இ பதிவு செய்தால் போதும்.. விளக்கமளித்த தமிழக அரசு ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

இ பதிவு செய்தால் போதும்.. விளக்கமளித்த தமிழக அரசு !

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் மேற்கொள்ள இ பதிவு அவசியம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இ பதிவு செய்தால் போதும்
தமிழகத்திற்கு உள்ளே பிற மாநிலங்கள், நாடுகளில் இருந்து வரும் நபர்களுக்கு இ பாஸ் முறை கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. 

இந்த நிலையில் நாளை காலை முதல் லாக்டவுன் விதிகள் தீவிரமாக்கப்படுகிறது.

இதையடுத்து வரும் மே 17ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களிளுக்கு உள்ளே பயணம் மேற்கொள்ள இ பதிவு அவசியம் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. 

இ பதிவு முறை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இ பாஸ் தேவையில்லை மாறாக இ பதிவு அவசியம் என்று அரசு கூறியுள்ளது. 

இ பாஸ் மற்றும் இ பதிவிற்கான (registration) வேறுபாட்டை தமிழக அரசு அறிக்கை மூலம் விளக்கி உள்ளது.

பாதங்கள் வீங்குவது எதனால்? வீக்கத்தை எவ்வாறு குறைப்பது?

தற்போது ஒருசில தொலைக்காட்சி ஊடகங்களில், அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு / வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு 

இ பதிவு செய்தால் போதும்.. விளக்கமளித்த தமிழக அரசு !

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக் கிடையே பயணம் மேற்கொள்ள இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று தவறுதலாக செய்தி ஒளிபரப்பப்படுகிறது.

மாறாக, மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக் கிடையே அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு / வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு

இளையான்குடியில் சீமான் கதறி அழுத உருக்கமான வீடியோ !

பயணம் செய்யும் பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணைய தளத்தில் இ-பதிவு (e-registration) செய்யலாம்.

இ-பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் 

என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என்று தமிழக அரசு தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 

இ பதிவு விளக்கமளித்த தமிழக அரசு !

இ பாஸ் கிடைக்க பொதுவாக 2-3 நாட்கள் தாமதம் ஆகும். மாவட்டங்களுக்கு இடையில் அவசர பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு இது சிக்கலாகும்.

அதே போல் திருமணம், மரணம் போன்ற அத்தியாவசிய பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கும் சிக்கலாகும். 

காளான் அடிக்கடி உண்பதால் என்ன பயன்?

இதன் காரணமாக இ பாஸுக்கு பதிலாக இ பதிவை செய்து விட்டு, அதற்காக வழங்கப்படும் ஆதராத்தை மட்டும் காட்டி விட்டு பயணம் மேற்கொள்ளலாம். 

இதனால் 2-3 காத்திருக்கலாம் உடனே இ பதிவு செய்துவிட்டு, உடனுக்குடன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.