ஆசனம் செய்யுங்கள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

உடல் அமைதிக்கு யோகாசனங்களை நம் சித்தர்கள் அளித்துள்ளார்கள். அதிகாலையில் யோகா என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

சுறுசுறுப்பாக இருக்க நடராஜ ஆசனம் செய்யுங்கள் !
பெரும்பாலான நேரங்களில், காலையில் செய்யும் யோகாவில் நீங்கள் மிகவும் கடினமான எதையும் செய்ய தேவையில்லை. படுக்கையில் ஒரு நல்ல ஆசனம் கூட உதவக்கூடும்.

நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கும் நிறைய ஆசனங்கள் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கும் 

தலை முதல் கால் வரை உள்ள உடல் உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்ய ஏற்ற ஆசனம் நலம் தரும் நடராஜ ஆசனம். 

இந்த ஒரு ஆசனத்தை காலை எழுந்தவுடன் பல் விளக்கி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி விட்டு விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று மூன்று முறை செய்யுங்கள்.

கூர்ந்து நோக்கும் திறனை அதிகப்படுத்தி அறிவின் வலிமையை மேம்படுத்தும். 

அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் முதுகுத்தண்டில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும். மார்பு, இடுப்பு, கால்களில் உள்ள தசைகளைச் சரி செய்து சரியான இயக்கத்திற்கு உதவும்.

செய்முறை

சுறுசுறுப்பாக இருக்க நடராஜ ஆசனம் செய்யுங்கள் !

முதலில் விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பின் நம்முடைய பார்வையை ஒரு இடத்தில் படுமாறு வைத்து இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும். 

பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக்காலை பிடிக்க வேண்டும். 

பின் மூச்சை இழுத்துக் கொண்டு  வலது காலை பின்புறமாக மேலே உயர்த்தும் போது, இடது கையை கீழே இறக்கி, இடது தோள் பட்டைக்கு முன்புறம் நீட்ட வேண்டும். 

பின் இடது கையின் கட்டை விரல் நுனியும், ஆள் காட்டி விரல் நுனியும் சேர்ந்திருக்க வேண்டும்.

பின் அதே நிலையில் சிறிது நேரம் இருந்து, மூச்சை வெளி விட்டுக் கொண்டே காலை விலக்கிப் பின், இடது கையை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். 

பிறகு காலை மாற்றிச் செய்ய வேண்டும். இரண்டு பக்கமும், இரண்டு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருவதால் கால் மூட்டுப் பகுதியை வலுவாக்கும். 

கால் மூட்டு வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது. மனம் ஒரு நிலையடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது.  நரம்புச் சுருள் பிரச்சனை சரியாகிறது.

பலன்கள்

தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சீராக இயங்குகின்றது.

தலை வலி வராது.

தோள்பட்டை வலி நீங்கும்.

கைகள் வலுப்பெறும்.

அஜீரணம், பசியின்மை நீங்கும்.

மூலம் நீங்கும்.

மலச்சிக்கல் நீங்கும்.

தொடை தசைகள் வலுப்பெறும்.

அழகான தோற்றம் உண்டாகும்.

கால் பாதவலி நீங்கும்.

நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

மூட்டுக்கள் பலம் பெறும்.

மூட்டு வலி மூட்டு தேய்மானம் வராது.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

கழிவுகள் வெளியேறும்.

சுறுசுறுப்பாக திகழலாம்.

முதுகு கூன் நிமிரும், முதுகெலும்பு வலுப்பெறும்.

உடல் வசியம் ஏற்படும்.

இவ்வளவு நலன்கள் இந்த ஒரு ஆசனத்தில் இருப்பதால் தான் இதனை நலம் தரும் நடராஜ ஆசனம் என்று அழைக்கிறோம். 

நமது சித்தர்கள் இந்த ஆசனத்தின் மூலம் மனித உடலில் உள்ள 72000- நாடி நரம்புகளுக்கும் ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும் என்கிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)