நள்ளிரவில் டீலிங்... அமித்ஷா பேசியது என்ன.. பரபரப்பு தகவல் ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

நள்ளிரவில் டீலிங்... அமித்ஷா பேசியது என்ன.. பரபரப்பு தகவல் !

பாஜகவுடன் அதிமுகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட வில்லை. சீட் எவ்வளவு என்பதும் இழு பறியாக இருக்கிறது. 6 மாதமாகவே கூட்டணியில் இது தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டல்
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு விசிட் அடித்து வருகின்றனர்.

குறிப்பாக அமித் ஷாவும், மோடியும் தமிழ் நாட்டையும், புதுச்சேரியையும் சுற்றி சுற்றி வருகின்றனர். 

சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. காதலிக்காக கணவன் கொலை !

அந்த வகையில் நேற்று புதுச்சேரி, விழுப்புரத்தில் அமித் ஷா பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின் இரவு பத்து மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு வந்தார்.

அவர் வருவதற்கு முன்பாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஹோட்டலுக்கு வந்தனர். அமித் ஷா வந்த பின்னர் தொகுதி உடன்பாடு குறித்துப் பேசினர்.

எடப்பாடியாருடன் பேச்சு வார்த்தை

எடுத்த எடுப்பிலேயே 35 சீட் என்று தான் ஆரம்பித்தாராம் அமித்ஷா. அடுத்து 30 சீட் என்று பேச்சை தொடர்ந்துள்ளார். பாமகவுக்கு தந்தது போலவே தங்களுக்கும் சீட் அதிகமாக வேண்டும் என்பது தான் பாஜக தலைமையின் டிமாண்ட். 

ஆனால், அந்த அளவுக்கு அதிமுகவில் தர சான்ஸ் இல்லை என்கிறார்கள். வேண்டுமானால் 20 - முதல் 25 இடங்கள் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் தமிழக பாஜகவினர்.

பீச்சில் பிறந்தநாள் - ஹாட் போட்டோ வெளியிட்ட நாகினி

10 மணிக்கு ஹோட்டலுக்கு அமித்ஷா வந்துள்ளார். ஆனால், 1 மணிக்கு தான் கிளம்பி டெல்லி சென்றுள்ளார். நள்ளிரவு வரை ஓபிஎஸ், எடப்பாடியாருடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறுகிறார்கள். 

எத்தனையோ முறை சீட் ஒதுக்கீடு பற்றி பேசி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் இவ்வளவு நேரம் ஆனதில்லை. 

கொஞ்ச நாட்களாகவே சசிகலா விவகாரத்தை பாஜக ஆரம்பிக்கவே இல்லை என்பதால், அது தொடர்பாகவும் பேசியிருக்க வாய்ப்பிருக்காது. 

அமித் ஷா பேசி விட்டு தான் டெல்லி சென்றுள்ளார்

அப்படியானால், வெறும் தொகுதி உடன்பாட்டை மட்டுமா இவ்வளவு நேரம் பேசியிருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது.

அதாவது அதிமுக கட்சி குறித்து அமித் ஷா நீண்ட நேரம் பேசி விட்டு தான் டெல்லி சென்றுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

லைப்ரரிக்கு பிரா போடாமல் முன்னழகை காட்டி வந்த நடிகை !

அதிமுக கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் அடுத்த சில நாள்களில் நடைபெறும் மாற்றங்கள் மூலம் அமித் ஷா என்ன பேசினார் என்பது குறித்த சித்திரம் கிடைக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.