மும்பை செல்லும் குமாரசாமி - பாதுகாப்பு கேட்கும் எம்.எல்.ஏ -க்கள் !

0
கர்நாடக மாநில அரசியல் தற்போது பெரும் ஆட்டம் கண்டுள்ளது. காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியின் எம்.எல்.ஏ -க்கள் பலர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள தால் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மும்பை செல்லும் குமாரசாமி



இந்நிலையில் தான் 10 எம்.எல்.ஏ -க்கள் கடந்த சனிக்கிழமை முதல் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலு க்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கூட்டணிக்கட்சி எம்.எல்.ஏ -க்கள் ஆட்சிக்கு எதிராகச் செயல் படுவதற்கு பா.ஜ.க -தான் காரணம் என ஆளும் கூட்டணி தரப்பு குற்றம் சாட்டியது.
எனினும், பா.ஜ.க இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. தலைமை மீது மக்கள் மட்டுமல்ல அவர்களின் கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கை இழந்ததைத் தான் இது காட்டுகிறது எனப் பா.ஜ.க பதில் குற்றம் சாட்டியது. இந்த அரசியல் களேபரங்களு க்கு நடுவேதான் 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மும்பை சென்றனர்.

இவர்கள் மும்பைக்கு பா.ஜ.க ஏற்பாட்டில் தான் சென்றுள்ளனர் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். இந்நிலையில் தான் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி யும் மாநில அமைச்சர் சிவகுமாரும் இன்று மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சந்திக்க வுள்ளதாகத் தகவல் பரவியது.

இந்நிலையில், மும்பையில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மும்பை கமிஷனரு க்குக் கடிதம் எழுதி யுள்ளனர். அதில், ``நாங்கள் குமாரசாமி மற்றும் சிவகுமார் ஆகியோர் மும்பை வரவுள்ளதாக கேள்விப் பட்டோம். எங்களுக்கு அவர்களைச் சந்திக்க விருப்பமில்லை. 



அதனால் இந்த விவகாரத்தில் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களை ஹோட்டலில் அனுமதிக்கக் கூடாது” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹோட்டல் வளாகத்துக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடு களைக் கண்காணித்தார். 
குமாரசாமி இன்று மும்பை செல்ல உள்ள நிலையில் எம்.எல்.ஏ-க்களின் இந்தக் கடிதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப் படுகிறது. கர்நாடக அரசியல் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஹோட்டலுக்கு வெளியே மாநில ரிசர்வ் போலீஸ் மற்றும் கலவர தடுப்புப் பிரிவு போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings