கருஞ்சீரகம் உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

கருஞ்சீரகத்தை நேரடியாக இல்லாமல் உணவுடன் சேர்த்து எடுக்கும் போது பாதுகாப்பானது. மருத்துவர் அனுமதியோடு எடுக்கும் போது எண்ணெயும், கருஞ்சீரக விதைதூளும் எடுத்து கொள்வது பாதுகாப்பானது.

கருஞ்சீரகம் உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

மூன்று மாதங்களுக்கு மேற்பட்டு நீண்ட காலம் பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பதை அறிய போதுமான ஆய்வுகள் இல்லை. வெகு அரிதாக சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கும். 

வயிறு வலி, வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும். இன்னும் சிலருக்கு வலிப்பு அபாயத்தை உண்டாக்கும். அதனால் உங்களுக்கு இது பாதிப்பை உண்டாக்குகிறதா என்பதை பரிசோதித்து பிறகு பயன்படுத்துவது நல்லது.

தேனில் ஊற வைத்த பூண்டின் நன்மைகள் !

​சருமத்தில் வெடிப்பை உண்டாக்கலாம்

கருஞ்சீரகம் உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

கருப்பு விதைகள் என்று சொல்லக்கூடிய கருஞ்சீரக விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல் சருமத்தில் பயன்படுத்தும் போது 

சரியான விதத்தில் சரியான முறையில் பயன்படுத்தும் போது அது பாதுகாப்பானது. இது சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். 

சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை வெடிப்புகளை ஏற்படுத்தும். இயற்கை பொருள்கள் சருமத்துக்கு நன்மை செய்யும் என்றாலும் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

​கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்

கருஞ்சீரகம் உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

கர்ப்ப காலத்தில் கருப்பு விதையான கருஞ்சீரகத்தை மசாலாக்களில் சேர்க்கும் போது அது பாதுகாப்பானதாக இருக்கிறது. 

அதே நேரம் இதை மருத்துவத்துக்காக என்று தனித்து பயன்படுத்தும் போது அது கருப்பை சுருக்கத்தை நிறுத்தும். இது பாதுகாப்பானதும் கிடையாது.

தாய்ப்பால் கொடுக்கும் போது கருஞ்சீரக விதைகளை எடுத்து கொள்வது பாதுகாப்பானதா என்பதற்கு போதுமான ஆய்வுகள் இல்லை. எனினும் பாதுகாப்பான பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது.

நமது மனநிலையை உயர்த்தும் சில பிரபலமான காபி வகைகள் !

கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. 

இது மட்டுமல்லாது, கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

​குழந்தைகளுக்கு கருஞ்சீரகம் நல்லதா?

குழந்தைகளுக்கு கருஞ்சீரகம் சேர்த்த உணவு பாதிப்பில்லை. ஆனால் இதை மருந்தாக கருஞ்சீரக விதையை பொடித்து, அல்லது இதன் எண்ணெயை சுயமாக நீண்ட நாட்களுக்கு கொடுக்க கூடாது.

​இரத்தப்போக்கு கோளாறுகள்

கருஞ்சீரகம் உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

கருஞ்சீரக விதைகள் இரத்த உறைதலை குறைத்து இரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்க கூடும் தன்மை கொண்டவை. அதிகப்படியான கருஞ்சீரக நுகர்வு இரத்தபோக்கு கோளாறுகளை மேலும் மோசமாக்கும்.

முஸ்லிம்கள் ஏன் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை தெரியுமா? 

​நீரிழிவு நோய்

கருஞ்சீரக விதைகள் சிலருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க செய்யும். நீரிழிவு இருப்பவர்கள் மருந்துகளோடு 

கருஞ்சீரக விதைகளை தொடர்ந்து எடுத்து கொள்ளும் போது அது திடீரென்று இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து விட செய்யும். 

நீரிழிவு இருப்பவர்கள் கருஞ்சீரக விதைகளை எடுக்கும் போது அவ்வபோது நீரிழிவு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

​குறை இரத்த அழுத்தம்

கருஞ்சீரகம் உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

கருஞ்சீரகம் இரத்த அழுத்தத்தை குறைக்க செய்யலாம். கருஞ்சீரக விதைகளை குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுக்கும் போது அது மேலும் குறை ரத்த அழுத்தத்தை உருவாக்க வாய்ப்புண்டு.

​அறுவை சிகிச்சை

கருஞ்சீரகம் உண்பதால் உண்டாகும் தீமைகள் என்ன?

கருஞ்சீரக விதைகள் இரத்தம் உறைதலை குறைக்கும். இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். சிலருக்கு தூக்கத்தை அதிகரிக்க செய்யும். 

கருஞ்சீரக விதைகள் இரத்தப் போக்குக்கான ஆபத்தை உண்டாக்கும். அறுவை சிகிச்சைக்கு பிறகு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். மயக்க மருந்துகளில் தலையிடக் கூடும்.

உங்கள் காம உணர்வை கட்டுப்படுத்துவது எப்படி?

கருஞ்சீரக விதைகள் உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்க செய்யும். இது கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும். 

அறுவை சிகிச்சை திட்ட மிட்டிருந்தால் அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே கருஞ்சீரக விதைகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.

Tags: