அக்கா வாழ்க்கையில் விளையாடாதே - ஊழியருக்கு நேர்ந்த கதி !

0
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த துளசாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர் (32), இவர், பூந்தமல்லி அருகே உள்ள பாப்பான்சத்திரம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில் கார்களை வாட்டர் வாஷ் செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்தக் கடைக்கு காரில் 4 பேர் வந்தனர். 
ஊழியருக்கு நேர்ந்த கதி



அவர்கள் சங்கரிடம் இந்தக் காரை வாட்டர் வாஷ் பண்ண வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்குச் சங்கரும் சம்மதித் துள்ளார். இந்தச் சமயத்தில் சங்கரை அவர்கள் 4 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தினர். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். 
அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்த அந்த 4 பேரும் காரில் தப்பினர். கத்தி குத்துக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய சங்கரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நசரேத்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சங்கரிடம் போலீஸார் என்ன நடந்தது என்று கேட்டனர். 

அதற்கு அவர், `என் அக்காள் வாழ்க்கையில் விளையாடாதே, அவளை விட்டுவிடு, இனிமேல் அவளுக்குத் தொல்லை கொடுத்தால் அவ்வளவு தான்' என்று கூறியபடி அவர்கள் கத்தியால் குத்திய தாகத் தெரிவித்தார். இதனால், சங்கரிடம் போலீஸார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சங்கரின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கலா (பெயர் மாற்றம்). இவருக்கு திருமணமாகி விட்டது. கலாவுக்கும் சங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சில காரணங்களுக் காகச் சங்கருடன் பேசுவதை கலா தவிர்த்தார். 
அக்கா வாழ்க்கையில் விளையாடாதே



இதனால், கலாவிடம் ஏன் நீ என்னிடம் பேசுவதில்லை என்று கூறி சங்கர் தகராறில் ஈடுபட் டுள்ளார். தொடர்ந்து சங்கரின் டார்ச்சரால் மனவேதனை அடைந்தார் கலா. இதனால் சங்கரின் தொல்லை குறித்து கலா தன்னுடைய தம்பி ஜெகனிடம் கூறியுள்ளார். இதனால் ஜெகன் ஆத்திர மடைந்தார். 

இதை யடுத்து ஜெகன் தன்னுடைய நண்பர்களான பாக்கியராஜ், குமார், லோகேஷ் ஆகியோரிடம் தகவலைத் தெரிவித்தார். சம்பவத்தன்று ஜெகன் மற்றும் நண்பர்களுடன் காரில் சங்கர் வேலைபார்க்கும் கடைக்கு வந்துள்ளனர்.
அங்கு சங்கரிடம் தகராறில் ஈடுபட்ட அவர்கள் கத்தியால் குத்தி யுள்ளனர். தலைமறை வாக இருந்த பாக்கியராஜ், குமார், ஜெகன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம். லோகேஷை தேடி வருகிறோம். கத்தி களையும் பறிமுதல் செய்துள்ளோம். 

சங்கரைக் கத்தியால் குத்திய 4 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளோம்" என்றனர். பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ் சாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)