தேவதாசிகளை பற்றிய மறைக்கப்பட்ட ரகசியங்கள் !

0

விழுப்புரம் மாவட்டம் சங்காபுரத்திற்கு  பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்த இளைஞன் ஒருவனிடம் உனது கிராமத்தின் பெயர் என்னவென்று கேட்டதற்கு 

தேவதாசிகளை பற்றிய மறைக்கப்பட்ட ரகசியங்கள்

அவன் சுற்றி வளைத்து வேறு பல விஷயங்களை பேசினானே தவிர கேள்விக்கு பதில் சொல்லவில்லை. பிறகு மிகவும் வற்புறுத்தி அவனிடம். கேட்டதற்கு மிகவும் தயங்கி தயங்கி தேவர்யடியார் குப்பம் என்று சொன்னான் .

அதை சொல்ல என்ன தயக்கம் என்று கேட்டபோது எங்கள் ஊரின் பெயர் தேவர்யடியார் குப்பம் என்றாலும் நடைமுறையில் அதை தேவடியாள் குப்பம் என்று தான் அழைப்பார்கள்.  

குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வைத்தியங்கள்

அந்த வார்த்தையை சொல்வதற்கு எனக்கு கூச்சமாக இருந்ததினால் தான் சொல்ல தயங்கினேன்  என்று கூறினான்.  

கடவுளுக்கு அடியவர், இறைவனுக்கு தொண்டு செய்பவர் என்று பொருள்பட உள்ள தேவர்யடியார் என்று அழகான வார்த்தை கொச்சைப் படுத்தபட்டு 

உச்சரிக்க கூட தகுதியில்லாத அளவிற்கு தரம் தாழ்த்திய சமுதாயத்தை நினைத்து வருத்தமாகவும் இருந்தது,  ஆத்திரமும் வந்தது.

தேவதாசிகளின் உண்மை வரலாறு

கோவில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என அழைக்கப்படும் தேவர் அடியார்கள். 

இவர்கள் ஆன்மீக இலக்கியம் கோலோச்சி இருந்த ஆறாம் நூற்றாண்டிலிருந்தே மிக மரியாதையாக பார்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள் !

காலப் போக்கில் இவர்களது பெயர் மட்டுமின்றி இவர்களது மரபும், கலாச்சாரமும் மரியாதையும் கூட மருவி விட்டது. 

போதிய அங்கீகாரம் மற்றும் கவனிப்பு இல்லாமல் போனதால் தேவதாசிகள் மிகக் கீழ்த்தரமான முறையில் சித்தரிக்கப் பட்டனர்.

தேவதாசி முறை 

தேவதாசி முறை

தேவதாசி முறை என்பது ஆதிகாலத்தில் இந்தியாவில் இருந்தது மட்டுமல்ல.  உலகம் முழுவதுமே நடைமுறையில் இருந்திருக்கிறது.  

கணித்து கூற முடியாத மிக பழைய காலம் தொட்டே இறை பணிக்கென்றே தங்களை அர்பணித்துக் கொண்ட கலைஞர் கூட்டம் இருந்திருக்கிறது.  

இந்தியாவின் தொன்மை நாகரீகம் என்று போற்றபடுகின்ற சிந்து சமவெளி நாகரீகத்தில் நடனம் என்பது முக்கிய அங்கமாக இருந்திருக்கிறது.  

உடல் பருமனைக் குறைக்கும் லவங்கப் பட்டை

அங்கு கண்டெடுக்கப்பட்ட வெண்கலத்தில் செய்யப்பட்ட நாட்டிய தாரகையொருத்தின் நேர்த்தியான சிலை வடிவம் அதை நமக்கு பளிச்சென அறிமுகப்படுத்துகிறது. 

இந்துக்களின் மிக பழைய இலக்கியமான ரிக் வேதத்தில் துவங்கி மற்ற வேதங்களிலும் நடனம் நடன மாது போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

தமிழ் மரபு

தமிழ் மரபு
தேவதாசிகள் தமிழ் கலாச்சாரத்திற்கும், கலைகளுக்கும் செழுமை சேர்த்த ஓர் சமூக மரபு கொண்டிருந்தவர்கள்.

தேவதாசி என்ற வார்த்தை

தேவதாசி என்ற வார்த்தை

தேவதாசி என்ற வார்த்தை இந்தியாவில் பல இடங்களில் பலவிதமாக பயன்படுத்த படுகிறது.  ஆந்திர பகுதியில்  இவர்களை மாதங்கி அல்லது விலாசினி எனவும்,  

கொங்குனியில் நாயகி எனவும்,  மராட்டியத்தில் பாசவி எனவும்,  கர்நாடகாவில் சூலி, சானி எனவும்,  ஒரிசாவில் மக எனவும், உத்திர பிரதேசத்தில் பாவினி எனவும் அழைக்கப்படுகிறார்கள். 

ஆணுறுப்பை பெரிதாக்க வருகிறது நவீன கருவி

சங்ககால தமிழ் நூல்கள் இக்கலை மாதர்களை பதியிலாள்,  மாணிக்கம்,  தளிச்சேரி பெண்டுகள் எனவும் அழைக்கின்றனர், 

இந்த பெயர்களின் அர்த்தத்தை மேலுட்டமாக பார்த்தலும் சரி, ஆழ்ந்து அகண்டு பார்த்தாலும் சரி எந்தொரு வார்த்தையும் அவர்களை இழிவு படுத்து தொனியில் இருக்காது.  

மாறாக கௌரவபடுத்தும் விதத்திலேயே அமைந்திருப்பதை காணலாம்.

தேவதாசி

தேவதாசி

தேவதாசி என்பவர்கள் கடவுள் அல்லது கோவிலுக்காக அர்பணிக்கப்பட்ட பெண்கள் ஆவர்கள். இவர்கள் கோவில் மற்றும் கடவுளுக்கு திருப்பணிகள் செய்வதற்காக தானம் கொடுக்கப் பட்டவர்கள்.

தேவதாசி ஆவதற்கு சடங்கு

தேவதாசி ஆவதற்கு சடங்கு

தேவதாசியின் வாழ்க்கை என்பது ஆர்வம் நிறைந்த சுவாரஸ்யமான கதையாகும். ஒரு பெண் தேவதாசியாக வேண்டும் எனில், 
இரவு தாமதமாக உணவு உட்கொண்டால்

அவள் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் சிலவற்றின் ஊடாகப் பயணித்து வர வேண்டும் எனப்படுகிறது.

சடங்குகள்...

சடங்குகள்
1. சடங்கு பூர்வமான திருமணம்

2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு

3. நிகழ்த்து கலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்

4. அரங்கேற்றம்

5. கடமைகள் மற்றும்

6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்

கி.பி. 900

கி.பி. 900 தேவதாசி
பல கல்வெட்டுகளில் தேவர் அடியார்கள் எனப்படும் தேவதாசிகள் பெருமான் கோயிலில் கலைகளை காத்து வந்தவர்கள் என்றும். 

நடனம் மற்றும் பாடல்கள் இயற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்றும் பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன.

கி.பி. 1230

கி.பி. 1230 தேவதாசி

கி.பி 1230-40-க்கு இடைப்பட்ட காலத்தில் இப்போது மகாராஷ்டிரா என அழைக்கபப்டும் நிலத்தை ஆண்ட மன்னன் ராகவாச்சாரியார் தனது குறிப்புகளில் 
நகம் பெயர்ந்தால் என்ன செய்வது தெரியுமா?

தேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தான் தேவதாசிகளின் தொடக்கமாக கருதப்பட்டு வருகிறது.

மேகதூத்

மேகதூத்

தேவதாசி எனும் இந்த பெயர் முதன் முதலில் காளிதாஸ் எழுதிய மேகதூத் எனும் படைப்பில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தேவரடியார்கள் எனும் பெயரின் பொருளானது தேவர் (இறைவன்) + அடியவர்கள் (சேவகர்கள்), அதாவது இறைவனுக்கு சேவை செய்து வந்தவர்கள் ஆகும்.

அர்ச்சகர்கள்

அர்ச்சகர்கள்

தேவதாசிகள் என்பவர்கள் சமூகத்தில் பெரும் புகழ் மற்றும் மரியாதையுடன் காணப்பட்டவர்கள். 

இதை சாப்பிட்டால் ஆஸ்துமா வருமாம்

கோவில்களில் அர்ச்சகர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்கள் இவர்கள் எனவும் வரலாற்று குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.

சமூக சேவைகள்

சமூக சேவைகள்

தேவதாசிகள் அவர்களது கலைக்கு கிடைத்த பரிசுகளை மக்களுக்கு நல்ல சேவைகளும் செய்து வந்துள்ளனர். கால்வாய் அமைப்பது, 

கிராமப்புற சேவைகள் செய்வது என நல்ல வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் தான் இந்த தேவதாசிகள்.

விண்ணமங்கலம்

விண்ணமங்கலம் தேவதாசி

விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டு தோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன.

கார் லோகோ குறிக்கும் அர்த்தங்கள்

நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகிய இரண்டு தேவதாசிகள் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறு பயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர்.

அன்னாடு

அன்னாடு தேவதாசி

அன்னாடு (அ) அன்னநாடு என்ற இடத்திலும் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயே படையெடுப்பு

ஆங்கிலேயே படையெடுப்பு

சமூகத்தில் புனிதமாக காணப்பட்டு வந்த இவர்கள், ஆங்கிலேயே படையெடுப்பிற்கு பிறகு தான் களங்கப் படுத்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

அரசர் கொடுமைகள்

அரசர் கொடுமைகள்

சில அரசர்கள் மற்றும் சாம்ராஜியத்திலும் கூட கடவுள் திருப்பணிக்காக அர்பணிக்கப்பட்ட இவர்கள், 

எந்த பாலை எப்படி காய்ச்சுவது
தனிப்பட்ட அரசர்கள் அல்லது பெரும் நபர்களின் இச்சைக்காக இரையாக்கப் பட்டனர் எனக் கூறப்படுகிறது.

சாதிப்பிரிவுகள்

சாதிப்பிரிவுகள்

சாதி பிரிவுகள் வரத் துவங்கிய காலக்கட்டத்தில் இவர்கள் இக்காரணம் கண்டு கீழ் சாதி பிரிவில் சேர்க்கப்பட்டனர். 

மேலும், இவர்கள் காமத்திற்காக மட்டும் காணப்படுபவர்கள் எனும் சாயம் பூசப்பட்டது.

தேவதாசி பரம்பரை தடை

தேவதாசி பரம்பரை தடை

தேவதாசி பரம்பரை தடை செய்யப்படுவதற்கு காரணமாகயிருந்த கலாநிதி முத்துலட்சுமி ரெட்டி அம்மையார்,  மூவதூர் செல்வி ராமதீர்த்தம்மாள் போன்றோர்கள் போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள். 

தேவதாசிகளின் வாழ்க்கையை ஊன்றி கவனிக்கு போது மகாபாரதத்தில் வரும் பாதுகாப்பு இல்லாத பெண்கள் உயர்ந்த பாறையின் மீது சிதறி கிடக்கும் மாமிசத்தை போன்றவர்கள்.  

நிழல் நிறம் கருப்பு ஏன்?

காக்கையும், கழுகும் மிக சுலபமாக கொத்தி தின்றுவிடும் என்ற வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.

இறை பக்திக்காகவும்,  கலை சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்த பெண்ணினத்தை அவர்கள் சராசரியான குடும்ப வாழ்க்கை வாழாமல் 

ஒருவித அர்பணிப்பு வாழ்க்கையை வாழ்ந்ததினால் அர்ப்ப மனதுடைய சில ஆதிக்க ஆண் சக்தி தங்களது 

குறுகிய மன விகாரங்களுக்காக பயன்படுத்தியதினால் போற்ற தக்க மரபு அவமான சின்னமாக முடிந்து போய் விட்டது.  

ஆனாலும் ஒரு உண்மையை அழுத்தி சொல்ல வேண்டும் தேவதாசி பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் அல்ல,  

இந்த சிந்தனை இளைய தலைமுறை யினருக்கு ஏற்பட்டால் அந்த மரபுகளின் எச்ச சொச்சத்தை கனிவுடன் ஆராய்வார்கள்.

தேவதாசி இறந்து விட்டால்

தேவதாசி இறந்து விட்டால்

ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்து விட்டால் அவள் உடலை சாதாரண துணியால் மூட மாட்டார்கள்.  

ஆலய மூல மூர்த்திக்கு போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து அவள் உடல் மீது போர்த்தப்படும்.  அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும்.  

சன் கிளாஸ் தேர்வு செய்வது !

இறுதி ஊர்வலத்திற்கு எடுத்து செல்லப்படும் அவளது உடல் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னால் சிறிது நேரம் நின்றே மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.  

சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத பெரும் பேராகிய ஆலய நெருப்பு எடுத்து செல்லப்பட்டே அவள் சிதை எறியூட்டப்படும்.  

உடலின் அழகை விலைகூறி விற்கும் விலை மகள்ளாக அவர்கள் வாழ்ந்திருந்தால் இத்தகைய மரியாதை அவர்களுக்கு எப்படி கிடைக்கும்?  

பணத்தை திருடும் மெஷின் !

அல்லது இந்த மரியாதையை வழங்குவதற்கு பொதுமக்கள் எப்படி அனுமதிப்பார்கள்?  என்பதை சிந்தித்து பார்த்தால் தேவதாசிகளின் சமூக அந்தஸ்து எத்தகையது என்பது புரியும். 

அவச்சொல்

அவச்சொல்

கடவுளுக்கு இறைப்பணியாற்ற அர்பணிக்கப்பட்ட இவர்கள், சிலரது இச்சை பசிக்கு இரையாகி, இப்போது இவர்களது பெயரே சமூகத்தில் ஓர் அவச்சொல்லாக மாறியிருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)