வீட்டு வேலைக்கு வந்த விருத்தாசலம் சிறுமி 12 நாளில் தற்கொலை ஏன்?

0
சென்னை அரசு டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த 17 வயதுடைய விருத்தாசலம் சிறுமி, தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சென்னையை அடுத்த புழல், ஆதிலட்சுமிபுரம், ஆதிலட்சுமி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் தாமோதரன். 


இவர், சென்னை அரசு மருத்துவ மனையில் பணியாற்று கிறார். இவரின் மனைவியும் மருத்துவராக உள்ளார். இவரின் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் விருத்தாச லத்தைச் சேர்ந்த சசிகலா (பெயர் மாற்றம்) என்பவர் வீட்டு வேலைக்குச் சேர்ந்துள்ளார். 

17 வயதாகும் இந்தச் சிறுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புழல் போலீஸாரு க்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. 

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சசிகலா தூக்கில் தொங்கிய அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதன் பிறகு அவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சசிகலாவின் உறவினர்கள், ``12 நாள்களு க்கு முன்தான் டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அவர், நன்றாகத் தான் எங்களிடம் பேசிக் கொண் டிருந்தார். தற்கொலை செய்து  கொள்ளுமளவு க்கு அவர் கோழையல்ல. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்ப தாகப் போலீஸிடம் கூறி யுள்ளோம். 
எனவே, போலீஸார் விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும். மேலும், சசிகலா தூங்கில் தொங்கிய அறையின் கதவை உடைத்து போலீஸார் உள்ளே சென்ற போது வீடியோ எடுத்துள்ளனர். 

அதில், சசிகலாவின் கால், நாற்காலி யின் மீது உள்ளது. இது தான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி யுள்ளது’’ என்றனர். போலீஸார் கூறுகையில், ``சசிகலாவின் அப்பா, சேகர், துடைப்பம் விற்பனை செய்து வருகிறார். விருத்தாசலம், படுகலநத்தம் பகுதியைச் சேர்ந்தவர். 

சசிகலாவின் செல்போனை நாங்கள் ஆய்வு செய்த போது எங்களுக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னைக்கு அவர் வேலைக்கு வருவதற்கு முன் ஊரில் சில பிரச்னை ஏற்பட்ட தாகத் தகவல் கிடைத்துள்ளது. 

மேலும், அவர் குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பரில் நீண்ட நேரம் பேசியுள்ளார். அவர் குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர். இதற்கிடை யில் சசிகலாவின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டுக் காக அவரின் உறவினர் களும் போலீஸாரும் காத்திருக் கின்றனர். 


அதன் பிறகுதான் அவரின் இறப்புக்கான காரணம் தெரியவரும். இந்தச் சூழ்நிலையில் டாக்டர் தரப்பில் பேசியவர்கள், ``சசிகலா இப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று எங்களுக்குத் தெரிய வில்லை. 
வேலைக்குச் சேர்ந்த பிறகு வீட்டில் எல்லோரிட மும் சகஜமாக த்தான் பேசிக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று சேத்துப் பட்டில் உள்ள பள்ளியில் பயிலும் பேத்தியை அழைத்து வர டாக்டரின் அப்பா தனசேகர் வெளியில் சென்று விட்டார். 

மேலும்
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தான் சசிகலா இந்த முடிவை எடுத்து விட்டார். சசிகலாவின் தற்கொலை எங்களுக்கு கடும் மன வருத்தத்தை ஏற்படுத்து கிறது’’ என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings