மதுரையில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் தாத்தா !

0
கோலி சோடா சினிமா குழுவினர் தங்கள் சினிமா விளம்பரத்திற் காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து எவ்வித எதிர் பார்ப்பும் 
மதுரையில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடும் தாத்தா
இ்ல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்பர்வகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசும் பணஉதவியும் வழங்கி கவுரவித்தனர்.

அவர்களி்ல் ஒருவர் தான் மதுரை ராமு தாத்தா எண்பத்தைந்து வயதாகும் இவர் கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளியவர் களுக்காக பத்து ரூபாய்க்கு சாப்பாடு போட்டுக் கொண்டு இருக்கிறார்.
விருதுநகர் அருகே உள்ள வில்லுாரைச் சேர்ந்தவர், தனது 13 வயதில் ஒட்டலில் சர்வராக உழைக்க ஆரம்பித்தார் பல ஊர்களில் பல ஒட்டலில் வேலை பார்த்து இருக்கிறார்.

அப்படி ஒரு சமயம் வடலுார் போயிருந்த போது பசிப்பிணியகற்றும் வள்ளலார் ஆசிரமத்திற்கு சென்றிருக் கிறார், 

அங்குள்ளவர்கள் வயிறார சாப்பிட்டு மனமார வாழ்த்து வதைப் பார்த்தார்,

அப்போது முதல் தானும் இது போல முடிந்தவரை எளியவர்களின் பசி அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.

மதுரை குருவிக்காரன் சாலையில் தெரு ஒரத்தில் ரோட்டுக்கடை போட்டு ஒரு இட்லி பத்து பைசாவிற்கு விற்று தனது தொழிலை ஆரம்பித்தார் 

அப்போது முதல் இப்போது பத்து ரூபாய்க்கு சாப்பாடு போடுவது வரை காசு இல்லாதவர்கள் இவரது கடையில் இலவசமாக சாப்பிட்டு விட்டு போகலாம், 
மேலும் தினமும் பத்து இருபது சாப்பாட்டை பார்சாலாக கட்டி நடக்க முடியாதர்களுக்கு கொண்டு போய் 
கொடுத்து விட்டு வருவார் இப்போது வயதாகி விட்டதால் கொடுத்தனுப்பி விடுகிறார்.

குருவிக்காரன் சாலையில் இருந்தவர் படிப்படியாக வளர்ந்து இப்போது இருக்கும் மதுரை அண்ணா நிலையம் பகுதிக்கு வந்தார், 

இவரது மனைவி பூரணத்தம்மாள் இவருக்கு துணையாக இருந்தது மட்டுமின்றி இவரது தொழிலுக்கு, தொண்டுக்கு துாணாகவும் இருந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு தான் ராமுவின் மனைவி பூரணத்தம்மாள் இறந்து போனார் இறக்கும் தருவாயிலும் 

கணவரை அழைத்து எந்த சூழ்நிலையி லும் குறைந்த விலையில் ஏழைகளுக்கு சாப்பாடு போடுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள் என்று சொல்லி யிருக்கிறார்.

''அந்த மகராசி இல்லாம நான் மனதால் கஷ்டப்படுறேன், ஆனா கடைக்கு நம்பி வரக்கூடிய தொழிலாளர்கள் ஏழைகள் 

கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இந்த வயதிலும் இஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறேன்'' என்று நெகிழ்கிறார் ராமு தாத்தா.

இவரின் குடும்பத்தினரும் இவருக்கு நிறையவே உதவுகின்றனர்.

அந்தந்த மாதம் உணவு பொருள் வாங்குவதற்கும், வேலை யாட்களுக்கு சம்பளம் போடுவதற்கும் எவ்வளவு செலவாகுமோ? 
அதை வைத்து தான் சாப்பாட்டின் விலையை நிர்ணயம் செய்கிறேன், எனது செலவிற்கு கட்டுப் படியானால் போதும் ஒரு பைசா லாபம் வேண்டாம். 
மதிய சாப்பாடு பத்து ரூபாய்க்கு தருவது போல இப்போது காலையில் இட்லி தோசையும் குறைந்த விலைக்கு தருகிறேன்.

யார்ட்டேயும் எந்தவித உதவியும் எதிர்பார்ப்பது இல்லை இருந்தாலும் சில புண்ணிய வான்கள் தேடி வந்து உதவும் போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன், 

அப்படித் தான் கோலி சோடா குழுவினர் வழங்கிய பரிசினையும் பாராட்டையும் ஏற்றுக் கொண்டேன் என்று 

சொல்லும் ராமு தாத்தா தொல்லை யாக நினைத்து மொபைல் போனிற்கு விடை கொடுத்து விட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings