இந்தியா இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் உண்மையா?

0
வானரங்கள் கூடி கட்டி முடித்ததாக ராமாயணத்தில் கூறப்படும், இந்தியா - இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் உண்மையா? இல்லையா? 
இந்தியா இலங்கையை இணைக்கும் ராமர் பாலம் உண்மையா?
அதை அழித்துவிட்டு சேது சமுத்திர திட்டத்தை நிறை வேற்றலாமா? கூடாதா?- இது உச்ச நீதிமன்ற த்தில் நிலுவையில் இருக்கும் நீண்ட கால வழக்கு. நாம் அதைப்பற்றி விவாதிக்கப்போவ தில்லை.

நமது கோணம் வேறு. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி குழுமமான டிஸ்கவரி சேனல் 

குழுமத்தி னுடைய சயின்ஸ் சேனல் (Science Channel) ட்விட்டரில் வெளி யிட்டுள்ள வீடியோ தொடர்பானது இந்தச் செய்தி.

பழம்பெரும் இந்துப் புராண ங்களில் குறிப்பிட ப்பட்டுள்ள இந்தியா - இலங்கை இடை யேயான கடற்பாலம் உண்மை யானதா? 

அறிவியல் கண்டு பிடிப்புகள் ஆம் என்கின்றன." (Are the ancient Hindu myths of a land bridge connecting India and Sri Lanka true? Scientific analysis suggests they are.”) என சயின்ஸ் சேனல் ட்வீட் செய்துள்ளது.
அந்த ட்வீட்டுடன் ஒரு முன்னோட்ட வீடியோவை சயின்ஸ் சேனல் வெளியிட்டது 

அதில், "செயற்கைக்கோள் ஒன்று இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆழமற்ற கடல்ப ரப்பின்மீது தன் பார்வையை குவிக்கிறது. 

அந்த செயற்கை க்கோள் அனுப்பிய புகைப்பட த்திலிருந்து இந்தியா - இலங்கை இடையே இந்தியப் பெருங்கடலில் 

 தொடர் சங்கிலிபோல் தோற்ற மளிக்கும் சில படிமங்கள் இருப்பதைக் காண முடிகிறது" என்று அறிவிக்க ப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து சில ஆராய்ச்சி யாளர்கள் தங்கள் கருத்து களை முன்வை க்கின்றனர். அவர்களில் ஓர் ஆராய்ச்சி யாளர், 

"இந்தியா - இலங்கை இடையே அமைந்துள்ள மணல் திட்டின் மேற்பரப்பில் ஆங்காங்கே சில பாறைகள் உள்ளன. 
மணல் பரப்பின் தன்மைக்கும் அந்த பாறைகளின் தன்மைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது" என்கிறார்.
மற்றுமொரு ஆராய்ச்சி யாளர், "இதை த்தான்.. மந்திரப் பாலம் என இந்து புராணப் பாடல்களில் குறிப்பிடப்ப ட்டுள்ளனர். கடவுள் ராமர் அமைத்த தாகக் குறிப்பிட்டு ள்ளனர்" எனக் கூறுகிறார்.

செல்ஸீ ரோஸ் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர், "அந்த மணல்தி ட்டின் மேல்ப ரப்பில் இருக்கும் பாறைகள் மணல்தி ட்டைவிட முந்தைய காலத்தில் உருவாகி யிருக்கிறது. 
மணல் திட்டு வெறும் 4,000 ஆண்டு களுக்கு முந்தையதே ஆனால் அந்தப் பாறைகள் 7000 ஆண்டு களுக்கு முந்தையது" எனப் பேசுகிறார்.

இந்த செய்தி பதிவிடப்பட்ட நேரத்தில் இந்த முன்னோட்ட வீடியோவை சுமார் 2,92,000 ஆயிரம் பேர் பார்த்து ள்ளனர்.

சயின்ஸ் சேனல் பகிர்ந்த ட்வீட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று வணங்கி ரீட்வீட் செய்திரு க்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)