அகமதா பாத்தில் 100 கோடி ரூபாய் சொத்தை விட்டு விட்டு இளைஞர் ஒருவர் சன்னியாசி யான சம்பவம் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
சன்னியாசி ஆன கோடீஸ்வர ஜெயின் இளைஞர் !
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் 22 வயதான மோகேஷ் ஷெத். சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் முடித் துள்ளார்.

இவரது குடும்பத்தினர் பனஸ்கந்தா மாவட்ட த்தை சேர்ந்த தீஸா நகரை பூர்விகமாக கொண் டிருந்தனர். 

ஆனால் தற்போது மும்பையில் வசித்து வருகின்றனர். இவர்கள் அலுமினியம் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். 

மோகேஷ் ஷெத் கடந்த 2 ஆண்டு களாக தங்களின் குடும்ப தொழிலை கவனித்து வந்தார். 
இந்நிலை யில் துறவறத்தில் ஆர்வம் கொண்ட அவர், இன்று காந்திநகரில் நடைபெற்ற விழாவில் ஜைன மத துறவி யானார்.

ஜைன மத துறவி யானதால் தனது குடும்பத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தையும் தனது லக்ஸரி வாழ்க்கை யையும் துறந்துள்ளார். 

இன்று முதல் மோகேஷ் ஷேத் கருண பிரேம்ஜி என்று அழைக்கப் படுவார் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

நேற்று தான் சூரத்தை சேர்ந்த வைரவியாபாரி ஒருவரின் 12 வயது மகள் பவ்யா ஷா துறவறம் பூண்டார். கடவுள் காட்டும் உண்மை வழியில் செல்வது மகிழ்ச்சி என அவர் கூறினார்.