விண்வெளி செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !

0
சோயுஸ் டிஎம்ஏ -19 எம்' விண்கலன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற பிரிட்டிஷ் விண்வெளி வீரர் டிம் பீக் பூமிக்கு திரும்பினார்.
விண்வெளி நிலையம்

அந்த விண்கலன் அறிவியல் அருங்காட்சி யகத்தில் தற்போது காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. விண்வெளி பயணம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்களை பட்டிய லிடுகிறார் மேஜர் டிம் பீக்.


1. குறுகிய இடம் என்பது பிரச்சனை இல்லை

சோயுஸில் சென்று அமர்ந்து விட்டால், அதன் பின் அது வசதியாகவே இருக்கும். இது மிகவும் குறுகலான நெருக்கமான இடம். 

கிளாஸ்டிரோபி யாவில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த இடம் போதுமான தாக இருக்காது. அங்கு சென்று அமர்ந்து விட்டால், வசதி போதுமான தாகவே இருக்கும்.

2. சாளரம் வழியாக பார்க்க நேரம் ஒதுக்குங்கள்

விண்கலனை செலுத்தும் போது, அதன் முன்பகுதி நகரத் தொடங்கியதும், சாளரம் வழியாக பார்ப்பதற் கான முதல் வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் கஜகஸ்தானில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் ஐந்து மணிக்கு விண்கலனை செலுத்தத் தொடங்கினோம், எனவே இரவு நேரத்தில் பூமியின் சுற்றுப் பாதையை சென்றடைந்தோம்.


எனவே சாளரம் வழியாக இரவு நேரத்தில் பூமியின் தோற்றத்தை நான் முதன்முதலில் பார்த்தேன். அத்துடன் அற்புதமான நிலா உதயத்தையும் கண்டு களித்தேன்.

3. விண்கலன், செலுத்தப்படும் போது இருந்ததை விட பூமிக்கு திரும்பும் போது அதிக சீரற்ற தன்மையை கொண்டிருந்தது

மீண்டும் பூமிக்கு திரும்புவது இங்கிருந்து சென்றதை விட அதிக ஆற்றல் வாய்ந்ததாக, வேகமானதாக இருந்தது. 

விண்கலன் செலுத்தப்படும் சமயத்தில் மிகவும் தீவிரமாகவும், வேடிக்கை யானதாகவும் இருக்கும். மார்ச் 25 வரை இது ஒரு நிலையான முடுக்கமாக இருக்கும்.

பூமிக்கும் திரும்ப வரும்போது அதிக புவியீர்ப்பு விசை காரணமாக, செல்லும்போது இருந்ததை விட திரும்பும் போது மயிர் கூச்செறியும் உணர்வை அதிகமாக அனுபவிக்க முடியும். 
அதில் உள்ள "பாராசூட்" திறக்கும் போது மிகப் பெரியதாக இருக்கும், அதை நேரடியாக திறக்க முடியாது.

4. ஒலியின் வேகத்தை நீங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும்
விண்வெளி செல்பவர்கள்

வளி மண்டலத்தின் கீழ் பகுதிக்குக் திரும்பி வருகையில், ஒலி வேகத்தை விட மேலே நீங்கள் செல்கிறீர்கள். எனவே முதலில் ஒரு பகுதி திறக்கும், 


பின்னர் பாராசூட்டின் முக்கியமான மேற்பகுதி திறப்பதற்கு முன்னதாக, மூன்று பகுதிகள் திறக்கும். இவை அனைத்தும் செயல்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்தும்.

விண்கலம் கீழே இறங்குவது அதிவேகமாக இருக்கும். இறுதியில் பிரதான பாராசூட் பகுதி திறந்ததும் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்.

5. வீட்டைப் போன்று வேறு எந்த இடமும் இல்லை

"கஜகஸ்தானின் நிலப்பகுதியில் அதிவேகமாக விண்கலன் தரை இறங்கியது. இந்த விண்கலனில் மென்மையாக இறங்கும் விசை இயக்கக் குழாய்கள் உள்ளன,

அது சீரற்றத் தன்மையை ஓரளவு குறைக்கும் ஒருவிதமான குஷன்களை கொண்டது. திரும்ப வந்து விடுவது நல்லது. 

புதிய காற்றை சுவாசிக்கவும், புதிய புல் வாசனையும் நுகர வேண்டும். பூமிக்கு திரும்புவது அற்புதமானது. உண்மை யிலேயே அதுவொரு அருமையான அனுபவம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)