புரோஸ்டேட் வீக்கத்தை இயற்கை வழியில் சரிசெய்ய !

பொதுவாக புரோஸ்டேட் பிரச்சனையை 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். புரோஸ்டேட் என்பது ஒரு ஆண் சுரப்பி. இது சிறுநீர் வடிகுழாய் ஆரம்பமாகும் இடத்தில் அமைந்திருக்கும்.
புரோஸ்டேட் வீக்கத்தை இயற்கை வழியில் சரிசெய்ய !
இந்த சுரப்பியில் இரண்டு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதில் புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் மற்றும் சுரப்பியில் அழற்சி. 

புரோஸ்டேட் சுரப்பியில் கோளாறுகள் இருந்தால், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது பிரச்சனையை சந்திக்கக் கூடும்.

அதோடு, முதுகின் கீழ்ப்பகுதியில் வலி மற்றும் கால், பாதம் அல்லது இடுப்பு பகுதியில் வலி ஏற்படும். 

இங்கு புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள வீக்கத்தை மற்றும் இதர பிரச்சனை களை சரிசெய்ய உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப் பட்டுள்ளன.
புரோஸ்டேட் வீக்கத்தை இயற்கை வழியில் சரிசெய்ய !
சூரியகாந்தி விதைகள் மற்றும் பாதாமை தினமும் மாலை 5-7 மணிக்குள் சாப்பிட வேண்டும். 

இந்நேரத்தில் நட்ஸ் மற்றும் விதைகளை சாப்பிட்டால், உடல் சிறப்பாக செயல்பட்டு, புரோஸ்டேட் சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
புரோஸ்டேட் வீக்கத்தை இயற்கை வழியில் சரிசெய்ய !
1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த ஹாசில்நட் இலைகளை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்நீரை வடிகட்டி, தினமும் பலமுறை பருக வேண்டும். 

இதனால் புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள பிரச்சனைகள் சரியாகி, நல்ல நிவாரணம் கிடைக்கும்.
புரோஸ்டேட் வீக்கத்தை இயற்கை வழியில் சரிசெய்ய !
4 கப் நீரில் சிறிது பைன் மர ஊசி இலைகளை சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, நாள் முழுவதும் சிறிது சிறிதாக குடிக்க வேண்டும். 
புரோஸ்டேட் வீக்கத்தை இயற்கை வழியில் சரிசெய்ய !
1 1/2 கப் நீரில், 3 டேபிள் ஸ்ழுன் துருவிய அஸ்பாரகஸ் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி 2 மணிநேரம் கழித்து வடிகட்டி, நாள் முழுவதும் பருக வேண்டும்.

சின்ன வெங்காயத்தை தேனுடன் சேர்த்து தினமும் சாப்பிட, புரோஸ்டேட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
Tags: