கல்லீரல் கொழுப்பு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு?

0
கல்லீரல் நாம் சாப்பிடும் உணவில் கழிவு நச்சுக்களை வடிகட்டி, சத்தினை ரத்தத்திற்கு அனுப்புகிறது. இதனால் சரியான ஊட்டம் உடல் மொத்தத்திற்கும் கிடைத்து, நமக்கு சக்தியை தருகிறது.
ஆனால் அதிக கொழுப்பு மிக்க உணவுகளை உண்ணும் போது, அல்லது மது அருந்துவதால், தேவைக்கு அதிகமான கொழுப்பு கல்லீரல் செல்களில் தங்கி விடுகிறது. 
இதனால் கல்லீரலில் செயல்கள் குறைய நேரிடும். இந்த அதிகப் படி யான கொழுப்பு, கல்லீரலில் தங்கி விடுவதை தான் கொழுப்பு கல்லீரல் என்று கூறுவார்கள்.

கொழுப்பு கல்லீரல் உருவாக காரணம் :

பொதுவாக 40-60 வயதின ருக்கு இந்த கோளாறு அதிகம் காணப் படுகிறது என்று மருத்து வர்கள் கூறு கின்றனர். 

குடிப்பழக்கம், கொழுப்பு உணவு களை உண்ணுவது, உடல் பருமன், சர்க்கரை வியாதி, உடல் எடை குறைதல் ஆகிய வைகளும் கல்லீரல் கொழுப்பிற்கு காரணமாகும்

கொழுப்பு கல்லீரல் கோளாறு இரண்டு வகையில் உண்டாகும். 

ஒன்று மது சாரா கொழுப்பு கல்லீரல், மற்றொன்று மது சார்ந்த கொழுப்பு கல்லீரல் மது சாரா கொழுப்பு கல்லீர லில், உண்ணும் கொழுப்பு மிக்க உணவு களினால், கல்லீரலில் கொழுப்பு படியும்.
300 பெண்களை ஏமாற்றியவரை சிக்க வைத்த ஒரே புகார் !
மது சார்ந்த கொழுப்புக் கல்லீரலில் மது அருந்து வதால், கல்லீரல் பாதிப் படைகிறது. 

இதனால் கொழுப்புக் களை கல்லீர லால் ஜீரணிக்க முடியாமல் அங்கேயே தங்கி விடுகிறது.

சாப்பிட வேண்டிய உணவுகள் :

காய்கறிகள் :

கொழுப்பு குறைந்த உணவு களையே கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய காய்கறி களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நீர்சத்து அதிகம் உள்ள சுரைக் காய், பூசணிக் காய் ஆகியவை கொழுப்பின் தேவையை ஈடு கொடுக்கும் வகையில் சாப்பிட லாம். 

விட்டமின் சி நிறைந்த உணவு களை தேடிப் பிடித்து சாப்பி டுங்கள். கீரை வகைகள் மிக நல்லது.
புகைப் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
பழங்கள்:

எல்லா வகையான பழங் களில் தினமும் சாப்பிட வேண்டும். இவை கல்லீர லின் செயல் பாட்டினை தூண்டு கின்றன. அதே போல் இன்சுலின் சுரப்பி னையும் அதிகரி க்கச் செய்யும்.

பால் வகைகள் :

பால் மற்றும் பால் சார்ந்த உணவு களை எடுத்துக் கொள்ளலாம். தயிரினை தவிர்த்திடுங்கள். மோர் மிகவும் நல்லது.

பாலாடை நீக்கிய பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பசும் பாலில் கொழுப்பு குறைவாக உள்ளது. ஆகவே பசும் பாலினை உபயோ கப்படுத் துங்கள்.

முட்டையின் மஞ்சள் கருவினை நீக்கி, சாப்பிடலாம். மீன், கடல் உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஆனால் என்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
4 கி.மீ நடை, 2 கி.மீ சைக்கிளிங்... 87 வயதில் துறையூர் தாத்தா !
லெமன் டீ :

வெது வெதுப் பான நீரில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள்.

அல்லது பால் கலக்காத தேநீர் தயாரித்து, அதில் எலுமிச்சை சாறு தேன் கலந்து குடிக்க லாம்.

வினிகர் + நீர் :

வெது வெதுப்பான ஒரு டம்ளார் நீரில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடித்தால், கல்லீரல் நன்றாக வேலை செய்யும். கொழுப் புகள் கரையும்.
வெந்தய டீ குடிச்சா என்ன நன்மைகள் கிடைக்கும்?
க்ரீன் டீ :

கிரீன் டீ தயாரித்து, அதில் தேன் கலந்து குடித்தால், கல்லீ ரலில் ஏற்படும் வீக்க ங்கள் குறையும். கல்லீ ரலில் படியும் கொழு பினை க்ரீன் டீ கரைக் கிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள் :

மைதா மாவு, அரிசி மாவினால் செய்த உணவு களை தவிர்த் திடுங்கள். எண்ணெ யில் பொரித்த சிப்ஸ் வகை களை சாப்பிடக் கூடாது.

பீஸா, பிஸ்கட் வகைக ளையும் தொடக் கூடாது. மைதாவில் செய்த பிரட், கேக் மற்றும் பேக்கரி உணவு களை சாப்பிடக் கூடாது. 

இவற்றை எல்லாம் சாப்பிட தோன் றியது என்றால் என்றைக் காவது ஒரு நாள் சாப்பிட லாம்.

ஆனால் தினமும் இந்த கொழுப்பு நிறைந்த உணவு களை உட் கொண்டால், கல்லீரலே செயலி ழக்கும். ஆகவே நீங்கள் சாப்பிடும் உணவு முக்கியம்.

நோயற்ற வாழ்வு தான் உயரிய செல்வம். எந்த நோயும் வருமுன் காப்பது உத்தமம். அளவுக்கு அதிக மான கொழுப்பு நிறைந்த உணவுகள் கல்லீர லுக்கு கேடுதான் தரும்.
ஆண்களுக்கான குழந்தையின்மை பிரச்சனைகள் - ஆண்மைக் குறைபாடு !
நம் உடலின் மொத்த இயக்கங் களுக்கும் முக்கியமான சக்தியை கொடுப்பது கல்லீரல் தான்.

அதற்கு எது நல்லதோ அதனை உணர்ந்து கொடுத் திடுங்கள். நம்மை இறுதி வரை நன்றாக இயங்க வைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)