அடுத்து இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றி ஒரு சந்தோசமான செய்தி !





அடுத்து இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றி ஒரு சந்தோசமான செய்தி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

கடந்த சுமார் 11 மாதங்களாக கொரோனா வைரஸ் மனித இனத்தின் இயல்பு நிலையையே புரட்டி போட்டுள்ளது. எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் கொரோனாவின் வேகம் இன்னும் குறையவில்லை. 

இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றி ஒரு சந்தோசமான செய்தி !

கொரோனா பரவல் வெளிநாடு களிலும், நம் நாட்டின் சில மாநிலங்களிலும் இரண்டாம் அலையின் தீவிரத்திற்கு சென்றுள்ளது. உலகளவில் பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்க மிகத்தீவிரமாக முயற்சித்து வருகின்றன. 

இதில் சில தடுப்பூசிகள் கடைசி கட்ட சோதனையில் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி, மாடெர்னா தடுப்பூசி, பிஃபைசர் தடுப்பூசி, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஆகியவை முன்னணியில் இருக்கின்றன.

மிளகாய்த் தூளில் எப்படி கலப்படம் செய்கிறார்கள் !

இந்தியா சார்பில் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. 

இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

எனவே இந்நோய்க்கு எதிரான தடுப்பூசி தான் இப்போதைக்கு அவசியம். அந்த வகையில் பைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனம் கண்டறிந்த 'BNT162b2' தடுப்பூசி 90 சதவீதம் சிறப்பாக வேலை செய்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. 

Next is good news for Indians

பைசர் என்பது அமெரிக்காவில் உள்ள முக்கிய மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனம். 'பயோ என் டெக்' என்பது ஜெர்மனியில் இயங்கும் மருத்துவத்துறையில் உயர்தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் நிறுவனம்.

பைசர் என்பது அமெரிக்காவில் உள்ள முக்கிய மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனம். 'பயோ என் டெக்' என்பது ஜெர்மனியில் இயங்கும் மருத்துவத்துறையில் உயர்தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் நிறுவனம்.

டயடினால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் !

அப்படியே ஒரு நுாற்றாண்டு பின்னோக்கிப் பார்த்தால் இவை இரண்டும் முதல் உலகப்போரின் எதிரி நாடுகள். இரண்டாம் உலகப் போரிலும் அதே நிலை தான். 

ஆனால் இன்று அறிவியல் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிராக புதிதாக ஒன்றைக்கண்டறிய வேண்டும் என்ற வேட்கை இரண்டு நாடுகளையும் ஒன்றிணைத்திருப்பது சிறப்பான விஷயம் தான்.

இவ்விரு நாடுகள் கண்டறிந்தது எம்ஆர்என்ஏ., வகை தடுப்பூசி. எந்திரன் திரைப்படத்தில், எப்படி ஒரு சிட்டி ரோபோ பல ரோபோக்களை உருவாக்க 'ரெட் ஜிப்' உபயோகமானதோ, 

தடுப்பூசி
அது போன்று ஒரு வைரஸ் தன்னைப்போன்ற பல வைரஸ் பிரதிகளை உருவாக்க எம்ஆர்என்ஏ., வகை தடுப்பூசி தேவைப்படுகிறது.

கொரோனா நோய் விஷயத்தில் இது ஒரு ஆர்என்ஏ., வைரஸ் தான். இது மனித உடலுக்குள் சென்று அங்குள்ள செல்களினுள், 

அதன் எம்ஆர்என்ஏ., மூலம் பிரதிகளை உருவாக்கி தொற்றை ஏற்படுத்துகின்றன. இந்த தொழில்நுட்பத்தை தான் இவ்வகை தடுப்பூசிகள் கடைபிடிக்கின்றன.

ஆணுக்கு தைராய்டு வருமா? அறிகுறிகள் என்ன?

வைரசில் இருந்து எம்ஆர்என்ஏ., மட்டுமே தனியாக பிரிக்கப்பட்டு, குறிப்பிட்ட மூலக்கூறை மட்டுமே, இத்தடுப்பூசி பயன்படுத்துவதால், தொற்று ஏற்படும் அச்சம் மிக குறைவு. 

மேலும் தேவையற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் இதில் குறைவாக காணப்படும். இவ்வகை தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக தடுப்பூசிகளை தயாரிக்கலாம்.

இந்நிலையில், கோவாக்ஸின் தடுப்பூசியின் திறன் சிறப்பாக இருப்பதாகவும், பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தடுப்பூசி வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்று 

பைசர் தடுப்பூசி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வாளரும், கோவிட்-19 சிறப்பு படையின் உறுப்பினருமான ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.

ஆனால், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யும் பொருட்டு பிரிட்டன் அரசு முதன் முதலாக அனுமதி அளித்தது. 

இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் பொதுவிநியோக பயன்பாட்டிற்கு பைசர் நிறுவன தடுப்பூசி வரவுள்ளது. பிரிட்டன் நாட்டினை தொடர்ந்து பக்ரைன் நாட்டிலும் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கும் பொருட்டு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் ஆங்கிலம்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)