சென்னையில் உள்ள பல் மருத்துவரை நம்பி, 4 மாத கர்ப்பத்தைக் கலைத்த பெண் டாக்டர், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ''வயது வித்தியாசம், மதம் ஆகிய வற்றைக் குறிப்பிட்டு எங்களைப் பிரித்து விட்டனர்'' என்று பெண் டாக்டர் நம்மிடம் தெரிவித்தார்.
சென்னை முகப்பேரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி யிருக்கும் பல் மருத்துவர் ஒருவர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத் துள்ளார்.
அதில், ``பல் மருத்துவரான நான், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பல் மருத்துவம் (எம்டிஎஸ்) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.
அதே கல்லூரியில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பல் மருத்துவர் லிங்கேஸ்வர் காந்தன் என்பவர், முதுகலை பல் மருத்துவம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
ஒரே கல்லூரி என்பதால், எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. ஒன்றரை மாதங்களாக கணவன், மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்தோம். அப்போது நான் கர்ப்ப மடைந்தேன். இருவரும் படிப்பதால், கர்ப்பத்தைக் கலைக்கும்படி லிங்கேஸ்வர் கூறினார். இதனால் தி.நகரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்குச் சென்றோம்.
கர்ப்பத்தைக் கலைப்பதற்கு முன், கண்டிப்பாக என்னைத் திருமணம் செய்து கொள்வதாக அவர் எனக்கு உறுதி யளித்தார். அதன் பிறகு தான் நான் கர்ப்பத்தைக் கலைக்க சம்மதித்தேன். கடந்த 28.10.2018-ல் எனக்கு மருத்துவ மனையில் கர்ப்பம் கலைக்கப் பட்டது.
அப்போது, என்னோடு லிங்கேஸ்வர் தங்கி யிருந்தார். அவர்தான் எல்லா உதவி களையும் எனக்குச் செய்தார். அதன் பிறகு, என்னுடைய பெற்றோர் என்னை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று விட்டனர். அங்கு, மூன்று வாரங்களாக நான் சிறை வைக்கப் பட்டேன்.
என்னுடைய அப்பா, லிங்கேஸ்வர் என்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்றால் சில கட்டுப் பாடுகளை விதித்தார். ஆனால், அந்தக் கட்டுப் பாடுகளுக்கு நிச்சயம் லிங்கேஸ்வர் சம்மதிக்க மாட்டார்.
இதனால், படிப்பதற்காக வீட்டிலிருந்து சென்னை வந்தேன். லிங்கேஸ்வர் நடவடிக்கை களில் மாற்றம் தெரிந்தது. இந்தச் சமயத்தில் லிங்கேஸ் வரிடம் என்னைப் பதிவு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினேன். அதற்கு அவர் சம்மதிக்க வில்லை.
பாதிக்கப்பட்ட எனக்கு நீதிகிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட் டுள்ளார். அதன்பேரில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லிங்கேஸ்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பாதிக்கப் பட்ட பெண்ணின் எதிர் காலம் கருதி அவரின் பெயர், விவரங்களை வெளியில் தெரிவிக்க வில்லை. இருப்பினும் பல் மருத்துவர் லிங்கேஸ்வர் குறித்து விசாரித்து வருகிறோம்.
அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளோம். அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது. முன்ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வில்லை. உயர்நீதி மன்றத்தில் அவர் தரப்பில் முன்ஜாமீன் கேட்டால் அதைச் சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்.
இந்தச் சூழ்நிலையில் புகார் கொடுத்த பெண், அதிகளவில் அவசரப் படுகிறார். புகார் கொடுத்த சமயத்தில் லிங்கேஸ்வரிடம் விசாரித்தோம். அப்போது அந்தப் பெண் லிங்கேஸ்வரை கைது செய்ய சம்மதிக்க வில்லை. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.
லிங்கேஸ்வரிடம் விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும்" என்றனர். கர்ப்பம் கலைக்கப் பட்டது குறித்து கேட்டதற்கு, அது தொடர்பாக லிங்கேஸ்வர் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவ மனையில் விசாரித்த பிறகு தான் சொல்ல முடியும் என்கின்றனர் போலீஸார்.
லிங்கேஸ்வர் மீது புகார் கொடுத்த பெண் பல் மருத்துவருக்கு அவரின் குடும்பத்திலும் ஆதரவு இல்லை. இதனால் தன்னந் தனியாக நண்பர்களின் உதவியோடு போராடி வருகிறார்.
ஆரம்பத்தில் இவர் போலீஸிடம் புகார் கொடுத்த போது சம்பந்தப்பட்ட மகளிர் போலீஸ் நிலையத்தில் சரியான விசாரணை நடத்தப்பட வில்லை என்று சொல்கிறார் அந்தப் பெண் பல்மருத்துவர்.
இதனால் போலீஸ் கமிஷனர் ஏ.கே .விஸ்வநாதனைப் பெண் பல் மருத்துவர் சந்தித்த பிறகு தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டதாக அவர் நம்மிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் நம்மிடம் கூறுகையில், ``நானும் அவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மதம், வயது ஆகிய வற்றைக் காரணம் காட்டி எங்களைப் பிரிக்கின்றனர். லிங்கேஸ்வரும் நானும் உயிருக்கு உயிராகக் காதலித்தோம்.
கல்லூரியில் நாங்கள் இருவரும் பேசுவ தில்லை. இந்தச் சமயத்தில் தான் ஹாஸ்டலி லிருந்து வாடகை வீட்டுக்குச் சென்றேன். வீட்டுக்கு வந்த லிங்கேஸ்வர், எனக்கு சாப்பாடு சமைத்துத் தருவார். இந்தச் சமயத்தில் ஒரு வாரம் நான் பெட்ரெஸ்ட் எடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டேன்.
அப்போது அவர் எனக்கு எல்லா உதவி களையும் செய்தார். அவர் நடந்து கொண்ட விதம் அவரின் அன்பை முழுமை யாக நம்பினேன். கர்ப்பத்தைக் கலைத்த பிறகு அவர் என்னை ஏமாற்றி விட்டார்.
என்னுடைய கடந்த கால வாழ்க்கையும் லிங்கேஸ் வரின் கடந்த கால வாழ்க்கையும் எங்கள் இருவருக்கும் தெரியும். தற்போது கூட அவரோடு வாழத்தான் விரும்புகிறேன். நான் போலீஸில் புகார் கொடுத்ததும் எங்கள் இருவரையும் போலீஸார் விசாரித்தனர்.
பிறகு நடந்த கவுன்சலிங்கின் போது குழந்தை தன்னுடையது என்று லிங்கேஸ்வர் கூறினார். கடந்த டிசம்பர் 19-ம் தேதி லிங்கேஸ்வர் மீது நடவடிக்கை எடுக்காம லிருக்க குறிப்பிட்ட தொகையை எனக்கு கொடுப்ப தாகக் அவரின் குடும்பத்தினர் கூறினர்.
மேலும் லிங்கேஸ்வரின் குடும்பத்தினர், என்னுடைய உயர் கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்வதாகக் கூறினர். அப்போது நான் எனக்கு பணம் வேண்டாம். வாழ்ந்தால் உங்கள் மகனுடன் தான் வாழ்வேன் என்று கூறினேன்" என்றார் கண்ணீர்மல்க.
லிங்கேஸ்வரின் அப்பா லட்சுமி காந்தனிடம் பேசினோம். ``என் மகன் மீது போலீஸில் புகார் கொடுத்த பெண்ணுக்கும் லிங்கேஸ்வரு க்கும் 3 வயது வித்தியாசம் உள்ளது.
இது தவிர நாங்கள் இந்து. அந்தப் பெண் முஸ்லிம். அந்தப் பெண்ணின் தந்தை என் மகனை மதம் மாறக் கூறியதாக என் மகன் என்னிடம் தெரிவித்தார். அந்தப் பெண்ணுடன் என் மகன் பழகும் போதே இருவரையும் கண்டித்தேன்.
ஆனால், இருவரும் கேட்க வில்லை. என் மகனுக்கு அக்காள் மாதிரி இருக்கும் பெண்ணை எப்படித் திருமணம் செய்து வைக்க முடியும். இதற்கிடை யில் கர்ப்பதைக் கலைத்ததாக அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார்.
அந்தக் குழந்தைக்கும் என் மகனுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. புகார் கொடுப்பதற்கு முன் இரு வீட்டினரும் பேசி திருமணம் செய்து வைக்கலாம் என்ற எண்ணம் இருந்தது.
ஆனால் பல வகையில் எங்களை அவமானப் படுத்திய அந்தப் பெண்ணை இனிமேல் என் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. வழக்கை சட்ட ரீதியாகச் சந்திக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
காதல் என்பது அனைவரு க்கும் பொதுவானது. அதில் திருமணத் துக்கு முன் ஏற்பட்ட பழக்கத்தால் படித்தவர் களும் படிக்காத வர்களும் பாதிக்கப் பட்டு போலீஸ் நிலைய படியேறுவது வாடிக்கையாகி விட்டது.
தனியொருத்தி யாகப் பெண் பல் மருத்துவர், இன்னொரு மருத்துவர் மீது குற்றம் சாட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.




Thanks for Your Comments