எங்கூட பழகிட்டு இன்னொருத்தன் கூட.. அதான் அடித்தேன்.. ஆனால் எரிக்கல - செந்தில் !

என் கூட பழகிட்டே இன்னொருத்தனு கூட பேசினாள்.. அவன் கூட பேசக்கூடாதுன்னு சொன்னேன்.. கண்டித்தேன்.. அடித்தேன்.. 
எங்கூட பழகிட்டு இன்னொருத்தன் கூட

ஆனால் சத்தியமா நான் எரிக்கல" என்று திருச்சி சிறுமி கொலை வழக்கில் கைதான இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் அல்லித்துறை அடுத்த அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி.. இவரது 2வது மகள் கங்காதேவி.. 14 வயதாகிறது.. 9-வது முடித்து விட்டு 10ம் வகுப்பு செல்ல இருந்தார்.
இந்நிலையில் 2 நாளைக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள முள்காட்டில் எரிந்த நிலையில் கிடந்தார்.. அந்த முள்காட்டை ஒட்டி ஒரு மர அறுவை மில் சுற்றுச்சுவர் உள்ளது.. அங்கு தான் சிறுமி பாதி எரிந்த நிலையில் கிடந்தாள்.

தகவலறிந்து சோமரசம்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.. 

இது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. இதை யடுத்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட வில்லை என்று ரிப்போர்ட் வந்தது.

இதை யடுத்து சிறுமியை கொன்றது யார் என்ற விசாரணை நடந்து வருகிறது.. கங்காதேவி கடைசியாக அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி செந்தில் என்பவரிடம் பேசி உள்ளார்.. செந்திலுக்கு 24 வயதாகிறது.. 

அதனால் இதை வைத்து செந்திலிடம் விசாரணை நடந்து வருகிறது. அப்போது செந்தில் போலீசிடம் சொன்னதாவது: நான் இவங்களுக்கு சொந்தக்காரன் தான்.. 

பங்காளி உறவு முறை.. டைல்ஸ் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன்.. எனக்கும் கங்காதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.. பங்காளி உறவு முறை என்பதால் அவள் வீட்டில் இதை கண்டித்தனர்.

சம்பவத்தன்று காலை கங்காதேவி வீட்டில் யாரும் இல்லை.. அப்போது, வீட்டுக்குள்ள நான் போன போது, கங்காதேவி யாரிடமோ ரொம்ப நேரமாக போனில் பேசிட்டு இருந்தாள்... 
அதனால், யாரிடம் இவ்ளோ நேரம் செல்போனில் பேசுறே? இனி அந்நபருடன் பேசக்கூடாது என்று திட்டினேன்.

பிறகு மதியம் முள்காட்டுக்கு வந்த கங்காதேவியிடம், நீ உன் அப்பா சொல்வதை கேள் என்று சொன்னேன்.. 

இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் நடந்தது... அப்போ கங்காதேவியை அடித்தேன்... வேறு ஒன்னும் செய்யல.. நான் கொல்லல" என்று கூறினார். செந்தில் கங்காதேவியை அடித்துள்ளார்.. 

அதில் கீழே விழுந்து மயங்கியும் உள்ளார் சிறுமி.. ஒருவேளை அந்த சமயத்தில் பதற்றம் அடைந்த செந்தில், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தாரா அல்லது 

உறவினர்கள் தவறாக பேசுவார்கள் என்ற மனவேதனையில் சிறுமியே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
அடித்தேன்.. ஆனால் எரிக்கல

மேலும் செந்தில் சொன்னது போல, சிறுமி யாரிடம் செல்போனில் பேசினார் என்று விசாரித்தனர்.. 

அதில் வினோத் என்பவர் பெயரும், நம்பரும் உள்ளது.. வினோத்திடம் பேசக்கூடாது என்று தான் செந்தில் கண்டித்து, அடித்துள்ளார்... இப்போது இந்த வினோத் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
இதனிடையே, திருச்சி டிஐஜி ஆனி விஜயா சொல்லும் போது, "2 பேரிடம் சிறுமி நண்பர்களை போல பழகி வந்துள்ளார்.. எல்லா தனிப்பட்ட விவகாரங்கள் குறித்தும் பேசி வந்துள்ளார்.. 

சிறுமியின் வயதுக்குரிய நடவடிக்கையில் ஒன்று தான்.. இது குறித்து விசாரித்து வருகிறோம்.. குற்றவாளிகளை மட்டும் தப்பிக்க விட மாட்டோம்" என்று உறுதி தந்துள்ளார்.
Tags: