செய்யாத தவறுக்காக 23 வருடம் தண்டனை அனுபவித்த 5 இஸ்லாமிய இளைஞர்கள் - நடுங்க வைக்கும் கதை ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

செய்யாத தவறுக்காக 23 வருடம் தண்டனை அனுபவித்த 5 இஸ்லாமிய இளைஞர்கள் - நடுங்க வைக்கும் கதை !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
செய்யாத குற்றத்திற் காக 23 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த ஐந்து இஸ்லாமிய இளைஞர்கள் ராஜஸ்தான் ஹைகோர்ட் மூலம் நேற்று முதல்நாள் விடுவிக்கப் பட்டனர்.
நடுங்க வைக்கும் கதை1990ல் அமெரிக்காவில் உள்ள சென்டரல் பார்க் என்ற இடத்தில் நடந்த பெண் பாலியல் கொலை வழக்கு ஒன்று உலகம் முழுக்க பிரபலம். இந்த வழக்கில் தவறு செய்யாத ''5 கறுப்பின சிறுவர்கள்'' கைது செய்யப்பட்டு, குற்றவாளிகள் என்று ஜோடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள்.

10-12 வருடங்களுக்கு பின் இவர்கள் குற்றமே செய்யவில்லை என்று நிரூபணம் ஆகும். உண்மையான குற்றவாளி கைது செய்யப் படுவான். ஆனால் இவர்கள் 5 பேரும் தொலைத்த அந்த இளம் வயது அதன் பின் மீண்டு வரவே இல்லை. அப்படி ஒரு சென்டரல் பார்க் சம்பவம்தான் ராஜஸ்தானில் நடந்து இருக்கிறது.

என்ன நடந்தது

1996 மே 21ம் தேதி டெல்லியில் உள்ள லாஜ்பத் நகர் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. காஷ்மீர் இஸ்லாமிக் முன்னணி அமைப்பு மூலம் நடந்த இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப் பட்டார்கள். 
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ஹமீத் என்ற தீவிரவாதி உடனடியாக கைதும் செய்யப் பட்டான். இதுவரை எல்லாம் சம்பவங்களும் விதிப்படி தான் நடந்தது.

ஆனால் என்ன

ஆனால் அதன் பின்தான் விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கில் தவறு செய்ய தொடங்கி னார்கள். இந்த வழக்கில் ஸ்ரீநகரை சேர்ந்த லத்தீப் அஹமது வாசா, மிர்ஸா நிஸார் ஹுசைன், அப்துல் கோணி, ரயீஸ் பெக் மற்றும் அலி முகமது பாட் என்று ஐந்து இளைஞர்கள் கைது செய்யப் பட்டார்கள். 

தீவிரவாதி அப்துல் ஹமீத்துக்கு உடந்தையாக செயல் பட்டதாக கூறி இவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப் பட்டார்கள்.

வருடம்

இவர்கள் ஐந்து பேரும் 1996ம் ஆண்டு கைது செய்யப் பட்டனர். அதன்பின் இவர்கள் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல மொத்தம் 23 வருடம் இவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப் பட்டது. 
23 வருடம் தண்டனை அனுபவித்த இளைஞர்கள்
பல்வேறு சிறைகளில் வைக்கப்பட்ட இவர்கள் என்ஐஏ, சிபிஐ தொடங்கி ரா வரை பல்வேறு அமைப்புக ளால் மோசமாக கொடுமைப் படுத்தப் பட்டார்கள். மிக மிக மோசமாக துன்புறுத்தப் பட்டார்கள்.

வழக்கு

தீவிரவாத சதித்திட்டம் தீட்டியது, ஆயுதங்களை பதுக்கியது, கொலை குற்றம், இந்திய இறையாண்மை க்கு எதிராக செயல்பட்டது என்று பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது பதியப்பட்டது. 

இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட பிரிவுகள் எல்லாம் மிக முக்கியமானது என்பதால் இவர்கள் எல்லோரும் தனி செல்லில் அடைக்கப் பட்டார்கள். அதேபோல் இவர்களுக்கு கடந்த 23 வருடமாக பரோல் கிடையாது.

பார்க்கவில்லை
கடந்த 23 வருடமாக இவர்கள் பரோலில், ஜாமீனில் வெளியே வரவில்லை. இன்னும் விசித்திரம் என்ன வென்றால் குடும்பத்தை கூட பார்க்க லத்தீப் அஹமது வாசா, மிர்ஸா நிஸார் ஹுசைன் மற்றும் அலி முகமது பாட் உட்பட ஐந்து பேருக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை. 23 வருடம் இவர்கள் தனி அறையில் சிறையில் வாழ்க்கையை கழித்தார்கள்.

மிக மோசம்

இதில் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயம் அப்துல் கோணி கைது செய்யப்பட்ட போது படித்துக் கொண்டு இருந்தார். ரயீஸ் பெக் பள்ளியில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். 
இதில் முக்கியமாக போலீஸாரால் ரயீஸ் பெக் மிக மோசமாக சித்திரவதை களுக்கு உள்ளானார். இவர் 23 வருடமும் தனி சிறையில் தான் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முடியவில்லை

ஆனால் உண்மை எப்படியாவது வெளியே வரும் என்று கூறுவார்களே.. அப்படித் தான் இவர்கள் வழக்கிலும் உண்மை வெளியே வந்தது. மிக தாமதமாக 23 வருடங்கள் கழித்து உண்மை வெளியே வந்தது. 
செய்யாத தவறுக்காக வழக்கு
இவர்கள் மீது புகார்களை ஜோடிக்க எவ்வளவோ கஷ்டப்பட்டு கூட விசாரணை அதிகாரிக ளால் முடியவில்லை. இவர்களு க்கும், இந்த குற்றத்திற்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க ஒரு சின்ன ஆதாரம் கூட இவர்களுக்கு கிடைக்க வில்லை.

வழக்கு நடந்தது

ராஜஸ்தான் ஹைகோர்ட்டிலும், அதற்கு முன் டெல்லி கோர்ட்டிலும் வழக்கு நடந்தும் கூட, இவர்களுக்கு எதிராக ஒரு ஆதாரத்தை கூட விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்க முடிய வில்லை. 

ஏன் கேவலம் அப்துல் ஹமீத் தீவிரவாதிக்கும் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் கூட அதிகாரிகளால் நிரூபிக்க முடியவில்லை. அப்துல் ஹமீத் தீவிரவாதிக்கு மட்டும் இந்த வழக்கில் தூக்கு தண்டனை கொடுக்கப் பட்டது.

இல்லை

இந்த நிலையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்று கூறி இந்த வழக்கை ராஜஸ்தான் ஹைகோர்ட் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. 

இவர்களுக்கு எதிராக ஒரு நம்ப கூடிய ஆதாரங்களை கூட அதிகாரிகள் கொடுக்க வில்லை. இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறி, நீதிபதிகள் விசாரணை அதிகாரிகளைக் கண்டித்து உள்ளனர்.

மிக மோசம்

இதில் விசித்திரம் என்னவென்றால் லத்தீப் அஹமது வாசா, மிர்ஸா நிஸார் ஹுசைன், அப்துல் கோணி, ரயீஸ் பெக் மற்றும் அலி முகமது பாட் ஆகியோர் ஒருவரை ஒருவர் இதற்கு முன் பார்த்தது கூட கிடையாது . 
குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லைஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போது தான் இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து இருக்கிறார்கள். தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள சென்டரல் பார்க் வழக்கு குறித்து குறிப்பிட்டோமே..

அதில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இப்படித் தான் அதற்கு முன் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்கள்!

எல்லோரும் விடுதலை

கடந்த செவ்வாய் கிழமை மாலை 5.19 மணிக்கு இவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப் பட்டார்கள். ஆம் 23 வருடங்கள் கழித்து இளமை போய், வேலை இன்றி, படிப்பு இன்றி, மனைவி குழந்தைகள் இன்றி, எல்லாம் முடிந்து இவர்கள் நிர்கதியாக தற்போது சிறையில் இருந்து வெளியே வந்து இருக்கிறார்கள். 
செய்யாத குற்றத்திற் காக இவர்கள் 23 வருடம் சிறையில் காலம் தள்ளி கொடுமைகளை அனுபவித்து உள்ளனர்.

என்ன வயது

20+ வயதில் சிறைக்கு சென்றவர்களுக்கு இப்போது என்ன வயது ஆகிறது என்று கேட்டால் அதிர்ந்து போவீர்கள். லத்தீப் அஹமது வாசாக்கு 42, மிர்ஸா நிஸார் ஹுசனுக்கு 39, அப்துல் கோணிக்கு 57, ரயீஸ் பெக்க்கு 56 மற்றும் அலி முகமது பாட்க்கு 48 வயதாகிறது. ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு இவர்களின் குடும்பத்தையே சிதைத்து இருக்கிறது.

என்ன கோபம்
23 வருடம் கொடுமைகளை அனுபவித்த இளைஞர்கள்
நாங்கள் சிறையில் அடைக்கப் பட்டது ஏன் என்று கூட எங்களுக்கு தொடக்கத்தில் தெரியாது.. எங்களை மோசமாக கொடுமை படுத்தினார்கள். போக போக எங்களுக்கு இதுதான் வாழ்க்கை என்று கூட பழகி விட்டது. 

அங்கு ஒரு வாரம் இருக்க முடியுமா என்று நினைத்தோம். 23 வருடங்கள் தாண்டி விட்டது என்று 5 அப்பாவிகளும் வருத்தமாக தெரிவித்து உள்ளனர்.

மரணம்

அதிலும் முகமது அலி பாட்டின் அப்பா இவர் கைதான அதிர்ச்சியில் மரணம் அடைந்தார். 1996 ல் கோர்ட்டில் இவரை பார்த்த அப்பா ஷேர் லி பாட் வீட்டிற்கு சென்று அதிர்ச்சியில் மரணம் அடைந்து இருக்கிறார். 

மீதம் இருக்கும் உறவினர்களை இவரால் பார்த்து அடையாளம் கூட காண முடியவில்லை. இப்படி மீதம் உள்ள 4 பேருக்கும் குடும்பமே நிலை குலைந்து தான் போய் உள்ளது.
ஒரே காரணம்

அமெரிக்காவில் விடுதலை ஆன அந்த ஐந்து கறுப்பின இளைஞர் களுக்கும் அதன்பின் லட்சக் கணக்கில் பணம் இழப்பீடாக வழங்கப்பட்டு பணியும் வழங்கப் பட்டது.. ஆனால் இவர்களுக்கு அப்படி ஒரு இழப்பீடும் வழங்கப்பட வில்லை. 
இஸ்லாமிய இளைஞர்கள்
அமெரிக்காவில் 1990ல் 5 கருப்பின் இளைஞர்களின் வாழ்க்கை பறி போனதற்கும்.. இந்தியாவில் 1996ல் மூன்று இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கை பறிபோனதற்கும் ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது... அவர்கள் சிறு பான்மையினர்!
செய்யாத தவறுக்காக 23 வருடம் தண்டனை அனுபவித்த 5 இஸ்லாமிய இளைஞர்கள் - நடுங்க வைக்கும் கதை ! செய்யாத தவறுக்காக 23 வருடம் தண்டனை அனுபவித்த 5 இஸ்லாமிய இளைஞர்கள் - நடுங்க வைக்கும் கதை ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 7/27/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚