மகளை பக்கத்து வீட்டுக்காரரிடம் பெற்றோரே விற்ற சம்பவம் ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

மகளை பக்கத்து வீட்டுக்காரரிடம் பெற்றோரே விற்ற சம்பவம் !

12 வயதான பெற்ற மகளை ரூ.10 ஆயிரத்துக்கு 46 வயதான பக்கத்து வீட்டுக்காரரிடம் பெற்றோரே விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகளை பக்கத்து வீட்டுக்காரரிடம் பெற்றோரே விற்றனர்
12 வயது சிறுமிக்கு ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டூரில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக சமூக நல மேம்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து 

நடத்திய விசாரணையில் 12 வயது சிறுமியை 46 வயதான சின்ன சுப்பையா என்பவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது தெரிய வந்தது. 

இதையடுத்து சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள் சிறுமியை மீட்டு குழந்தை திருமணம் செய்த சின்ன சுப்பையாவை காவல் துறையினரிடம் ஒப்படைத்த பின் 

அட 5 பைசா' பிரியாணியா? - ரகசியம் சொல்லும் தொப்பி வாப்பா !

சின்ன சுப்பையாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் 12 வயது சிறுமியின் உடன் பிறந்த 16 வயது பெண் அதாவது பெற்றோரின் மூத்த மகளுக்கு சுவாச நோய்ப் பாதிப்பு இருக்கும் நிலையில்,

அவரின் சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதை 12 வயதான இளைய மகள் மீது அதிக விருப்பம் வைத்த பக்கத்து வீட்டு சின்ன சுப்பையா அறிந்து கொண்டு அவ்வப்போது சிறுசிறு பண உதவி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைத்தால் ரூ.10 ஆயிரம் தருவதாக சிறுமியின் பெற்றோர் இடம் கூறி சம்மதிக்க வைத்து சிறுமியின் விருப்பம் இல்லாமல் 

அவரை திருமணம் செய்துள்ளார் சின்ன சுப்பையா. இதை யடுத்து சின்ன சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர்.