இன்று கொரோனா பரவல்.. 9 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு !

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக அதிகரித்துள்ளது. இன்று எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதையும், 
9 மாவட்டங்களில் 100ஐ கடந்த கொரோனா பாதிப்பு

எத்தனை பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதையும் இப்போது பார்க்கலாம்.

தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு விவரங்களை தினமும் வெளியிட்டு வருகிறது. 

இந்த வெளியீட்டில் குணம் அடைந்தவர்கள் விவரம், ஆக்டிவ் கேஸ்கள் விவரம், நோய் தொற்று புதிதாக பாதிக்கப் பட்டவர்கள் விவரம்,. 
மரணம் அடைந்தவர்கள் விவரம் மற்றும் வயது வாரியாக பாதிப்பு, சோதனைகள் எவ்வளவு பேருக்கு நடத்தப்படுகிறது என பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3693 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் உயர்வு
கன்னியாகுமரியில் கொரோனா

தமிழகத்தில் வழக்கம் போல் சென்னையில் தான் இன்று கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் 1261 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று மதுரையில் 379 பேருக்கும், செங்கல்பட்டில் 273 பேருக்கும், திருவள்ளூரில் 300 பேருக்கும், 

வேலூரில் 160 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 133 பேருக்கும், கன்னியாகுமரியில் 112 பேருக்கும், தூத்துக்குடியில் 141 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனியில் 75 பேர்

கோவையில் 87 பேருக்கும், கடலூரில் 70 பேருக்கும் தேனியில் 75 பேருக்கும், விருதுநகரில் 70 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

அரியலூரில் 11 பேருக்கும், தர்மபுரியில் 28 பேருக்கும், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் ஈரோட்டில் தலா 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சியில் 12 பேருக்கும், கரூரில் 7 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் 64 பேர்
சேலத்தில் கொரோனா

நாகப்பட்டினத்தில் 18 பேருக்கும், நாமக்கல்லில் 9 பேருக்கும், பெரம்பலூரில் 3 பேருக்கும், புதுக்கோட்டையில் 31 பேருக்கும், ராமநாதபுரத்தில் 65 பேருக்கும், ராணிப்பேட்டையில் 16 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சேலத்தில் 64 பேருக்கும், சிவகங்கையில் 28 பேருக்கும், தென்காசியில் 15 பேருக்கும், திருப்பத்தூரில் 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருண்ணாமலையில் 55 பேரும், திருவாரூரில் 36 பேரும், திருநெல்வேலியில் 6 பேரும், திருப்பூரில் 26 பேரும், திருச்சியில் 21 பேரும் கொரோனாவால் இன்று பாதிக்கப் பட்டுள்ளனர்.

கொரோனா நிலவரம்

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

அரியலூர் 487

செங்கல்பட்டு 7215

சென்னை 72500

கோவை 927

கடலூர் 1413

தர்மபுரி 156

திண்டுக்கல் 739

ஈரோடு 296

கள்ளக்குறிச்சி 1285

காஞ்சிபுரம் 2970

கன்னியாகுமரி 872

கரூர் 182

கிருஷ்ணகிரி 217

மதுரை 5057

நாகப்பட்டினம் 325

நாமக்கல் 130

நீலகிரி 160

பெரம்பலூர் 173

புதுக்கோட்டை 449

ராமநாதபுரம் 1544

ராணிப்பேட்டை 1325

சேலம் 1409

சிவகங்கை 611

தென்காசி 558

தஞ்சாவூர் 544

தேனி 1297

திருப்பத்தூர் 332

திருவள்ளூர் 5507

திருவண்ணாமலை 2688

திருவாரூர் 614

தூத்துக்குடி 1558

திருநெல்வேலி 1300

திருப்பூர் 262

திருச்சி 1077

வேலூர் 2258

விழுப்புரம் 1339

விருதுநகர் 1298

விமான நிலைய கண்காணிப்பில் 476

(வெளிநாடு)

விமான நிலைய கண்காணிப்பில் 379

(உள்நாடு)

ரயில் நிலைய கண்காணிப்பில்: 421
Tags:
Privacy and cookie settings