ஆணுக்கு தைராய்டு வருமா? அறிகுறிகள் என்ன?

என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. 

Does the male have a thyroid?

அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும். 

தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரக்கும் நிலைமை தான் ஹைப்பர் தைராய்டிசம். 

இந்த நிலைமையில் தைராய்டு சுரப்பி மிகவும் கடினமாக வேலை செய்யும். ஹைப்பர் தைராய்டு இருக்கும் ஆண்கள் பல்வேறு கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைளால் அவஸ்தைப் படுவார்கள்.

மஸ்கட் திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா? 

ஒருவரது உடலில் அதிகமான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரந்தால், அது உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும். 

அதிலும் ஒரு ஆணுக்கு ஹைப்போ தைராய்டு இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளான சீரற்ற இதய துடிப்பு, தாங்க முடியாத உடல் சூடு, களைப்பு மற்றும் தூங்குவதில் சிரமம் போன்றவை தெரியும். 

சத்து குறைப்பாடு, மன அழுத்தம் போன்றவற்றினால் இந்த பிரச்சனையானது ஏற்படுகிறது. சில குழந்தைகள் பிறக்கும் போதே தைராய்டு பிரச்சனையுடன் பிறக்கின்றன.

சிலருக்கு உடல் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் இடையூறால் வேகமான எடை இழப்பு அல்லது உடல் பருமனை அனுபவிக்கக் கூடும். 

ஆணுக்கு ஹைப்பர் தைராய்டு இருந்தால் வெளிப்படும் முக்கியமான அறிகுறிகளைக் காண்போம்.

உடல் எடையில் மாற்றங்கள்

உடல் எடையில் மாற்றங்கள்

உடல் எடையை குறைக்க எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும் சிலருக்கு அந்த கனவு கைகூடுவதே இல்லை. 

உடல் நலம் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இன்று தெருவுக்கு ஒரு ஜிம் இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

ஆனால் இவை எல்லாம் இல்லாமலே சில ஆண்கள் ஹைப்பர் தைராய்டு காரணமாக  வேகமாக உடல் எடையை இழக்கக்கூடும். 

நம் எலும்புகளை காத்திட கீரை ஜூஸ் குடிங்க !

இதற்கு காரணம் இந்த நிலைமையால் வளர்சிதை மாற்றம் வேகமாக செயல்படுவது தான். 

மேலும் இந்த பிரச்சனை உள்ள ஆண்கள், எவ்வளவு தான் கலோரி அதிகமான உணவுகளை உட்கொண்டாலும், அவர்களின் உடல் எடை குறையும். சில சந்தர்பங்களில், தைராய்டு நிலையால் உடல் எடை அதிகரிக்கும்.

நடத்தையில் மாற்றங்கள்

நடத்தையில் மாற்றங்கள்

ஏதாவது ஒரு காரணம், உங்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையோ, உங்களின் திறமைக்கு ஒரு சவாலையோ ஏற்படுத்தும் போது, உணரப்படும் விரும்பத்தகாத உணர்வை, 'மன அழுத்தம்" என்று கூறலாம். 

இது கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் என்பது எப்படி செயல்படுகின்றன?

ஆனால் இவை இல்லாமல் எப்போது ஒருவரது தைராய்டு சுரப்பி அதிகமான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறதோ, அவர்கள் அதிகமாக எரிச்சலடைவதோடு, மன கவலையும் கொள்வார்கள். 

மேலும் இப்பிரச்சனை உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக ஏற்ற இறக்க மன நிலையில் இருப்பதோடு, அடிக்கடி மன கவலையால் பாதிக்கப்படுவார்கள். 

நடத்தையில் மாற்றம் இருந்தால், அது தூங்குவதில் சிரமத்தை உண்டாக்கும்.

முறையற்ற இதய துடிப்பு

முறையற்ற இதய துடிப்பு

இதயம் ஒரு தசைக்கோளம்; தானாகவே துடிக்கும் தன்மையுள்ள சிறப்புத் தசைகளால் ஆனது. இதயத்தில் மேற்புறம் இரண்டு; கீழ்ப்புறம் இரண்டு என மொத்தம் நான்கு அறைகள் உள்ளன. 

இதயத்தின் வலது பக்க அறைகளில் அசுத்த ரத்தமும், இடது பக்க அறைகளில் சுத்த ரத்தமும் ஓடுகின்றன. இதற்கு இதயத்தின் இயக்கம் உதவுகிறது. 

அதாவது, மேலறைகள் சுருங்கும் போது கீழறைகள் விரிகின்றன; கீழறைகள் சுருங்கும் போது மேலறைகள் விரிகின்றன. இப்படி ஒருமுறை இதயம் சுருங்கி விரிவதை ‘இதயத் துடிப்பு’ (Heart beat) என்கிறோம்.

ஆனால் ஒருவரது இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருந்தால், அது ஹைப்பர் தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். 

செட்டில்மெண்ட் பத்திரம் அல்லது தான பத்திரம் என்றால் என்ன?

ஹைப்பர் தைராய்டு உள்ள ஆண்கள் முறையற்ற இதயத் துடிப்பு அல்லது இதய படபடப்பை சந்திப்பார்கள். சில சந்தர்பங்களில், இதயத் துடிப்பானது நிமிடத்திற்கு 100 முறை துடிக்கும். 

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு தவிர, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் இதயம் வெடிக்கப் போவது போன்றும் சிலர் உணரலாம். 

வயதானவர்களாக இருந்தால், இவர்களுக்கு இதய செயலிழப்பு என்பது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்.

தைராய்டு பிரச்சனைகள்

ஆணுக்கு தைராய்டு வருமா?

தைராய்டு சுரப்பி அதிகப்படியான செயல்பாட்டில் இருந்தால், அது கோயிட்ரே அல்லது தைராய்டு முடிச்சுக்களை உருவாக்கலாம். சில சந்தர்பங்களில், கழுத்தின் அடிப்பகுதி வீக்கத்துடன் காணப்படலாம்.

இரைப்பை குடல் பிரச்சனைகள்

இரைப்பை குடல் பிரச்சனைகள்

வயிற்றின் உட்புற வரிசையில் வீக்கம் மற்றும் எரிச்சல் காரணமாக ஏற்படுகிறது. இந்த வயிற்று வீக்கம் வலி, மேல் வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், ஏப்பம், 

உணவை வெளியே தள்ளுதல், குமட்டல் மற்றும் அவ்வப்போது வாந்தியெடுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இதனை இரைப்பை அழற்சி என்கிறோம்.

ஆனால்குடல் செயல்பாட்டில் மாற்றங்கள், குறிப்பாக வழக்கத்தை விட அதிகமான குடலியக்கம், ஹைப்பர் தைராய்டு பிரச்சனையை வெளிப்படுத்துகின்றன. 

சில சமயங்களில் ஹைப்பர் தைராய்டு இருந்தால், அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தக்கூடும்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

ஹைப்பர் தைராய்டு சரும பிரச்சனைகளான சரும வறட்சி, சரும அரிப்பு, சரும நிற மாற்றம், முகப்பரு மற்றும் நீர்க்கோர்வை போன்றவற்றுடன் தொடர்புடையது. 

எனவே சில காலமாக நீங்கள் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், உங்களுக்கு ஹைப்பர் தைராய்டு உள்ளது என்று அர்த்தம்.

மற்ற அறிகுறிகள்

ஆணுக்கு தைராய்டு அறிகுறிகள் என்ன?

ஹைப்பர் தைராய்டு இருக்கும் ஆண்களுக்கு வெளிப்படும் இதர அறிகுறிகளாவன அதிகமான வியர்வை, அதிக உடல் சூடு, தசை நடுக்கம், மிகுந்த களைப்பு. 

ஆண்களில் ஹைப்பர் தைராய்டிசத்தின் குறைவான பொதுவான அறிகுறிகளாவன முடி உதிர்தல், வாந்தி, வீங்கிய கண்கள், 

கண்களில் எரிச்சல் மற்றும் அதிக கண்ணீர் உற்பத்தி. மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடல் மருத்துவரை அணுகுங்கள். 

ஒரு பிரச்சனைக்கு சரியான தருணத்தில் சிகிச்சை எடுத்தால், எப்பேற்பட்ட பிரச்சனையையும் எளிதில் சரி செய்யலாம் என்பதை மறவாதீர்கள்.  

இதைப் படித்து தெரிந்து, உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பியுங்கள்.

Tags: