நாய் துரத்திய இளைஞர் கார் மோதி உயிரிழந்தார் - பிறந்த நாளில் சோகம் !

0
பிலிபைன்ஸ் நாட்டின் மணிலாவில் உள்ள கியூஸான் நகரில் கடந்த 4-ம் தேதி நள்ளிரவு சில இளைஞர்கள் ஒரு தெருவில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு நாய் இவர்களைக் கண்டு குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. 


இந்த இளைஞர்கள் நாயைத் துரத்துவது போலச் சைகை செய்யவே அந்த நாய் உடனடியாக இளைஞர் களை விடாமல் துரத்தி யுள்ளது. 

இவர்கள் அனைவரும் ஓடிச் சென்று தெருவின் முனையில் திரும்பும் போது எதிரில் வந்த கார் ஒன்று இளைஞர் ஒருவரின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலை தளங்களை ஆக்கிரமித் துள்ளது. இதில் இன்னொரு சோக சம்பவம் என்ன வென்றால் விபத்தில் இறந்த ஜோஷுவா (Joshua) என்ற 20 வயது இளைஞருக்கு அன்றைய தினம் தான் பிறந்தநாள். 

தன் பிறந்தாளை கொண்டாடுவ தற்காக நண்பர்க ளுடன் உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் தான் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து ஜோஷிவா வின் நண்பர் க்றிஷா (Chrisha) கூறும்போது, “ஜோஷுவா தற்போதுதான் கல்லூரி யில் படித்து வருகிறான். வரும் ஜூன் மாதம் நிறை வடைந்தால் அவர் பட்டதாரியாகி விடுவான். 

அவனது பிறந்த நாளை கொண்டாடு வதற்காக நாங்கள் செல்லும் போது ஒரு நாய் துரத்தியதால் நாங்கள் ஓடினோம். அப்போது எதிரே வந்த கார் மோதி ஜோஷூவா தூக்கி வீசப்பட்டு இறந்து விட்டான்’ எனத் தெரிவித் துள்ளார். 

மேலும், க்றிஷாதான் வைரலான வீடியோவை சமூக வலை தளத்தில் பதிவிட்டு ள்ளார். இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஜோஷுவா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அன்று தன் பிறந்தாள் தொடர்பாகப் பதிவை வெளி யிட்டிருந்தார். 
அதில், ‘இன்று என் பிறந்த நாள். நான் என் 20-வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். ஆனால், நான் இன்னும் குழந்தையாக இருப்ப தாகவே கருதுகிறேன். 



மேலும்
என் வாழ்நாளில் அடுத்த அத்தியாய த்தைத் தொடங்க உள்ளேன். எனக்கு வழிகாட்ட நிறைய மக்கள் உள்ளனர். என் நண்பர் களுக்கு நான் எப்போதும் உண்மை யாக உள்ளேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings