வக்கிரத்தின் உச்சம்... இந்த இளைஞர் செஞ்ச அருவருப்பான வேலை !

0
இந்த செல்போன் வந்தாலும் வந்தது, சில இளைஞர்கள் செய்ற காரியங்களை நினைத்தால் அதிர்ச்சியா கவும், அருவருப்பா கவும் தான் இருக்கிறது. 
வக்கிரத்தின் உச்சம்
இது போன்றவர் களின் செல்போனில் ஆபாசங்கள் பல ரூபங்களில் தாண்டவ மாடுகிறது. 

இதற்கு நாடு, நகரம் என்று வரையறை கிடையாது, உலகம் முழுவதுமே ஆபாசங்கள், விரசங்கள், 

கவர்ச்சிகளு க்கு அடிமையான வர்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கத்தான் செய்கிறார்கள். 

சிங்கப்பூரை சேர்ந்த ஒரு இளைஞர். அவர் பெயர் சிலரென்ஸ் டாங் ஜியா மிங். வயசு என்னவோ 26 தான். 

ஆனால் அவர் செய்திருக்கிற காரியங்களை நினைத்தால் குமட்டிக் கொண்டு தான் வருகிறது. 
இவர் கடந்த 2009-ம் ஆண்டு சம்மிபாய் ஃபோரம் என்ற குரூப்பில் சேர்ந்துள்ளார். 

அதோடு தனக்காக ஒரு அக்கவுண்ட்டை யும் ஓபன் செய்து கொண்டார்.
இந்த குரூப்பில் டாங் சேருவதற்கு காரணம், அதில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் எல்லாம் ஷேர் செய்யப்படும் என்பதால் தான். 

இன்னும் சொல்லப் போனால் இந்த குரூப் கிட்டத்தட்ட ஒரு ஆபாச தளம் போல தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

ரகசிய இடங்களில் காமிரா

அதில் ஒருவர் டாங்கிற்கு பழக்கமாகி உள்ளார். அப்போது, பெண்களை ரகசியமாக எப்படி யெல்லாம் போட்டோ, 

வீடியோ எடுக்கலாம் என்று டாங்கிற்கு சொல்லி கொடுத்துள்ளார். இந்த விஷயத்தில் டாங் விழுந்து விட்டார். 
இளைஞர் செஞ்ச அருவருப்பான வேலை
இதை யடுத்து 2014-ம் ஆண்டிலிருந்து இதே வேலையாக டாங் ஈடுபட்டார். 

அதாவது எங்கெல்லாம் பெண்கள் இவர் கண்ணில் படுகிறார்களோ உடனே காமிராவை ஆன் செய்து கொள்வது தான் இவர் வேலை. 

முக்கியமாக பெண்கள் துணி மாற்றும் பாத்ரூம்களில் இந்த ரகசிய காமராக்களை வைத்து விட்டு வந்து விடுவார். 

அது கூட ரொம்ப ஷார்ப்பாக காமிரா செட் செய்வாராம் டாங். பெண்களின் முகம், 

மற்றும் அந்தரங்க பகுதிகள் தெளிவாக தெரியும் ஆங்கிளில் தான் காமிராவை வைப்பாராம்.

ஷேர் செய்து விடுவார்
பெண்கள் பாத்ரூமி லிருந்து துணி மாற்றிக் கொண்டு சென்றவுடன், காமிராவை எடுத்து கொண்டு, 

வீடியோக்கள் தெளிவாக தெரிய என்னென்னவோ டெக்னாலஜியை பயன்படுத்தி, தான் இருக்கும் சம்மிபாய் ஃபோரம் குரூப்பில் உடனே ஷேர் செய்துவிடுவார். 

பள்ளி சிறுமிகளின் வீடியோவை கூட எடுத்துள்ளார் டாங். இந்த வீடியோக்கள் வைரலாக... 

அந்த தகவல் போலீசாரின் காதுகளுக்கு போக... பிறகு அந்த டாங்கின் ஆபாச குரூப்பை கண்டு பிடித்து விட்டார்கள்.

வீடியோக்கள்

அப்புறம் என்ன... டாங்கின் வீட்டை ரவுண்டு கட்டிவிட்டார்கள். வீட்டிற்குள் சென்று பார்த்தால் போலீசார் அதிர்ச்சி யடைந்து விட்டனர். 

வீடு முழுக்க ஒரே ஹார்ட் டிஸ்க், கேமராவில் பொருத்தும் எலக்டரிக்கல் பொருட்கள் தான் குவிந்திருந்தன. 
பாத்ரூம்களில் இந்த ரகசிய காமரா
இந்த அதிர்ச்சியி லிருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி போலீசாருக்கு காத்திருந்தது. 

அது என்ன வென்றால், ரகசிய காமிராவை பொருத்தி டாங், ஆபாசமாக பெண்களை எடுத்த வீடியோக்கள் எத்தனை தெரியுமா? மொத்தம் 2013 வீடியோக்கள். 

அத்தனையும் நடுத்தர, இளம் வயது பெண்கள் மற்றும் சிறுமிகள்.
மனசு பூரா குப்பை

இதைவிட கண்றாவி, தன் வீட்டுக்கு வரும் பெண் நண்பர்கள் கழிவறைக்கு சென்றாலும் அங்கேயும் டாங் வைத்திருந்த கேமராவுக்கு தப்ப முடியாது. 

நிறைய காமிரா வைத்தது காபி ஷாப்பில்தானாம். இவ்வளவும் செய்த டாங் தற்போது ஜாமீனில் உள்ளார். 

இது சம்பந்தமான வழக்கு அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு விசாரணை வரவுள்ளது.  
காமிரா வைத்தது காபி ஷாப்பில்தானாம்
அப்போதாவது இந்த டாங்கிற்கு ஜாமீன் கிடைக்காமல் தண்டனை கிடைத்தே தீர வேண்டும்! 

26 வயதிலேயே இப்படி குப்பை மாதிரி மனசை வைத்திருந்து, ஆபாசத்தில் ஊறி வளர்ந்தவன், 

இன்னும் 40 வயதை கடந்தால் இளம் தளிர்களின் நிலை என்னாகுமோ!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)