மனிதர்கள் மிருகங்களுடன் பாலியல் உறவு ஏன்?

0
ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், 
பாலியல் உறவு ஏன்?
அதை யடுத்து அந்த ஆடு இறந்து போனதாக தகவல் வெளியானது, அனைவரு க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மேவார் காவல்துறை கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டம் 377 பிரிவு மற்றும் மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

விவகாரம் போலீசாருக்கு தெரிய வந்ததும், இறந்துபோன ஆடு உடற்கூறாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டது. ஆனால் அந்த சோதனையில் குற்றச் செயல் உறுதிப் படுத்தப்பட வில்லை.

உள்காயத்தினால் மரணம் நிகழ்ந்திருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை. 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஆர்.ஜிதேந்திரா தெரிவித்தார்.

மிருகத்துடன் செக்ஸ்!

விலங்கு களுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதை ஆங்கிலத்தில் பீஸ்டியாலிடி (Beastiality) என்று கூறுகின்றனர். மிருகத்துடன் புணர்ச்சி என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப் படுகிறது. 
மிருகங்களுடன் பாலியல்
ஆக்ஸ்போர்டு அகராதியின்படி, ஒரு மனிதனுக்கும் ஒரு மிருகத்திற்கும் இடையே பாலியல் உறவுக்கு பீஸ்டியாலிடி (Beastiality) என்று பெயர் கொடுக்கப் பட்டுள்ளது.

தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையத்தின் வலைதளத்தில் இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது. 'மனிதர்கள் விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்வது மிகவும் முக்கியமான பிரச்சினை, 

ஆனால் இது தொடர்பான வன்முறை வழக்குகள் பதிவு செய்யும் சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாகும்'.

தேசிய பயோ டெக்னாலஜி தகவல் மையத்தின் வலை தளத்தில் வெளியிடப் பட்டுள்ள ஒரு ஆராய்ச்சியின் படி, 

பீஸ்டியாலிடி (Beastiality) என்பதும் ஒரு விதமான பாலியல் வன்கொடுமையே. பாலியல் விருப்பத்தை 

நிறைவேற்றிக் கொள்வதற் காக விலங்குகளை பயன்படுத்துவது பாலியல் வன்முறை என்று கூறப்பட் டுள்ளது.

இது போன்ற செயலின் நோக்கம் உடல் ரீதியான திருப்தி மட்டுமே, எந்த விதமான உணர்ச்சித் தொடர்பும் இல்லை. 

இந்த ஆராய்ச்சியின் படி, சில சமுதாயங்களில், குறிப்பிட்ட சில பாலியல் நோய்களுக் கான சிகிச்சையாக பீஸ்டியாலிடி (Beastiality) கருதப்படுகிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பாலியல் துறை நிபுணர் மருத்துவர் வினோத் ரெய்னாவின் கூற்றுப்படி, மிருகங்களுடன் பாலியல் ரீதியாக உறவு கொள்பவர்கள் 'சாடிஸ்ட்' (கொடூர மனப்போக்கு கொண்டவர்கள்). 

இது முற்றிலும் மனம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார் அவர்.

மிருகங்களை புணர்வதற் கான காரணம், பாலியல் ஏமாற்றம் (Sexual frustrations) மற்றும் பாலியல் கற்பனை (sexual fantasies) என இரண்டு வகைக்குள் அடங்கி விடுவதாக சொல்கிறார் டாக்டர் ரெய்னா.

ஒரு ஆய்வறிக்கை யின் படி, குழந்தைகளும் இது போன்ற செயல்களில் அதிகமான அளவில் ஈடுபடுகின்றனர். 
பாலியல் உறவு
ஆனால் ஒரு குழந்தை இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால், அதனை அலட்சியப் படுத்தி விடக்கூடாது. 

இது மனச்சிதைவு போன்ற வேறுவிதமான பிரச்சனை களுக்கு இட்டுச் செல்லலாம். இது போன்ற நடத்தைகள் எதிர் காலத்தில் மிகவும் ஆபத்தானதாக மாறலாம். 

பொதுவாக இது போன்ற விஷயங்களை புறக்கணிப்பதால், எதிர் காலத்தில் சமூகம் மிகப்பெரிய ஆபத்தை எதிர் கொள்ள நேரிடும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

"மனிதர்களின் வாழும் சூழலே பல நேரங்களில் இதுபோன்ற விஷயங் களுக்கு அடிப்படையாக இருக்கிறது. 

குடும்பங்களில், பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றி வெளிப் படையாக பேசுவதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்றன. 

பாலியல் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற் கான சூழ்நிலைகளும் பெரும்பாலும் அமைவ தில்லை. 
இது போன்ற நேரங்களில் மனிதர்களின் பாலியல் உணர்வு களுக்கு பலியாவது விலங்குகளே என்பது வருத்தத்திற் குரிய விஷயம்" என்று சொல்கிறார் டாக்டர் ரெய்னா,

இது தான் முதல் சம்பவமா?

ஹரியானாவில் பதிவாகி யிருப்பது தான் மிருகங்களுடன் பாலியல் உறவு கொள்வது தொடர்பாக வெளியாகி யிருக்கும் முதல் சம்பவமா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

அமெரிக்கா வில் வடகிழக்கு புளோரிடாவில் விலங்குகள் மீதான பாலியல் தாக்குதல் களில் அதிகம் இலக்கு வைக்கப்படுவது ஆடுகள் என்பது அதிர்ச்சி யளிக்கிறது.

என்.சி.பி யின் அறிக்கையிலும் இதே போன்ற ஒரு வழக்கு பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. 

18 வயது இளைஞன், தங்கள் வீட்டில் வளர்த்து வந்த மாடுகளுடன் பாலியல் உறவு கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு கன்றுகள் உயிரிழந்தன. 

அவற்றின் உடற்கூறாய்வு செய்யப்பட்ட போது, அவற்றின் சடலங்களில் மனிதனின் விந்தணுக்கள் இருந்தது தெரிய வந்தது.

ஆனால் அந்த இளைஞனை கைது செய்து விசாரித்த போது, அவனுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியுமே இல்லை என்பது அனைவருக்கும் அதிர்ச்சி யளித்தது.
மிருகங்களுடன் பாலியல் உறவு கொள்வது தொடர்பாக
மிருகங்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப் படுகிறது. 

இந்தியாவைத் தவிர, நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் விலங்கு களுடன் பாலியல் உறவு கொள்வது தடை செய்யப் பட்டுள்ளது.

இதைத் தவிர, ஜெர்மனியிலும் விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்வது தடை செய்யப் பட்டுள்ளது. 

இங்கிலாந்தில், இந்தக் குற்றத்திற்கான தண்டனையில் 2003 ஆம் ஆண்டில் மாற்றங்கள் செய்யப் பட்டது.

விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்ளும் குற்றத்திற்கு விதிக்கப்பட்டு வந்த ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, 

அதிக பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை யாக மாற்றப் பட்டது. ஆனால், ஹங்கேரி, பின்லாந்து போன்ற நாடுகளில் மிருகங்களை புணர்வது குற்றம் இல்லை. 

2011இல் டென்மார்க் அரசு இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டது. 

அதன்படி, '17 சதவிகித கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை யளித்த விலங்குகள் குறைந்தது ஒரு முறையாவது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டிருப்ப தாக தெரிவித் துள்ளனர்'. BBC.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)