முதுகு வலி ஏன் ஏற்படுகிறது? அறிகுறி என்ன? - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

முதுகு வலி ஏன் ஏற்படுகிறது? அறிகுறி என்ன?

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக் கொள்வது தான். 
முதுகு வலி அறிகுறி என்ன?
அந்த வகையில் தொடர்ந்து நோய்களைப் பற்றி வெளிச்சம் தந்து வரும் ‘நோய் நாடி’ பகுதியில், பலரையும் வாட்டி வதைக்கும் முதுகுவலி பற்றிய மருத்துவத் தகவல்களை விரிவாகப் பேசுகிறார்…
சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?
காரைக்குடி, காவேரி மருத்துவ மனையின் எலும்பு, மூட்டு நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் மு.சலீம். 

‘முதுகுவலி ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் நிச்சயம் வந்தே தீரும். 

ஆனாலும், அது ஏற்படுவதற் கான காரணம் பற்றியோ, அதற்கான தீர்வு பற்றியோ பெரும் பாலானவர்கள் அறியாமல் இருப்பதுடன், 

முதுகுவலி விஷயத்தில் தொடர்ந்து பல தவறுகளையும் செய்து வருவது வேதனையான விஷயம்’’ என்ற டாக்டர், தொடர்ந்து விளக்கமாகப் பேசினார்…
முதுகு வலி ஏன் ஏற்படுகிறது?

‘கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள தண்டுவட எலும்புகள், அதைச் சுற்றியுள்ள தசைகள், தசை நார்கள் மற்றும் அதன் உள்ளே இருக்கும் நரம்புகளின் பாதிப்புகளினால் ஏற்படக்கூடிய வலி தான், முதுகுவலி. 

கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள்… இவை அனைத்தும் இணைந்ததே முதுகுத் தண்டுவடம். 

இது தவிர, தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் சில நரம்புகள் மூளையின் தொடர்ச்சி யாகவும், சில நரம்புகள் கை, கால் நரம்புகளுடன் இணைக்கப் பட்டும் இருக்கும். 

இதில் ஏதேனும் சிறு பிரச்னைகள் தொடங்கி பெரிய பிரச்னைகள் வரை ஏற்படுவதன் காரணத்தால், முதுகுவலி ஏற்படும்.
தண்டு வடத்தில் பிரச்னை ஏற்படக் காரணங்கள் என்ன?

போதிய உடற்பயிற்சி இல்லாமை, அதிக அயர்ச்சி (ஸ்ட்ரெயின்), அதிக வேலை, அதீத உடற்பயிற்சி, அதீத விளையாட்டு, அடிபடுவது, கிருமிகளின் தாக்குதல், புற்றுநோய் பாதிப்பு, 
அதிக நேரம் உட்கார்ந்த படியே வேலை செய்வது, தவறான முறையில் பளு தூக்குவது, எலும்புத் தேய்மானம், எலும்பு பலவீனம் போன்றவற்றை 

தண்டு வடத்தில் பிரச்னைகள் ஏற்படுத்து வதற்கும், அதனால் முதுகு வலி உண்டாவ தற்குமான பொதுக் காரணங்களாகச் சொல்லலாம். 
பெண்களைப் பொறுத்த வரையில் கர்ப்பப்பை, நீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் கிருமித் தொற்று, குடல்நோய் பாதிப்பு மற்றும் 

மெனோபாஸ் கட்டத்தை தாண்டிய பெண்களுக்கு ஏற்படக்கூடிய கால்சியம் சத்து குறைபாடு போன்ற வற்றாலும் முதுகுவலி வரலாம். 

முதுகுத் தண்டு வடத்தில் உள்ள எலும்புகள், நரம்புகள் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து முதுகு வலி பிரச்னையின் தாக்கம் அமையும்.

அறிகுறிகள் என்னென்ன?

தினசரி நடவடிக்கையால் அதிக வலி

தசைப்பிடிப்பு

அன்றாட வேலைகளைச் செய்வதில் சிக்கல்

நடக்க முடியாமல் போவது

உட்கார்ந்து எழுவதில் சிரமம்

கை, கால் பலவீனம் அடைவது

தொடர்ந்து வேலை செய்வதில் சிக்கல்

சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மற்றும் பல.

ஆரம்பத்தில் சரி செய்யா விட்டால்…
முதுகுவலி என்பது முதுகில் ஏற்படும் வலி என்பதுடன் நின்றுவிடாது. கவனிக்காமல் விட்டால், சிலருக்கு முதுகுவலி யுடன் கூடிய கால்வலி வரக்கூடும். 

சிலருக்கு இருமும் போது, தும்மும் போது கூட முதுகுவலி அதிகரிக்கலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது, சிறிது நேரம் அமர்வதுகூட கடினமாக இருக்கும். 

தண்டு வடத்தில் ஏற்படும் அதிகப் படியான பாதிப்பால் சிலருக்கு கூன் விழலாம். 
சிலரால் தன் சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போகலாம். சிலருக்கு இயக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக நேரிடலாம். 

இப்படி முதுகுவலி பலவித உடல் பிரச்னைகள் மட்டுமின்றி, மனம் சார்ந்த பிரச்னைகள் வரை ஏற்படுத்தலாம். எனவே, இதை ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டியது அவசியம். 

மருத்துவ ஆலோசனை இல்லாமல் தானாக வலிநிவாரணி வாங்கிச் சாப்பிடுவது, பக்க விளைவுகளோடு பிரச்னை அடுத்த கட்டத்துக்கு வளரவும் வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்க.
முதுகுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

திடீரென முதுகுவலி வந்தால், அது அப்போதைய தற்காலிக செயலால் வந்த வலி என்று விட்டு விடலாம். போதிய ஓய்வே அதற்கான சிகிச்சை. தேவை யென்றால் தைலம் தடவிக் கொள்ளலாம். 
முதுகு வலி ஏன் ஏற்படுகிறது?
இரண்டு நாட்களில் வலி சரியாகி விடும். அதற்கும் மேல் தொடர்ந்தால், அது சாதாரண வலி அல்ல என்பதை உணர்ந்து, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். 

வலிக்கான காரணத்தை பரிசோதனைகள் மூலம் கண்டறிய வேண்டும்.
என்னென்ன சோதனை முறைகள்?

அறிகுறிகள் ப்ளஸ் சோதனைகள்: 
பாதிக்கப் பட்டவர் சொல்லும் அறிகுறிகள் மற்றும் அவரை நடக்கச் சொல்வது, அமரச் சொல்வது, 

எழுந்து நிற்கச் சொல்வது மூலம் மருத்துவர் மேற்கொள்ளும் சோதனை களின் அடிப்படையில், முதுகு வலிக்கான காரணத்தை 50% கண்டறியலாம்.

எக்ஸ்ரே: 

எலும்புத் தேய்மானம், அடிபட்டிருப்பது, பலவீனம், புற்றுநோய் பாதிப்பு போன்ற வற்றை எக்ஸ்ரேயின் மூலமாகக் கண்டறியலாம்.

ரத்தப் பரிசோதனை: 
எலும்பு பலவீனம், எலும்புக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்துக் குறைபாடு, கிருமித் தொற்று, புற்றுநோய் பாதிப்பு மற்றும் முதுகுவலிக்காக அளிக்கவிருக்கும் 

சிகிச்சையை ஏற்றுக் கொள்ள சம்பந்தப் பட்டவருக்கு போதிய உடல் தகுதி இருக்கிறதா… கல்லீரல், சிறுநீரகச் செயல் பாடுகள் சரிவர உள்ளதா… 

இவற்றை எல்லாம் ரத்தப் பரிசோதனை யின் மூலமாகக் கண்டுபிடிக்கலாம். முதுகுவலிக் கான 50% – 80% காரணங்களை எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனை மூலமாகக் கண்டு பிடித்து விடலாம்.
சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன்: எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலமாக கண்டுபிடிக்க இயலாத முதுகுவலிக் காரணங்களை, 

சிடி ஸ்கேன் மூலமாகவும், அதிலும் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலமாகவும் கண்டறிய லாம்.