பாம்பை கடித்துத் தின்னும் போராட்டம் - நாளை, அய்யாக்கண்ணு !

0
கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர கோரி, விருத்தாசலத்தில் விவசாயிகள் நாமம் போட்டு காதில் பூவைத்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர். 


`நாளை, பாம்பை கடித்துத் தின்னும் போராட்டம் நடத்தப்படும்' எனவும் அய்யாக் கண்ணு தெரிவித் துள்ளார்.

விருத்தாசலம் பாலக்கரை யில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை விவசாயி களுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையைக் கேட்டுக் காத்திருக்கும் போராட்டம் நடந்தது. 
சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார். 

இதில், 2016-17 மற்றும் 2017 -18-ம் ஆண்டுக் கான மத்திய அரசு அறிவித்த கரும்பின் கிரயத் தொகையை வழங்காத ஆலை நிர்வாகத்திட மிருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும், 

ஐந்து ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ள பாக்கித் தொகை ரூ.93 கோடியை உடனே வழங்கிட வேண்டும் உட்பட, பல்வேறு கோரிக்கை களை வலியுத்தி காத்திருக்கும் போராட்டம் நேற்று காலை தொடங்கியது.


இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது. இன்று காலை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில், உடலில் நாமம் அணிந்து காதில் பூவைத்து அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். 
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்றும், நாளை பாம்பை கடித்துத் தின்னும் போராட்டம் நடைபெறும் எனவும் அய்யாக் கண்ணு தெரிவி த்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings